Home » Articles » பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்

 
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்


புருஷோத்தமன்
Author:

தொழிற்சங்கங்கள் எப்பவுமே பலம் பொருந்திய இயக்கங்களா இருந்து வந்திருக்கு. கோரல் மில் வேலைநிறுத்தத்திலே வ.உ.சி. காட்டிய வழியிலே உரிமைகள் எல்லாம் திரும்பக் கிடைச்சுது. தொழிலாளர்களுக்கான சட்டங்களோ நியதிகளோ இல்லாத வேலைகளிலே விழிப்புணர்வை ஏற்படுத்தறதிலே தொழிற்சங்கங்களோட பங்கு பெரிய பங்கு.

நான் பொதுவாச் சொல்றேன். சமீபத்திலே நடந்த அரசு ஊழியர் போராட்டத்துலே கூட தொழிற்சங்கங்கள் தான் முக்கியப்பங்குவகித்தன.

அரசு கண்டிப்பா இருந்ததாலே போராட்டம் கட்டுக்கொப்பா தொடர முடியலை. இந்த நேரம் தான், எதையும் மறுபரிசீலனை செய்ய சரியான நேரம். நான் பொதுவாச் சொல்றேன், தொழிற்சங்கம் என்பது உழைக்கும் சக்தி உள்ளவங்களோட சங்கமம்.

அந்த ஆற்றலை, உரிமைகள் கேட்கப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறது அவசியம்தான். அதே நேரம், அந்த சக்கதியை மனிதவள மேம்பாடு அப்படீங்கிற ஆக்கபுர்வமான விஷயத்துக்கும் தொழிற்சங்கங்கள் இன்னும் நல்லாப் பயன்படுத்தலாம்.

நேர நிர்வாகம், அன்றாடப் பணிகளைத் திட்டமிடுதல், இலக்குகளை நிர்ணயித்து எட்டுதல் அப்படீன்னு எத்தனையோ பயிற்சிகளையும், சிந்தனைப் பட்டறைகளையும் தொழிற்சங்கம் தொடர்ந்து நடத்தலாம்.

நான் பொதுவாச் சொல்றேன், செயல் திறமை அதிகரிக்கற போதுதான் மனுஷனுக்கு வாழ்க்கை பற்றிய நம்பிக்கையும் அதிகரிக்கும். அது கொடுக்கற பலம்தான் ஆயிரம் யானை பலம்.

வெற்றிபெற்ற பலருடைய வரலாற்றிலிருந்தும் நமக்கு என்ன தெரியும்? தொழிலாளரா இருந்து, தங்களுடைய தொழில் ஆர்வம், திறமை , ஆற்ற்ல் அத்தனையும் வளர வழி செய்துகிட்டவங்கதான் பெரிய தொழில் முனைவோர்களாகவும், சாதனையாளர்களாகவும் வளர்ந்திருக்காங்க.

உண்மையா சொல்லணும்னா, இன்னைக்கு இருக்கிற சுழ்நிலைலே யாரும் யாரையும் காப்பாத்த முடியாது. ஒவ்வொருத்தரும் தங்களைத் தாங்களே காப்பாத்திக்கிட்டா தான் உண்டு. கவனத்தை சிதறவிடாம, தன் திறமைகளை எப்படியெல்லாம் வளர்த்துக்கலாம்னு ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு வளரணும்.

தகுதிகளை அதிகப்படுத்திக்கறதுதான், போட்டிகள் நிறைந்த உலகத்துலே போராடி ஜெயிக்கறதுக்கு கேட்டு வாங்கற முக்கியக் கடமை இருக்கு. அதையு தாண்டி தனிமனித ஆற்றலை மேம்படுத்தறதுக்கான அத்தனை அடிப்படை சக்திகளும் தொடர்புகளும் இருக்கு.

அதையும் தொழிற்சங்கங்கள் தங்கள் செயல் திட்டங்களிலே சேர்த்துக்கணும்னு தோழமையோட கேட்டுக்கறேனுங்க!

தொழிற்சங்கங்கள் காட்டும் முன்னேற்றப்பாடங்கள்! அவைதான் மனிதவள மேம்பாட்டுக் பாடங்கள்!!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….