Home » Articles » படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9

 
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9


இரத்தினசாமி ஆ
Author:

– பேரா.ஆ. இரத்தினசாமி
( நினைவாற்றல் தன்னாற்றல் மேம்பாட்டுப் பயிற்சியாளர், மாணவர் ஆலோசகர், ஈரோடு)

எப்படி வேண்டுமென்றாலும் படிக்கலாம்’ என்ற நிலைமாறி, ‘ இப்படித்தான் படிக்கவேண்டும்’ என்ற சில முறைகளை மேற்கொண்டால் படித்தல் முலம் கற்றல் எளிதாகும்.

நாம் படிப்பவை மூளையில் நன்கு பதிவதற்கு நாம் படிக்கும் முறைகளும் முக்கியமானவை. பார்ப்பவை நம் மூளையில் பதிவதற்கு கண்கள் முக்கிய மானவை. கண்கள் பதிவதற்கு இடையூறு ஏற்படாமல் படிப்பதற்கும், கவனம் சிதறாமல் மனம் ஒரு நிலையில் இருப்பதற்கும் நாம் சில முறைகளை மேற்கொண்டும். வேண்டாத சி பழக்கங்களைத் தவிர்க்கவும் வேண்டும்.

படிக்கும் போது தவிர்க்க வேண்டியவை
1. உடலை முறுக்குவது (Body twist )
2. உடலைத் தேய்ப்பது ( Body rub ).
3. உடலை அசைப்பது ( Body shake ).
4. உதடுகளை அசைத்து உரக்கப் படித்தல் ( Loud reading ).
5. உதடுகளை அசைக்காமல் ஓசையை ஏற்படுத்திப் படித்தல் ( Mumbling ).

இவைகளால் நம் கவனம் சிதைவுறும், மேலும் தசை இயக்கச் சக்தியும், பிராண சக்தியும் வீணாகிறது. விரைவில் உடலும், மூளையும் சக்தி இழக்கும் நிலை. உடல் அசைவால் கண்கள் எழுத்துக்களின் மேல் பதியும் நேரம் அதிகமாவதுடன் கண்கள் விரைவில் சோர்வடையும்.

கவனச் சிதறல்களை எதிர்நோக்கியுள்ள மனம்

படிக்கும் போது / கற்கும்போது மனதை ஒருநிலைப்படுத்தி அதில் முழுமையாக ஈடுபடச் செய்ய நாம் வழிவகைகள் செய்தாலும், ” இவன் எப்படா ஏமாறுவான் நாம் வெளியே செல்ல எதுடா வழி’ய என்று மனம் எதிர்பார்த்து இருக்கும். அதற்கு உறுதுணை செய்வது போல் மேற்சொன்னவாறு நடந்தால் ‘ அப்படா, ஒடிவிடலாம்’ என்று ஒடிவிடும்.

உதாரணமாக, நாம் படிக்கும்போது கொசு ஒன்று நம்மைக் கடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ‘ பாவம் கொசு. பசியோடு இருக்கிறது சிறிது இரத்தத்தை உறிஞ்சிவிட்டுப் போகட்டும்’ என்றா இருப்போம். ஒங்கி அதன் மேல் ஒரு அடி வைப்போம் அல்லவா. கொசு கடித்த வலி, அதை அடித்ததால் வலி. மனம் இப்போது கொசு கடித்த இடத்திற்கும் ஒடிவிடும்.

சிலர் படிக்கும்போது கை, கால்களை ஆட்டிக்கொண்டோ உடலைத் தேய்த்துக் கொண்டோ அல்லது முறுக்கிக்கொண்டே படிப்பார்கள். இதன் மூலம் சக்தி விரயமாவதுடன், கண் பதிவில் இருக்க வேண்டிய மனம் வெளியேறிச்செல்ல நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவோம்.

சிலர் நட்ந்துகொண்டு படிப்பார்கள். இதுவும் தவறு. உட்கார்ந்து படிக்கும்போது நமது கண்கள் சரியான அளவில், சரியான தூரத்தில் எழுத்துக்களின் மேல் பதிகிறது. நாம் நடக்கும் போது உடல் அசையும். மேடு பள்ளங்களில் கால் வைக்கும் போது கண்களுக்கும், எழுத்துகளுக்கும் உள்ள இடைவெளி மாறும். இதனால் விழித்திரையில் பதிவு அடிக்கடி மாறும். கண்கள் சோர்வடையும். மனமும் எளிதாக வெளியேறும்.

தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து படித்தால் எனக்கு தூக்கம் வருகிறது. அதைப் போக்கத்தான் நடந்து கொண்டே படிக்கிறேன்! என்பர் சிலர்.

( படிக்கும் போது தூக்கம் ஏன் வருகிறது? அதை எப்படிப் போக்குவது என்பதைப் பற்றி கண் பயிற்சிகளில் பார்ப்போம்)

நடந்துகொண்டே படித்ததைச் சொல்லிப் பார்க்கலாம். அது நிரந்தர நினைவாற்றலுக்கு வழி வகுக்கும்.

சிலர் படுத்துக்கொண்டே படிப்பார்கள். இது மிகவும் தவறு. படிக்கும் இடம், படுக்கும் இடம், சாப்பிடும் இடம் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு இடத்தை அமைத்துக் கொள்கிறோம். படுக்கையில் படுத்தவுடன் மூளைக்குச் செய்திகள் அனுப்பப் படுகின்றன. உடல் தளர்வான நிலைக்கு, உறக்க நிலைக்கு தயாராகிவிட்டது என்ற செய்தி மூளைக்கு கிடைத்தவுடன், அது உடலின் அனைத்து அவயங்களுக்கும் செய்திகளை அனுப்புகிறது. ‘ உடலின் எல்லா உறுப்புகளும் ஒய்வு நிலைக்குச் செல்க’ என்ற மூளையின் உத்தரவைப் பெற்றவுடன் உடல் உறுப்புகள் ஒய்வு நிலைக்குச் செல்கின்றன. கண்களின் இமைகள் மூடுகின்றன. கைகளிலிருந்து புத்தகம் நழுவி கீழே விழுகிறது. சீரான, ஆழ்ந்த மூச்சு, நித்தரா தேவியின் அரவணைப்பிற்கு ஆட்படுகிறோம்.

படிக்கும் அறையின் அமைப்பு

நாம் படிக்கும்போது எப்படி அமர்கிறோம்? அறையின் விளக்கு எப்படி அமைந்துள்ளது? அறை எப்படி அமைந்துள்ளது? இவைகளும் நாம் படிப்பதை நன்கு பதிய வைக்க உறுதுணை செய்பவை. இவைகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

நாற்காலியில் அமரும் முறை

உட்காரும் போது முதுகை அதிகமாக பின்னால் சாய்த்துக் கொண்டும், கால்களை நீட்டிக் கொண்டும் படித்தால் சீக்கிரம் தூக்கம் வரும். சற்று நிமிரந்த நிலையில், கால்களை அகற்றி, நாற்காலிக்கு செங்குத்தாக விடிவில் அமர்வது சரியானது. பாதங்கள் தரையிலோ அல்லது மேஜையின் கால் வைக்கு பகுதியிலோ இருக்கலாம். கால்களை மேஜைக்கு அடியில் நீட்டி வடிவில் அமரும் போது கால் விரல்களை விரைப்பாக்கி தரையில் பதிக்க வேண்டியிருக்கும். இது தவறானது.

தரையில் அமர்ந்து படிக்கும்போது கால்களை மாற்றி, மாற்றி தொடைகளின் மேல் வைத்துக்கொள்ளலாம். முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவைகள் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் வைத்துக்கொள்வது சரியானது. முன்னங்கால்களை சற்று நீட்டி, ஒன்றின் மேல் ஒன்று.

காலங்களை சற்று நீட்டி, ஒன்றின் மேல் ஒன்று குறுக்காகப்போட்டு, முதுகை நேராக சுவரில் சாய்த்து அமர்ந்தும் படிக்கலாம்.

சரியான முறை

தலையை அதிகம் குனிந்து கொண்டு படிப்பதால் கழுத்து வலிக்கும். மூளைக்குச் செல்லும் இரத்த ஒட்டம் குறையும். முன்புற் சாய்வு நிலையில் உள்ள மேஜை நல்லது. சாய்வு மேஜை இல்லாதவர்கள் தடிமனான புத்தகத்திற்கு மேல் படிக்கும் புத்தகத்தின் மேற்பகுதி இருக்குமாறு சாய்வாக வைத்துப் படிக்கலாம்.

அறையின் வெளிச்சம்

படிக்கும் அறை, நல்ல காற்றோட்டமும், தேவையான வெளிச்சமும் கொண்டதக இருப்பது அவசியம். சூரியவெளிச்சம் நேரடியாக அறையில் விழாமல் இருக்க திரைச் சீலைகளைப் ( Screens ) பயன்படுத்தலாம். இல்லையெனில் அறையின் வெப்பம் அதிகரிக்கும்.

இரவில் படிக்கும் போது மின்விளக்கின் வெளிச்சம் புத்தகத்தின் மீது விழும்படி இருந்தால் போதுமானது. கண்களின் மேல் நேரடி வெளிச்சம் பாடமல் இருப்பது நல்லது. மிக அதிகமான வெளிச்சம் கண்களை விரைவில் சோர்வடையச் செய்யும். அதேபோல் மிகவும் குறைவான வெளிச்சத்தில் படிப்பது கண்களுக்குச் சோர்வைத் தரும்.

25 வாட்ஸ் சக்தியுள்ள மேஜை விளக்கின் ஒளி புத்தகத்தின் மேல் படும்படி இருப்பது சிறப்பானது.

வண்ண விளக்குகள் வேண்டாம். அறையினுள் பளபளக்கும் பொருட்கள் இருக்கக் கூடாது.

கண்களுக்கும் புத்தகத்திற்கும் இடையே 25 cm to 35 cm தூர இடைவெளி இருக்கவேண்டும்.

அறைக்குள் இருக்க வேண்டியவை

படிக்கும் அறைக்குள் அமைதி அவசியம். T.V., Tape recoder இருக்கக் கூடாது. ஆழ் மனதில் பதியவேண்டிய ஆற்றல் மிகு வார்த்தைகளை பெரிய எழுத்துக்களில், அழகான்ன வண்ணங்களில் எழுதி அடிக்கடி கண்களில்படும் இடத்தில் வைக்கவும். எதிர்கால்த்தில் எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ ( விஞ்ஞானியாக, மருத்துவராக, பொறியியில் வல்லுநராக, தொழில் மேதையாக….) அத்துறையில் புகழ்பெற்றோர் ஒரு வரை உங்கள் முன்னோடியாக ( Roll model ) தேர்ந்தெடுக்கவும் அவரின் புகைப்படத்தை அறையில் வைக்கவும். உதாரணமாக, விஞ்ஞானியாக வரவேண்டுமென்றால் எடிசன், ஜன்டிஸ்டின் போன்றோரின் படங்கள்.

நீங்கள் பொதுத்தேர்வில் பெறவேண்டிய மதிப்பெண்கள் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை, மொத்த மதிப்பெண்கள் எத்தனை என்பதைத் தெளிவாக்கி அதை எழுதி கண்களில் அடிக்கடி படும்படி வைக்கவும்.

‘ You Can ‘, ‘ Do it now’

‘ Everday I am getting better, better and better’

‘ என்னால் முடியும் ‘ ‘ இப்போதே செய்து முடி’ ‘ முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்’

மேற்சொன்ன மந்திரச் சொற்கள் உங்கள் கண்களில் அடிக்கடி படும்படி புத்தகங்களில், நோட்டுக்களில் எழுதி வைக்கவும்.

அதிகாலைப் படிப்பு, இரவுநேரப் படிப்பு

சிலருக்கு அதிகாலை 4 மணிக்கு எழுந்து படித்தால் நன்கு பதியும். சிலருக்கு இரவு 12 மணி வரை படித்தால் நன்கு பதியும். இரண்டில் எது மிகவும் சிறந்தது?

இரண்டுமே அமைதியான நேரம்தான். ஒவ்வொருவரின் பழக்க வழக்கப்படி இது அமைகிறது. இரண்டுமே ஆழ்ந்து படிக்க அருமையான நேரம்தான். இரண்டில் எது மகிவும் சிறந்தது என்றால் அதிகாலை நேரப் படிப்புதான். ஏன்?

அதிகாலை நேரத்தில் காற்றில் உள்ள தூசுக்கள் குறைந்து சுத்தமானதாய் இருக்கும். வான் மண்டலத்தின் ஒசோன் ( O3 ) படலம் சற்று கிழிறங்கி வரும். காற்றில் அதிக அளவு பிராணவாயு உள்ள நேரம், மார்கழி மாதத்தில் இது நன்றாகவே கீழே இறங்கி மிக அதிகமான பிராணசக்தியை தருகிறது. எனவேதான் மாதங்களில் சிறந்தது மார்கழி என்கின்றனர்.

மூளையின் இயக்கத்திற்கு தேவையானவை பிராணவாயு ( O2 ) மற்றும் குளுகோஸ். எனவே நமது கவனம் ( Concen tration ) மற்றும் மூளைப்பதிவு ( registration ) நல்ல முறையில் அமைய இயற்கையே நமக்கு உதவும் நேரம் அதிகாலை நேரம்.

எனவே அதிகாலையில் எழுந்து படிக்கப் பழகுங்கள், இரவில் படித்துப் பழகியவர்களுக்கு

ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். தொடர்ந்த முயற்சி முன்னேற்றத்தைத் தரும்.

தொடர்ந்து எத்தனை நேரம் படிக்கலாம்? மணிக்கு ஒரு முறை எத்தகைய மாற்றம் தேவை?

இது குறித்து அடுத்த இதழில் காண்போம்.

சென்ற இதழில் தரப்பட்ட புதிர் விடைகள்:

புதிர் 1 : பிம்பாம் கடிகாரம் ஆறு மணி காட்டும்போது ஆறு முறை அடிக்க 30 வினாடிகள். அதாவது முதல் மணி அடிக்கும்போது நிறுத்து கடிகாரத்தை ( Stop Clock ) ஒட விடுகின்றீர்கள் 6வது மணி அடிக்கும்போது நிறுத்துகிறீர்கள்.

1 2 3 4 5 6

ஆறு மணிகளுக்கிடையே ஐந்து இடைவெளி. எனவே ஒரு இடைவெளிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 30/5 = வினாடிகள். 12 மணி அடித்தால் இடைவெளி 11.

எனவே எடுத்துக் கொள்ளும் நேரம் = 11X 6 = 66 வினாடிகள்.

புதிர் 2 : ஒவ்வொன்றிலும் முன்று வளையங்கள் கொண்ட ஐந்து தங்க செயின் என்றிருக்க வேண்டும்.

முதல் செயினின் மூன்று வளையங்களை தனித்தனியாக வெட்டி எடுத்து மீதமுள்ள நான்க் செயின்களையும் இணைத்து ஒட்ட வேண்டும்.

மூன்று வெட்டு = 3 X 10 / = Rs 30/-

மூன்று ஒட்டு = 3 X 20/ = Rs. 60/-

ஆக மொத்தம் = Rs. 90/-

இவ்வாரப் புதிர் :

9
9
9 இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

( தொடரும்….)

 

2 Comments

  1. shanmugam says:

    Good msg

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….