Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

அயோத்தி பிரச்சினையின் அடுத்த கட்ட முன்னேற்றத்தைத் தேர்தல் தடுக்குமென்று தோன்றுகிறது. கோவில் கட்டப் போவதாகப் பிரதமரே சொன்னது, எதிர்கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது. ” பரமஹன்சின் அஞ்சலிக் கூட்டத்தில் வேறென்ன பேசுவது” என்று பிரதமர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடாக்கண்டன் – கொடாக்கண்டன் கதையாக இந்தச் சிக்கல் இழுத்துக்கொண்டே போவதில் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம், அமைதிக்குத்தான் திண்டாட்டம்.

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே அயோத்தி சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என்றில்லாமல், அரசியல்வாதிகள் அடிக்கடித் தருகிற அறிக்கை வீண் விவாதங்களையும், ஐயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

நீண்டகாலமாய் நிலுவையிலிருக்கும் இந்த வழக்கை இந்துக்களும் இசுலாமியர்களும் மானப் பிரச்சினையாய் எடுத்துக் கொள்ளும்படி செய்ததில் மதவாத இயக்கங்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

நீதியின் அடிப்படையில் நேர்மையான நியாயமான முடிவை இந்த சிக்கலுக்குக் கொண்டுவர வேண்டிய கடமை இரு தரப்புக்குமே உள்ளது. அதுதான் இந்தியாவுக்கு நல்லது.

நம்பிக்கையுடன்
ஆசிரியர் – குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்