Home » Articles » சிறந்த நண்பர்கள்

 
சிறந்த நண்பர்கள்


admin
Author:

– டாக்டர். பெரு . மதியழகன்

மனிதனை ஒரு சமூக விலங்கு என்பார்கள். அவன் துசையில்லாமல், நண்பர்கள் இல்லாமல் வாழ்வது இயலாது. தனிமை, மிகவும் கொடுமையானது. அதானல் தான் குற்றவாளிகளைத் தனிமைச் சிறைகளில் அடைப்பது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே தனிமையை இனிமையாக்குகிற ஆற்றல் நட்புக்கு மிகுதியும் உண்டு.

உற்றநேரத்து உதவி

கடந்த இதழில் உயிரநண்பர் உற்ற நேரத்தில் ஓடிவந்து உதவியதால் உயர்ந்து கொண்டிருக்கும் உன்னதமான ஒரு வரலாற்றைப் பார்த்தோம்.

உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

அணிந்திருக்கும் ஆடை நெகழும் போது நமது கை மனத்தைக் காட்லும் விரைந்து சென்று மானத்தைக் காப்பது போல, நண்பர்க்குத் துயரென்றால் உடனே விரைந்து சென்று அத்துள்பத்தை அகற்றவதே நட்பு என்கிறார் வள்ளுவர்.

நட்புணர்வு நிலைத்து இருப்பதற்கு உரிய சீர்மை இடம் எதுவெனில் எப்போதும் மாறுபாடு இல்லாமல் இயன்ற வகையில் எல்லாம் இடையறாது உதவி செய்கின்ற உன்னதமேயாகும். நண்பர்கள் என்றால் எப்போதும் சிரித்து மகிழ்ந்து, குடித்து மகிழ்ந்து கும்மாளம் போடுவதற்குத் தான் என்று இப்போது பல இடங்களில் ஆகிவிட்டது. அதுவன்று, துன்பத்திலும் துணை நிற்போரே சிறந்த நண்பர்கள்.

செல்வச் செழிப்பில் இருக்கும் போது பாசம் காட்டி, நேசம் காட்டி நெருங்கி வந்தவர்கள், வளமாக வாழ்ந்த போது, பழ மரத்தை நாடிவரும் பறவைகளைப் போல் பறந்து வந்தவர்கள். வளம் குன்றி வற்றிப்போனபோது அற்றக் குளத்துப் பறவைகள் போல அகன்று போவார்கள் அவர்கள் நல்ல நண்பர்கள் போல அகன்று போவார்கள். அவர்கள் நல்ல நண்பர்கள் அல்ல.

வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும் எப்போதும் உடனிருப்பவர்களே சிறந்த நண்பர்கள். அதனால் தான் உண்மையான பணக்காரர்கள் எப்போதும் நல்ல நண்பர்களைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பார்கள் ( Poor find it easy to know their true friends whild the rich are always in search of them).

தன்னலம் கருதா நட்பு

கைமாறு கருதாது நண்பர்க்கு உதவுவதே சிறந்த நட்பாகும். நட்புக்காவே உதவுகிறீர்கள். எனவே, நான் இதையெல்லாம் செய்தேன் என்று பட்டியல் போடாதீர்கள். அது சிறந்த நண்பர்க்குரிய பண்பாகாது. (Never use the phrase, After all I have done for you)

எதையும் எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில்தான் உண்மையான நட்பு மலரும். அன்பு மட்டும் எதிர்பார்ப்பாக இருக்கும் நட்பே சிறந்த நட்பாக பூத்துக்குலுங்கும். அன்பு ஆதிக்கம் செலுத்தும் நட்பு கொடுத்ததை நினைவில் குறித்து வைத்து கொள்ளாது. ஆனால், தன்னலம் எப்போதும் பெற்றதை நினைவில் தக்க வைத்துக் கொள்ளும் ( Love lives by giving and forgiving.self lives by getting and forgetting. Love is selflessness. Self is lovelessness).

மணப்புண்ணுக்கு மருந்து

உடன்பிறந்தவர்களுடனோ, பெற்றவர்களுடனோ, மனைவியுடனோ, கணவனுடனோ பகிர்ந்து கொள்ள முடியாத மனச்சுமைகளை இறக்கி வைத்து இளைப்பாரும் இனியவர்கள் நல்ல நண்பர்கள். மற்ற புண்களுக்கு எல்லாம் மருந்து போட்டுக்கட்டி விடலாம். ஆனால், மனப்புண்ணுக்கு மகத்தான மருந்து நண்பர்களே ( A true friend is as it were the medicine of life).

எல்லாம் இருக்கிறது நிம்மதி இல்லை என்கிறவர்கள், நிம்மதி கிடைக்கும் என்று பல தகாத வழிகளைத் தேர்ந்தேடுத்து தற்காலிகமான மயக்கத்தைப் பெற்று பாழ்பட்டுப் போகிறது சில சமயங்களில் வாழ்வே முடிந்து போகிறது…. மனச்சுமை தாழாமல் தங்களை மாய்த்துக் கொள்கிறவர்களும் உண்டு.

ஆனால், வெற்றியாளர்கள் நண்பர்களை நாடி நற்பயன் பெறுகிறார்கள். மனப்புண் ஆற்ற வெற்றியாளர்கள் தேடிப்பெறும் மருந்து நண்பர்களே!

” அவர் மட்டும் சமயத்துக்கு ஆறுதலா இல்லாமல் போயிருந்தால், நான் இருந்த இடத்தில் புல் முளைத்துப் போயிருக்கும் ” இப்படிச் சிலர் சொல்லக் கேட்டதில்லையா? நமது இரகசியங்களின் காப்பகமாக இருப்பவர்கள் நண்பர்கள் தானே!

(தொடரும்)

 

1 Comment

  1. sridhar says:

    I like very much

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….