Home » Articles » தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை

 
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை


நிலா
Author:

கவிஞர். நிலா

அன்று ஞாயிற்றுக்கிழமை. தமிழ் வேந்தனும் இசைமுதும் விடிந்து வெகுநேரமாகியும் எழவே இல்லை. தூங்கிக்கொண்டே இருந்தனர்.

மணி, காலை 9 அடித்தது. ” தமிழ், இசை …. எந்திர்ங்க” என்று கமலம் பாட்டியின் சத்தம் கேட்டு எழுந்து வந்தனர். பாட்டி வெற்றிலையும், பாக்கும் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்.

” பாட்டி எதுக்கு இப்படி இடிச்சி இடிச்சி வெத்தலை பாக்குக்குத் திங்கிறீங்க. அப்படியே வாயில போட்டுக்க வேண்டியது தானே?” இசையமுது கேட்டாள்.

” முதல்ல போயி பல் தேச்சிட்டு வாங்க அப்புறம் செல்றேன்” என்றார் பாட்டி.

பல்தேச்சுவிட்டு ஒடி வந்து உட்கார்ந்த குழந்தைகள் இருவரும், வாந்தாச்சு, ” இப்ப சொல்லுங்க பாட்டி” என்றனர். கமலம் பாட்டி சொன்னார் ” வயசாச்சியில்லாயா, பல்லெல்லாம் விழுந்துபோசெசு. பாக்கு மெல்ல முடியாது. அதனாலதான் இப்படி இடிக்க சாப்பிடறேன்.

”சரிங்க பாட்டி… பல்லில்லாம கடிக்கிறது எதுன்னு சொல்லுங்க” என்றான் தமிழ். ” பல் இல்லாம கடிக்கிறதா…?” இது என்ன கேள்வி என்றார் பாட்டி. ” அய்ய, பாட்டி… இது விடுகதை. விடை சொல்லுங்க.

” விடுகதையா….ஓ…..ஓ அந்த அளவுக்கு ஆயிட்டீங்களா” என்றார் பாட்டி. சிறிதுநேரம் யோசித்து விட்டு, ” பேராண்டி எனக்கு தெரியில நீயே சொல்லு ” என்றார்.

” பல்லில்லாம கடிக்கிறது செருப்பு…. என்றான் தமிழ்.

” பாட்டி நான் ஒரு விடுகதை சொல்லப்போறேன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து விடுவியுங்க” என்றாள் இசையமுது. ” சரி சொல்லு” என்றனர் இருவரும் சேர்ந்து.

” நல்ல கேட்டுக்குங்க…. உரு முறைதான் சொல்லுவேன். ஆமா!….”

” சரி… சரி…. சொல்லு” என்றான் தமிழ்.

” நூலில்லாமல் தைப்பது எது?” என்று கேட்டான் இசையமுது.

பாட்டியும் பேரனும் யோசித்து பார்த்துவிட்டு …. ” நூல் இல்லாமல் எப்படி தைக்க முடியும், விடுகதையே தப்பு” என்றான் தமிழ்.

”அய்யய்யோ இரண்டு பேருக்குமே விடை தெரியில” என்று சிரித்தாள் இசை.

” சரி நீதான் விடைசொல்லு பார்ப்போம்” என்றாள் கமலம் பாட்டி.

” தாத்தா எங்க போயிருக்காங்கன்னு சொன்னிங்கன்னா, நான் சொல்றேன்” என்றாள் இசை.

” தாத்தா பொன்னேர் ஓட்ட போயிருக்கறாங்க” என்றார் பாட்டி.

” பொன்னேரா….! அப்படின்னா அப்படின்னா” என்று தமிழும், இசையும் சேர்ந்து கேட்டனர்.

” ஆடிப்பட்டம் தேடி விதைங்கிறது” பழமொழி. ஆடி பொறந்தாச்சில்லியா? ஒரு மழையும் பெய்துட்டா, விதை விதைக்கிறதுக்கு ஊர்ல இருக்கிற குடியானவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து, யாராவது ஒருத்தருடைய நிலத்துல விடியகாலம். சூரியன் உதிக்கிற சமயத்துல ஏர் பூட்டுவாங்க. ஊர்ல இருக்கிற பெரிய மனுசரா பார்த்து, அவர முதல் முதல்ல ஏர்புடிச்சு ஓட்டச் சொல்வாங்க. இதத்தான் பொன்னேர்ன்னு சொல்வாங்க. அப்ப அங்க கூடி இருக்கிற எல்லாருக்கும், ஊறவச்சு கழுவின அரிசியில் தேங்காய், வெல்லாம் கலந்து சாப்பிட கொடுப்பாங்க”.

என்று பாட்டி சொல்லி முடிக்கவும், தாத்தா பொன்னேர் அரிசி கொண்டுவந்து, ”குழந்தைகளா இந்தாங்க சாப்பிடுங்க ” என்று கொடுக்கவும் சரியாக இருந்தது. குழந்தைகள் மகிழ்ச்சியாக பொன்னேர் அரிசி சாப்பிட்டனர்.

” சரி……. விடையச் சொல்லு” என்றார் பாட்டி.

” என்ன விடை” என்றார் தாத்தா?

” தாத்தா ……. பாட்டிக்கு விடுகதைய விடுவிக்கத் தெரியல” என்று தலுக்கென சிரித்தாள் இசை.

” என்னடா கண்ணு விடுகதை எங்க சொல்லு பார்க்கலாம்” என்றார் தாத்தா.

” நூல் இல்லாம தைக்கக்கூடியது எது?” என்றாள் இசை. தாத்தாவுக்கும், ஒன்னும் பிடிபடவில்லை. ” சரி நீயே சொல்லு கண்ணு” என்றார்.

” நீங்க முதல்ல ஒரு கதை சொல்லுங்க தாத்தா…… அப்புறம் நான் விடை சொல்கிறேன்” என்றாள் இசை.

” சரி ….. வா…. சொல்றேன்” என்று சொல்ல ஆரம்பித்தார்.

” ஒரு ஊர்ல, ஒரு வங்கி ( Bank ) இருந்துச்சு, அதுல ஒருத்தர் காசாளரா வேலை பார்த்தார். ரொம்ப நேர்மையானவர். தினமும் கட்டுக் கட்டா லட்ச லட்சமா பணத்த எண்ணி எண்ணி வைப்பார். அவருக்கு ரொம்ப பணம் சேர்க்கணும்னு ஆசை வந்துச்சு. அதனால் என்ன செஞ்சாரு லாட்டரிச் சீட்டு வாங்க ஆரம்பிச்சார். அதிர்ஷ்ட தேவதை அவரைத் தேடி வரும்ன்னு காத்திருந்தார்.

நாட்டுல இருக்கிற கோயில் குளம் எல்லாம் போய் வாந்தார். எனக்கு லாட்டரியில் கோடி கோடியா விழுந்தா, நான் வந்து மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிக்கிறார். ஆனா லாட்டரியில் ஒத்தக்காசு கூட விழவே இல்லை. அதனால் கடவுள் திட்டுனாரு. என்ன? என்னுடைய வேண்டுதலை கடவுள் கவனிக்கவே மாட்டேங்கிறாரு என்று திட்டு திட்டுன்னு திட்னாரு.

ஒரு நாள் காலையில், அவருக்கு அதிசயம் காத்திருந்தது. என்னன்னா… ஒரு சாக்கு நிறைய 1000 ரூபாய் கட்டுகளை கட்டி அவர் வீட்டு கதவு முன்னாடி வாசப்படிக்கிட்ட வைச்சிருந்தது. ஒரே நாள் அவர் கோடீஸ்வரன் ஆயிட்டார். அந்த மகிழ்ச்சியில் என்ன செய்யறதுன்னே தெரியவில்லை. ஒரு ஆயிரம் ரூபாய் நோட்ட எடுத்து மனைவி கையில கொடுத்து ” இன்னைக்கு சமைக்க வேண்டாம். ஓட்டல் கடைக்குப் போய் என்னென்னன பிடிக்குமோ எல்லா பதார்த்தமும் வாங்கிட்டு வந்துடு” அப்படின்னார், அந்தம்மா அதுக்கு ஏற்பாடு செய்ய போயிருந்தாங்க.

அவர் உட்கார்ந்து வேலை வேண்டாம்னு முடிவு பண்ணி இராஜினா மா கடிதம் எழிதிக் கொடுத்து வங்கியில சேர்த்துவிட்டு வரச் சொன்னார்.

மனைவி போய், ஒரு மணி நேரமாகயும் இன்னும் திரும்பி வரவேயில்லை. கடைசியா. ஒரு வழியா, அந்தம்மா வீடு வந்து சேர்ந்தாங்க. நகரத்துல ஒரு ஒட்டல் கடை கூட திறக்கலை, எல்லாமே மூடி இருக்குதுன்னு அவங்க சொன்னாங்க.

வங்கிக்கு போன பையனும் திரும்பி வந்து, வங்கி மேலாளரும். வேலைய ராஜினமா பண்ணிட்டு, அவரோட ராஷனமா கடிதத்தை வங்கியோட துணை மேலார்கிட்ட கொடுக்கச் சொல்லி அவரோட பையங்கிட்ட கொடுத்தனுப்பி இருந்தார் துணை மேலாளரும் அலுவலகம் வரவில்லை.

தொடரும்……………..

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….