Home » Articles » தாழ்வு மனப்பான்மை

 
தாழ்வு மனப்பான்மை


admin
Author:

Inferiority
ஜே. மணவழகன்
உளவியல் ஆலோசகர், ஆத்தூர்

சாதனையாளர்களாக ஆக வேண்டும் என்போரின் மிகப்பெரிய எதிரி இந்தத் தாழ்வு ” மனப்பான்மை ”. இதை முழுக்க, முழுக்க உருவாக்கி, உணவிட்டு, வளர்த்து அதனுடன் சண்டை போட்டு தோற்று நிற்ப வரும் தாழ்வு மனப்பான்மை உடையவர்தான்.

இதை எவ்வாறு உருவாக்குகிறோம்? நம்மைவிட சிறிது வேறுபாடு உடைய விஷயங்களை உடையவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து உருவாக்குகிறோம். இதற்கு உதாரணம், பெரும்பாலும் பெண்கள் தங்களை விட வெள்ளை நிறமுடைய பெண்களையோ, தங்களைவிட அதிக நகை உள்ள பெண்களையோ ஒப்பிடுவார்கள்.

ஆண்கள், ” நம்மகிட்ட சைக்கிள்தான் இருக்கு. அவன் மோட்டார் பைக் வச்சிருக்கான், அவன் நம்மை கண்டுக்கமாட்டான். அவனமாதிரி நாம இல்லை” என்பதும், ” அவன் பெரிய பணக்காரன். அவனிடம்தான் எல்லோரும் போயி தானாப் பேசுவாங்க. நம்மல ஒதுக்கிடுவாங்க” என்பதும், மாணவ, மாணவிகள் ” அவங்க இங்கிலீஷ் மீடியம், அவங்க டாக்டர், இன்ஜினியர் ஆக போகலாம் நம்மால முடியாது” ஆகிய இந்த ஒப்பீடு தாழ்வு மனப்பான்மை தோற்றுவிக்க ஒரு காரணம். அடுத்ததாக ” சொந்தத் தொழில் துவங்கி நட்டம் அடைந்துவிட்டேன். இனிமேல் என்னால் ஒரு போதும் சொந்தத் தொழில் நடத்தமுடியாது. வேலைக்குத் தான் எங்கியாவது போய் விட வேண்டும்” என்பது.

இதில் ஒரு இடத்தில் நடந்த தோல்வியினை எல்லா இடத்திற்கும் பொதுமைப்படுதிக்கொள்வது. இந்த நிலைகள் தாழ்வு மன்பான்மை வளர்ந்து, நம்மை சுற்றி வளைத்து, நமது எண்ணங்களை வீணாக்கி, எந்த புதுச் செயலையும் செய்யவிடாது தடுத்து விடும்.

தாழ்வு மனப்பான்மை நம்மை என்ன செய்கிறது? உங்களைப் பற்றி உங்களுக்கு தவறாகச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும். ” உனக்கு எதுக்குடா ரிஸ்க. ” நீ சும்மா இரு உன்னால இதல்லாம் ஆகாது” இவைதான் திருவாளர் தாழ்வு மனப்பான்மையின் போதனேகள்.

அடுத்தபடியாக, இருப்பதில் திருப்தி பட்டுக்க வேண்டியதுதான், புதிதாக ஏதாவது செய்து, ஏடாகூடமா ஆயிட்டா பெரிய அவமானம் என்ற நிலைக்கு கொண்டு செல்லும். இப்படியெல்லாம் வேலை செய்யவிட்டால் Inferiority – Superiority என்ற ஒரு முகத்திரையை பொட்டுக் கொண்டு, எனக்கு எல்லாம் தெரியும் ஆனா செய்யமாட்டேன் என்று கூறச் செய்யும்.

இதற்கு ஓர் உதாரணம், கணவன் மனைவிக்கு இடையே ஒரு விவாதமேற்பட்டுவிட்டால் மனைவி சொல்லும் தீர்வு சரியாக இருக்கும் பட்சத்தில், கணவன் சொல்லும் வார்த்தைகள் ” இவ்வளவு புத்திசாலித்தனம் என்னை கல்யாணம் செய்துகிட்டதால வந்துச்சி” என்பது அல்லது ” அதெல்லாம் எனக்குத் தெரியும் நான் சொல்றத மட்டும் நீ செய்” என்பதுதான்.

இந்தத் தாழ்வு மன்ப்பான்மை என்ற எதிர் மறை எண்ணம் தானாகக் கற்றுக் கொண்டது. உளவியலார் இது குழந்தைப் பருவம் முதல் ஆரம்பிக்கிறது என்று கருதுகிறார்கள். வளரும் சூழ்நிலை இதற்கு சாதகமாக அமையும் பட்சத்தில், தாழ்வு மன்ப்பான்மை ஒரு காங்க்ரீட் சுவரைப் போல இறுகி உறுதியடைகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே ஆணுக்கு அதிகமாகப் பெற்றோர் வழங்கும் சுதந்திரம், பெண் குழந்தைக்கு விதிக்கும் கட்டுபாடு தாழ்வு மனப்பான்மை தோன்றுவதற்கான விதைகளை ஊன்றிவிடும்.

பருவ வயதிலோ, அதற்குப் பிறகோ நண்பர்களிடமோ, ” தன்னம்பிக்கை ” போன்ற பல நல்ல நூல்களை படிப்பதாலோ, இந்த எதிர்மறை எண்ணத்தில் இருந்து அப்பெண் வெளியே வந்துவிட வாய்ப்பு கிடைத்து வெளியே வந்துவிட்டால் அப்பெண் இயல்பான வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் நடத்த முடியும். இல்லாவிட்டால் தனது வாழ்க்கையையும் சரியாக வாழ இயலாமல், தனது கணவர், குழந்தை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவ இயலாமல் போக வாய்ப்புண்டு.

இதைப்போலவே வெளியில் நடக்கும் பல விஷயங்கள் நண்பர் மற்றும் பிறருடன் ஒப்பீடு ( Comparison ) நேர்மறையாக செய்து கொள்ளுதல் வேண்டும்.

எனது நண்பர் ஏம்.ஏ படித்துள்ளார் நான் பத்தாம் வகுப்புதான் படித்துள்ளேன். எம்.ஏ படித்தால் அவர் நிறைய ஆங்கிலப் புத்தங்களை படிக்கிறார். நண்பர்களிடமோ, ஒரு கூட்டத்திலோ ஆங்கிலத்தில் பேசுவதோ பல்தரப்பட்ட விஷயங்கள் பேசுவதோ பல்தரப்பட்ட விஷயங்கள் பேசுவதோ சகஜமாக உள்ளது. என்னால் அவ்வாறு இருக்க என்ன செய்யலாம், வாய்ப்பு எப்படி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்தித்து அதற்கான வழியினை கண்டு பிடித்து அதை அடைய உழைக்க ஆரம்பிக்க வேண்டும்.

இதைவிட்டுவிட்டு அவன் அப்பா, அம்மா இரண்டு பேருமே டீச்சர், அவனப் படிக்க வச்சாங்க. எங்க அப்பா, அம்மா படிக்காதவங்க என்னப் படிக்க வைக்கல, நம்மால ஒண்ணும் முடியாதுன்னு நினைத்து விட்டுவிட்டால் நாளடைவில் உங்கள் நண்பர் மீது உள்ள இந்த எண்ணம் பொறமையாக மாறி வெறுப்புணர்வு வெளிப்பட்டு நீங்கள் பிரியக்கூடிய நிலை ஏற்படலாம்.

நம்மால் பெரிதும் மதிக்கத்தக்க நமது தேசியத் தலைவர்களும், பல உலகத்தலைவர்களும் இந்த தாழ்வு மனப்பான்மையினால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனை அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படித்துப் பார்த்தால் அறியலாம்.

இதைப்போலவே பல தொழில் அதிபர்களுக்கும் இந்த மனநிலை ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் இவர்களால் இதை எவ்வாறு வெற்றிகொண்டு வெளியே வர முடிந்தது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். அவர்கள் இந்த தாழ்வு மனப்பான்மையை ஓரளவிற்கு மேல் வளரவிடாமல் தடுத்துக் கொண்டனர். அவர்களது அனைத்து செயல்களுலும் இந்த தாழ்வு மனப்பான்மை தலையிட்டு விடாமல் பார்த்துக்கொண்டனர். எனவே தான், அவர்களால் உலகத்தில் நட்சத்திரங்களாக மின்ன முடிந்தது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சுவாமி விவேகானந்தரின் உலகப்புகழ்பெற்ற ” சிகாகோ உரை”. இந்த உலகப் பெரும் சர்வ சமய மகா சபையில் பேசுவதற்கு தனது முறை வரும் போதெல்லாம் அடுத்ததாகப் பேசுகிறேன், அடுத்ததாகப் பேசுகிறேன் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.

மாநாட்டினை நடத்துபவர் ” இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு. இம்முறை நீங்கள் பேசவில்லே எனில் இனி வாய்ப்பு கிடையாது” என்ற போதுதான், விவேகானந்தர் பேசுவதற்காக எழுந்தார். இவ்வளவு நேரம் பேசமுடியாது என்ற எதிர்மறை எண்ணத்துடன் பயத்துடன் இர்ந்தவர் தனது குருநாதர் பரமஹம்சரின் மீது நம்பிக்கை வைத்தும், சாரதா அன்னையினை பிரார்த்தித்துக் கொண்டு பேசமுடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வந்து ஆரம்பித்த வார்த்தைகள் ” அமெரிக்க நாட்டின் சகோதரர்களே, சகோதரிகளே” இந்த வார்த்தையின் விளைவு அமெரிக்க நாட்டினை மட்டுமல்ல உலகினையே உலுக்கி எழுப்பியது.

புரிந்துகொள்ளுங்கள் தாழ்வுமனப்பான்மை இல்லாத மனிதர்களை இல்லை என்றே கூடக் கூறலாம். ஆனால், இந்த எதிர்மறை மனநிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்தும், அதிலிருந்து மீண்டு வருவதும் தான் முக்கியம்.

தாழ்வு மனப்பான்மையில் இருந்து தப்பிக்க?

உங்களுக்குள்ள சிறப்பு விஷயங்களை வெளிக்கொண்டு வாருங்கள் ( உ.ம் ) நன்கு பாடுவது, விடுகதை சொல்வது, ஜோக் சொல்வது, etc.

உங்கள் மனதுக்கு தாழ்வு எனப்பட்டதை வெளியேற்றுங்கள் ( உ.ம். ஒரு கூட்டத்தில் எழுந்து பேசத்தயங்குவது ) இக்குறையை ஒரு தாளில் எழுதி அதை சுக்கு நூறாகக் கிழித்தெறியுங்கள்.

உங்களுக்கு மனதுக்கு அதிக கட்டுப்பாடு விதித்துக் கொள்ளாதீர்கள் ( இதனை மீறும் போது தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் )

உங்களை நீங்கள் நேசியுங்கள், பாராட்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் தவறு செய்யும்போது அதனை சுட்டிக்காட்டும் உங்கள் மனசாட்சியின் குரலை அலட்சியம் செய்யாதீர்கள்.

எப்பொழுத்மு பிறருடன் ஒப்பிடுதலை தவிருங்கள்.

தன்னம்பிக்கை அதிகமாகும்போது தாழ்வு மனப்பான்மை குறைந்து விடுகிறது. தன்னம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுங்கள். தன்னம்பிக்கை தரும் நூல்களை படியுங்கள், பயிலரங்குகளில் பங்கு கொள்ளுங்கள்.

 

1 Comment

  1. Inferiority complex is a disease

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….