Home » Articles » படிப்போம் படிக்க வைப்போம்!!

 
படிப்போம் படிக்க வைப்போம்!!


ஜெயசித்ரா குமரேசன்
Author:

சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு

ஆழ்மனச்சக்தியை பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
ஜெயச்சித்ரா குமரேசன்

பக்கங்கள் ஆசிரியர்
112 சக்சஸ் ஜெயச்சந்திரன்
வெளியீடு விலை
தமிழ்நாடு வெற்றிகழகம், ஈரோடு .9. ரூ. 40

நூலின் ஆசிரியர் பற்றி….

33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியர். M.A. ( தமிழ் ). 58 ஆண்டுகள் ஆகியும் சுயமுன்னேற்றத்திற்கு ஆசிரியர். அனைவரது முன்னேற்றத்திற்கு ஏணியாக என்றும் இருப்பவர். கருப்பு நிறத்தில், காந்த கண்களைக் கொண்டு காண்போரைக் கவரும் இவரும் இன்னொரு ரஜினிதான். சுயமுன்னேற்றத் துறையில். சுறுசுறுப்பில் அரும்பு, கம்பீரப் பேச்சினில் கரும்பு, செயல்படும் செயல்களில் இரும்பு, என இருப்பதால்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் இந்த சபாரி அணிந்த மனிதனை. எனதுள்ளத்தில் இருப்பதை தெளிப்படுத்தியுள்ளேன். குடத்திலிருக்கும் இந்த விளக்கை ( சூரியனை ) எல்லோரும் அறிந்துகொள்ள………………………… Success.

நூலினைப் பற்றி………………

பனிரெண்டு அத்தியாங்களில், 112 பக்கங்களில் சாதாரண மனிதர்களும் சாதனையாளர் களாகிட உங்களிடமே மறைந்திருக்கும் மந்திர சக்தியை உங்களுக்கு உணரச் செய்கிறார் ஆசிரியர்.

மனம், உள்மனம், ஆழ்மனம், அறிவுமனம், உணர்ச்சி மனம் என்ற உண்மைகளை ஊருக்கு, உலகிற்கு அறியச் செய்கிறார் ஆசிரியர்.

1997ல் 10 ஆண்டுகளில் 1 கோடி சம்பாதிப்பது எப்படி? என்ற நூலினை உருவாக்கியவர், 5 ஆண்டுகள் கழித்து ஆழ்மனச்சக்தியின் அற்புத்த்தை அழகாக தொகுத்துள்ளார்.

நூலின் பல்வேறு பக்கங்களில் மந்திரவரிகளை அச்சு எழுத்துக்களாக அழுத்தமாக கோர்த்துள்ளார்.

இந்நூல் அறியாமையை விரட்டி, அறிவைத் திரட்டுவதற்காக எழுதப்படவில்லை, வறுமையை விரட்டி, வளமையைத் திரட்டுவதற்காக எழுத்ப் பட்டுள்ள தமிழாசிரியர் தமிழ் கற்றுத்தர வரவில்லை. பணம் சம்பாதிக்கக் கற்றுத் தருகிறார்.

ஒவ்வொரு மனிதனிடமும் சூரியனின் வெப்பத்தைப் போன்ற சக்தி உள்ளது. அதனை ஆழ்மனம் என்ற லென்ஸ் மூலம் செலுத்தும் போதுதான் சக்தி ( தீ ) உண்டாகிறது என்று எடுத்து உரைக்கப்பட்டிருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு. பாராட்டுக்கள் ஆசிரியருக்கு.

1.) ஆழ்மனச்சக்தியும், அற்புதமும்
கடின உழைப்பிற்கு ஈடு இணையில்லை – பழமொழி.

ஆழ்மனச் சக்திக்கும் ஈடுஇணையில்லை – புதுமொழி.

2.) ஆட்டோ சஜசன்
என்னால் முடியும் – 10 முறை சொல்லுங்கள்.

முடிக்கும் திறன் கிடைக்கும். இதுவே ஆட்டோசஜசன்

3.) மனச்சித்திரம் புரியும் மாயம்
எண்ணம் போல் வாழ்க்கை.

4.) நம்பிக்கை என்னும் மந்திரசக்தி
உங்களால் முடியும், என்று நீங்கள் நம்பினால்.

5.) முன்னேற்றத்திற்கு மூன்று எதிரிகள்
அவநம்பிக்கை, பயம், கவலை

6.) விசுவாசம் தரும் விசுவரூபம்
விசுவாசம் வீசுவரூபம் எடுக்கும்போது தான் அற்புதங்கள் நடைபெறும்.

7.) வெற்றி மேல் வெற்றி தரும் விசுவாசம்
முடிவு வெற்றி தான் என்ற எண்ணமே வெற்றியை தேடித்தரும்.

8.) பிரச்சனைகளும், தீர்வுகளும்
சாதனைப்பாதை மலர்ப்பாதையாக எப்போதும் இராது.

9.) குறிக்கோள்களை வரையறை செய்வீர்
பத்து ஆண்டுகளில் ஒரு கோடி சம்பாதிப்பேன்.

10.) வைராக்கியம் என்னும் மனோதிடம்
ஆசைப்படுபவர் ஆயிரம்! அடைய முயல் பலர் நூறு, அடைபவர் ஒருவரே.

11.) கனவு மாளிகை காட்டுவீர்
விழிப்புணர்வுடன் நம்பிக்கைக் கனவு காண்பீர்!

12.) வெற்றி மேல் வெற்றி பெருவீர்
சேர்ந்த செல்வத்தை பாதி அனுபவித்து, மீதியை சமுதாய நலனுக்குப் பகிர்ந்து பெருமையுடன் வாழுங்கள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….