Home » Articles » உறவுகள்…. உணர்வுக்ள்….

 
உறவுகள்…. உணர்வுக்ள்….


செலின் சி.ஆர்
Author:

சி.ஆர். செலின் மனநல ஆலோசகர், சென்னை

தன்னுடைய பொருளாதார நிலையில் திருப்பதியடையாதவன் படிப்படியாக அதிருப்தியின் உச்சத்தை அடைகிறான். அதன் அடுத்த கட்டம்தான் தன்னைவிட உயர்ந்த நிலையிலிருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது. அந்தப் பொறாமை வயிற்றெரிச்சலைக் கூட்டக்கூட்ட அவனிடமிருக்கும் பொருளை நாம் அபகரித்தா லென்னா என்ற எண்ணம் இயல்பாகத் தோன்றிவிடுகிறது.

” நம்மகிட்ட இல்ல அவன்கிட்ட இருக்கு அவன்தான் பரம்பரை பணக்காரனாச்சே, கெஞ்சம் பணம் கரைஞ்சா குறைஞ்சா போய்விடுவான்……” என்று தனக்குத்தானே சமாதானம் கற்பித்துக்கொண்டு துணிந்து திருடத் துவங்குகிறான். கொஞ்ச நாளில் யாருக்கும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் பொருளுக்காகவும், பணத்திற்காகவும் அடுத்தவரின் உயரைப் பறிக்கக்கூட தயங்குவதில்லை. அந்தளவிற்கு கொடூரமானவனாகி விடுகிறான்.

இவ்வளவிற்கும் அடிப்படைக்காரணம் ‘ அதிருப்தி ‘ என்ற அந்த சிறிய, நாம் மிகவும் சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிடும் அற்ப விஷயம்தான். அந்த விஷ விதையின் வீரியத்தை உணர்ந்து ஒதுக்காமல், அதற்கு இடம் கொடுத்து விடுவதால் தான் பல குடும்பங்கள் நிம்மதியின்றித் தவிக்கின்றன.

” பொழுது விடிந்து, பொழுது போனா அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடறதே வேலையாப்போச்சு. கடைவீதிக்குப்போனா ஒவ்வொரு பொருளையா ஆசையா கையில் எடுத்துப் பார்க்கிறதோட சரி. விலையைப் பார்த்தாதான் தலைசுத்துதே. அப்படியே எடுத்த இடத்துல வெச்சுட்டு, அதை வாங்கிட்டுப் போறவங்களை ஏக்கமா பார்த்துட்டு வரவேண்டியதுதான் ம்…… அவங்க எல்லாம் கொடுத்துவெச்ச மகராசிங்க….. ” நடுத்தரக் குடும்பங்களில் அடிக்கடியும், உயர்நடுத்தவர்க்க குடும்பங்களில் அவ்வப்போதும் இந்த டயலாக் ஏற்ற இறக்கங்களோடு ஒலிக்கும்.

” என்னங்க வெறும் நானூறு ரூபாய்க்கு புடவை எடுத்துட்டு வந்திருக்கீங்களே. வருஷத்துக்கு ஒருநாள் தீபாவளி வருது, எதிர் போர்ஷன் உமா ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கா. எந்த முகத்தை வெச்சுட்டு அவ விட்டுக்கு போவேன். கொண்டாட்டமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்…. ” மூச்சுவிடாமல் பேசி விட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொள்வாள்.

அடுத்தமுறை நிறைய பணம் கொடுத்து வாங்கிய புடவையை மனைவியின் கண்முன் நீட்டுவான், அவள் முகம் மலர்வாள் என்ற எதிர்பார்ப்போடு. ” இவ்வளவு பணம் கொடுத்து என்ன பிரயோஜனம் இதைவிட இருநூறு ரூபா கம்மிதான். ஆனா, காஸ்ட்லி புடவை மாதிரி மின்னுதே அந்தக் கலரும், பார்டரும், இதென்னவோ, டல்லா என்னையும் பாரு, என் கலரையும் பாரு, என் கலரையும் பாருன்னு தூங்கி வழியுது…. ” உதடு பிதுக்குவாள்.

ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் கதை தானே இது. நம் மனம் எப்போதுமே அடுத்த வீட்டையே மேய்ந்து கொண்டிருப்பதுதானே இதற்குக் காரணம். என்னுடையதைவிட அவளுடைய புடவை அழகா இருக்கு, அவனை விட எனக்கு குறைந்த சம்பளம், அவன் ஆபிசுல பைக் கொடுத்திருக்காங்க, எனக்கு சைக்கிள்கூட இல்ல. இப்படி எப்போதும் அடுத்தவரை மையமாக வைத்தே நாம் எடை போடுவதால் தானே இந்த அதிருப்தி தலைகாட்டுகிறது?

நீங்கள் நீங்கள்தான், பக்கத்துவீட்டுக்காராக உருமாற முடியாது. அப்படியிருக்க சாத்தியப் படாத விஷயத்தையே நினைத்து உங்களை மற்ற வருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் என்ன பலனிருக்கிறது.”ம்… என்புடவை ஒரு விதத்துல அழகு உங்களது இன்னொரு விதம் உங்க கலருக்கு நிச்சயமா இதை விட பொருத்தமான காம்பினேஷன் கிடைக்காது” எனச் சொல்லிப்பாருங்கள். உங்கள் தோழி முகத்திலும் புன்னகை அரும்பும் உங்கள் மனமும் திருப்தியில் பொங்கி வழியும். ஒப்பிடல்… என்ற மனநிலை ஒதுக்கி வைத்தாலே அதிருப்தி காணாமல் போய்விடும்.

”சரி நியாயமான காரணங்களுக்காகக்கூட அதிருப்தி அடையக் கூடாதா? எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் மாசக் கடைசியில் உதைக்குதே, அப்ப புலம்பாம என்ன செய்ய முடியும்? இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் அதிகமா கொடுத்தா நான் ஏன் புலம்பாம என்ன செய்ய முடியும்? இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் அதிகமா கொடுத்தா நான் ஏன் புலம்பப்போறேன்…..”’ இது உங்கள் குமுறல் என்றால் இந்த ஸ்டேட் மெண்ட்டை டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்று மாதமோ, ஆறு மாதமோ கழித்து நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார நிலையை எட்டுவீர்கள். அந்த மாத இறுதியில் நீங்கள் மாத இறுதியில் நீங்கள் திருப்பதியாக, ” ம்… இப்ப நிம்மதியாயிருக்கு. இது நீடிச்சாபோதும்….” என்று நினைத்தால், உங்கள் புலம்பல்களுக்கான காரணம் நியாயம் தான். ஆனால், அந்த விருப்பம் நிறைவேறிய பிறகு இன்னும்கூட இருந்தா…. என்று இழுத்தீர்களானால்… ம் ஹீம் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது உங்கள் மன நிலையத்தான்.

எப்படி மாற்றிக் கொள்வது?

” எப்படியாவது படிச்சு முடிக்க ஒருவழி கிடைச்சா போதும் சார்….” என்று என்று கெஞ்சிய அந்த இளைஞனை கண்முன்னே கொண்டு வாருங்கள். படித்து முடிக்க முடியுமா? என்று கூட தெரியாத, நம்பிக்கையில்லாத நிலையிலிருந்தோம். இன்று யார் யாருடைய உதவியாலோ கல்லூரிப் படிப்பை முடித்து விட்டோம்… என்று ஒரே ஒரு நொடி அவன் நினைத்துப் பார்த்திருக்க முடியாதா?

நாம் ஆசைப்படும் வேலை உடனடியாகவா கிடைத்துவிடும்!

எத்தனையோபேர் வழிதெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இந்தப் பொருட்களை விற்கும் வேலையாவது கிடைத்ததே, திருடாமல் பிச்சையெடுக்காமல் கௌரவமாய் சாப்பிட ஒருவழி கிடைத்ததே…. என தனக்குக் கிடைத்த வாய்ப்பை நினைத்து திருப்தியடைந்திருக்கக் கூடாதா?

” சொல்றதுக்கு வேலை ஈசியா இருக்கும் செய்றது கஷ்டங்க” முணுமுணுக்காதீர்கள்?

செய்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அத்தகைய மனநிலையுடன், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சென்னை சாலைகளில், முதுகிலும் கழுத்திலும் பொம்மைகளைத் தொங்க வைத்துக் கொண்டு, ” க்யூட்டெடிபேர்மேம் வாங்கிக்கலாமே…” என நம்முன் சடாரென நீட்டும் இளைஞர்களைப் பாருங்கள். அவர்கள் கண்களில் திருப்தியும், நம்பிக்கையும் சுடர் விடும்.

” சே, இப்படி திடீர்னு பொம்மையை நீட்டி பயமுறுத்தறானே… ” என எர்ச்சலாய் திரும்பும் நம் கோபம்கூட பனி போல் கரைந்துவிடும், அவர்கள் கண்களில் மின்னும் அந்த திருப்தியையும், நம்பிக்கையையும் பார்த்து.

” வாழ்க்கையில் அப்ப அதிருப்தியே வராதா? அது என்ன நம்ம கையில் இருக்கா? ஏதாவது ஒரு பொழுதாவது சே, என்ன லைஃப்ப இதுன்னு ஒரு சலிப்பு வரத்தானே செய்யுது”.

ஆம். சரிதான் சதா சர்வ காலமும் திருப்தியாக, புன்னகையோடு வாழ்வது என்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம் சாமான்யர்களுக்கு அது எட்டாக்கனிதான். ஆனால், ஒரு நாளின் இருபத்துநான்கு மணி நேரத்தில் ஒரு ஐந்து நிமிட் ஒதுக்கி இருப்போதிருக்கும் நிலையை நினைத்து திருப்திப்பட்டுப் பார்ங்கள் உங்கள் மனநிலையே தலை கீழாய் மாறிவிடும்.

ஐந்து நிமிட திருப்தி, உங்களுக்கு உற்சாகடானிக்காய் அமையும். மிச்சமிருக்கும் சூழ்ந்த கிடக்கும் அதிருப்திக் குப்பைகை அள்ளிப் போட முடிவிட்டாலும், கொஞ்சம் தள்ளிப் போட இந்த டானிக் உதவும். இதை ஒரு பயிற்சியாய் செய்தால், கொஞ்சம் கொஞ்சமாக நம் இயல்பாகவே மாறிவிடுமே.

நம்மில் நிறையப் பேருக்கு, ‘அதிருப்தி’ மனநிலையுடன் இருப்பது எப்படி ஒரு பொழுது போக்காக, பலசமயங்களில் தவிர்க்க முடியாத ஒரு போதையாக ஆகிவிடுகிறதோ அதேபோல் நாம் பயிற்சி செய்யச் செய்ய இந்த திருப்தியும் நம் மனதிற்குள் ஊடுருவி பதிந்துவிடும்.

நூறு இருநூறு ஆடைகளைப் பார்த்து, கலைத்து, கடைக்காரரை களைப்படையச் செய்து, ஒன்றே ஒன்றை எடுத்து வந்திருப்போம். வீட்டிற்குள் வந்தவுட்ன் பிரித்துப் பார்த்து ” சே, இதைவிட அந்த கீரின் அன்டு பிங்க் நல்லாயிருந்ததே…” என கன்னத்தில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். இதற்குப் பதில் அதை, அதற்கு பதில் இன்னொன்றை என மனம் சங்கலித் தொடராய் ரயில்வண்டி போல் போய்க் கொண்டிருக்கும். கடைசியில் நாம் எடுத்து வந்ததை விட மற்ற அனைத்தும் நன்றாயிருந்ததைப் போல் தோன்றும். இரண்டு மூன்று வாரங்களாவது மனதை அரித்துக் கொண்டேயிருக்கும் இந்தப் பிரச்சனை.

” ஏய் இந்த டிரஸ் சூப்பராயிருக்குப்பா” என யாராவது சொன்னால்தான் கொஞ்சம் அறுதலடையும் இல்லையா? இது ஒரு சின்ன உதராணம்தான். இதே போல் தினம் தினம், நொடிக்கு நொடி நாம் இருப்பதை வைத்து திருப்பியடையாமலேயே வேறு ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கிக்கொண்டேதானிருக்கும். அதனால்தான் இந்த மனநிலைக்கு நாம் addict ஆகிவிட்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

போதைப் பொருட்களானாலும், பழக்க வழக்கங்களானாலும் பழகப் பழகத்தானே அதற்கு நாம் அடிமையாகிறோம். எதிர்மறை குணங்கள் கொஞ்சம் எளிதாக, சீக்கிரமாக நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். Positive குணங்களை கொஞ்சம் போராடித்தான், பக்கத்தில் வர் வழைத்துக் கொள்ளவேண்டும்.

உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சியில் கொஞ்சம் எடுத்து, பிரயத்தனப்பட்டு எனக்கு குறையொன்றுமில்லை நல்ல நிலையில்தான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். முகம் சுளிக்காமல் கவலை ரோகைகள் படர்ந்திருக்காமல், உங்களைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும். நம்பிக்கையும் தொன்றுக் கொள்ளுமளவிற்கு மாறவிடுவீர்கள்.

சொல்வதெல்லாம் சரிதான். இதுவே போதும் இன்னு என்னவேணும்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்தால் எப்படி சாதிக்க முடியும்? மூணுவேளை சாப்பாடு கிடைச்சா மட்டும் போதும்னு அதிலேயே திருப்பதிபட்டிருந்தா எந்த சாதனயாளர்ம் உருவாகியிருக்கமாட்டார்கள். இருப்பதே போதும்னு திருப்தியாயிருந்திருந்தா மின்சாரம் கண்டுபிடிச்சிருக்க முடியுமா….? அதிருப்திதானே நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சாதனையாளர்களாக்குவது?

இதைப்பற்றியும் பேசுவோ அடுத்த இதழில்……

( தொடரும்…..)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….