Home » Articles » புதிய குழந்தை

 
புதிய குழந்தை


சாந்தாசிவம்
Author:

உங்களுக்காக திருமதி சாந்தாசிவம்

வாழ்விலேயே இனிய பருவம் இளமைப் பருவம்தான். அதை நாம் முதுமையில்தான் உணர்கிறோம். ஆரோக்கியம், அற்புதமானது என்பதையும் நோயுற்றபோதுதான் உணர்கிறோம்.

இளமையில் பெரியவர்களை மதிக்கும் மனிதனை முதுமையில் பலரும் பெரிதும் மதிப்பார்கள்.

பொறுமை, நிதான், அன்பு, பாசம், சகிப்புத் தன்மை, மரியாதை, அடக்கம்,ஒழுக்கம் , கடமைப் பண்பு, மனக்கட்டுப்பாடு, பெரியவர்களிடம் பயம் கலந்த ஒரு பக்தி இவை எதுவுமே இல்லாமல் இன்று வேகம், கோபம், அடங்காத பேராசை, பரபரப்பு, ஒப்புக்கான பேச்சு, பெரும் பாலும் தெரிந்தே பேசும் பொய், அதன் தொடர் கதையான நடிப்பு, தெரிந்தே செய்யும் தவறுகள், பண்பற்ற செயல், பேச்சு, எல்லாமே அவசரக் கோலம். இவை எல்லாமே அவசரக் கோலம். இவை எல்லாமே நம் சுயநலமென்ற தாய்க்குப் பிறந்த குழந்தையின் குணங்கள். இதனால்தான் பலரும் அவர்வர் தாய் தந்தையரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள்.

எல்லோருக்குமே வயது கடந்து முதுமையை அடைவோம் என்ற எண்ணமிருப்பதில்லை. அதற்குப் பதிலாக நிறைய கனவுகள் கொண்ட சிந்தனை வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டார்கள் பலரும் நமக்கு மரணமில்லை முதுமைப் பருவமில்லை என்ற முட்டாளாக்கும் முழுமையான கனவுத் தொழிற்சாலைக்குள் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தகதிக்கும் மீறிய கனவுகள், அதன் போராட்டங்கள், அதற்கு பெரியவர்கள் ஆலோசனை அல்லது தடை இவைகள் எல்லாம் ” ச்சே என்ன போராட்டம், இவர்களை முதலில் வெளியே அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும்” என்று கணவன் மனைவி இவருக்குமே அடிக்கடி அசரீரிகாதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்து அதை செயல்படுத்தவும் முனைகிறார்கள்.

பல் இல்லை அதற்கு இசையாக உணவு, அதுவேண்டும் இதுவேண்டும் என்ற நச்சரிப்பு, நடக்க முடியவில்லை வாக்கிங் ஸ்டிக் வேண்டும் என்ற தொந்திரவு, கண் தெரியவில்லை. தன்னுணர்வு இல்லாமலோ, இயலாமையாலோ போய்விடும் டாய்லெட் பிரச்சனை – இதைத்தான் பலருக்கும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

‘ வீட்டில இருக்கிறதா? இல்லை சாவதா!” என்கிற அளவுக்கு வெறுப்புணர்வு நீண்டு வளர்கிறது. சகிப்புத் தன்மையும், நாம் குழந்தையாயிருக்கும் போது இப்படித்தானே இருந்திருக்கிறோம் எப்படியெல்லாம் பொறுமையும், பாசமும் கொஞ்சலுமாக வளர்த்தார்கள் என்பதை யோசிக்க மறந்து, வறண்ட நிலை, தள்ளாடித் தடுமாறு நிலையில், எங்கே விழுந்து கை காலை சேதப்படுத்திக் கொண்டுவிடுவார்களோ என்பத்ற்கு பதில் செலவு வைத்து அலைய வைத்து விடுவார்களோ என்ற பயமே பலருக்கும் முதியோர் இல்லத்திற்கு பெற்றோரை அனுப்ப முடிவெடிக்க வைக்கிறது.

இளைய தலைமுறைக்கு, நம் தாய் தந்தையர் மீண்டும் ஒரு குழந்தையாகி நாம் பாரமரித்து பணிவிடை செய்யும் ஒரு வாய்ப்பை நமக்கு தந்தவராகிறார்கள். நாமும் இந்த நிலையை வருங்காலத்தில் நிச்சயம் அடைவோம். நம் மகன், மகளுக்கு நம்மை பராமரிக்கும் வாய்ப்பை தந்தவராவோம். மீண்டும் குழந்தையின் உடல் தசைகளின் மென்மை எழுந்து நடக்க முடியாத அதேநிலைதான் முதுமையிலும்.

கண் பார்வையிலும் கருப்பு வெள்ளை மட்டுமே ஆரம்ப நிலையில் தெரியும். அதுவும் மங்கலாக. வயதானவர்களுக்கும் இதே நிலை.

குழந்தைக்கு ஓரளவு முடி இருந்தாலும் பிறந்த முடி கொட்டும் இல்லை முடி இல்லாமல் கொஞ்சமே இருக்கும். முதியவர்களுக்கும் தலை வழுக்கையாகும்.

இருவருக்கும் திரவ உணவு. பற்கள் இல்லாலதால் பேச்சி புரியாது. சற்றே மாதங்கள் கடந்து நடக்க ஆரம்பிக்கும் முன் தாழ்ந்தும் ஊர்ந்தும் செல்லும் நிலை. பல பெரியவர்களுக்கும் இந்த பரிதாபநிலை.

ஒன்பது பத்து மாதமானதும் நடைவண்டி. வயதான பெரியவர்களுக்கோ வாக்கிங் ஸ்டிக் ஒன்றும் அதிகம் வித்தியாசமில்லை. சிலசமயம் நம்மைத்தேடும் அன்பு, பல தடவை பேரன் பேத்திகளின் கைகளை ஆதரவுக்கும், ஏக்கத்திற்கும் தூக்கத்திற்கும் துணையாக தேடும்.

நம் பெற்றோருக்கு நாம் குழந்தையாக இருந்து, பின் வளர்ந்து விட்ட அவர்களை நமக்கு குழந்தையாக கிடைக்கு அருமையான அமைபெபொல்லாம் மனித இனத்திற்கு மட்டுமே. அதுவும் நம் நாட்டில் இது நலிந்து மெலிந்து கொண்டேபோகும் விஷயமாக அவமானமானது. அசிங்கமானதும்.

ஒரு வீட்டில் எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது. பணிவிடை செய்வதில் பாகுபாடு பார்க்காமல் மனம் பக்குவப்பட்ட நிலையில் செய்யுங்கள். ” எனக்கு மட்டும் தலையெழுத்தா!” என்று எண்ணாமல் முதியவர்களின் உணர்வுகளை புரிந்து பரிவாகப் பேசி பண்புள்ளவராக நடப்பதே நமது கடமையும் ஆகும். நாமும் இந்த நிலையை அடைவோம் என்ற இயற்கையின் புரதலைப் புரிந்து பரிவாகப் பேசி பண்புள்ளவராக நடப்பதே நமது கடமையும் ஆகும். நாமும் இந்த நிலையை அடைவோம் என்ற இயற்கையின் புரிதலைப் புரிந்து, மீண்டும் குழந்தையாவோம் என்றும் ஆன ந்ம பெற்றோரை பண்போடு அன்போடும் அணுசரித்து இனியாவது நடக்க முயலுவோமே!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment