– 2003 – July | தன்னம்பிக்கை

Home » 2003 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    படிப்போம்! படிக்கவைப்போம்!!

    இளைஞர்களே எங்கே செல்கிறீர்கள்?
    சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
    ஜெயச்சித்ரா குமரேசன்

    ஆசிரியர்:பி.எஸ்.கே.செல்வராஜ் விலை
    ரூ. 40 /-
    வெளியீடு:
    மணிமேகலைப் பிரசுரம்
    சென்னை

    நூலாசிரியரைப் பற்றி…

    தி நியூஸ் வேர்ல்டு, பூவிழி மலர் ஆசிரியர். இருபத்தி நாலு வயதில் இளைஞர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்குபவர். பல இலட்சிய இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமுடையவர்.

    நூலினைப் பற்றி…
    இளைஞர்களுக்காக ஓர் எழுச்சிமிக்க இளைஞனால் உருவாக்கப்பட்ட நூலிது. சோகமான இளைஞர்களை வேகமானவர்களாக மாற்றும் சக்திமிக்க நூல். இந்நூலில் விதைத்துள்ள சிந்தனை விதைகள் வளரும் இளைஞர்களுக்கு வழிகாட்டும்.

    1. சாதனைக்கு வயது தடுப்புச்சுவர் அல்ல

    2. சாதனையில் ஆணும் பெண்ணும் சமமே.

    3. ஆன்மீகம் ஒரு கலைக்கூடம்

    4. தடைக்கல்லும், படிக்கல்லும்

    5. அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை.

    6. தேசத்தின் மீது நேசம் வை.

    7. குணநலமும் மனநலமும்

    8. உடம்பும் – இலக்கும்

    9. உயிருக்கும், உம் உடம்பிற்கும் உள்ள தொடர்பு.

    10. வல்லமையும் வாழ்வின் இலக்கும்.

    11. அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?

    12. விழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்

    13. ஆசையும் இயக்கும் இயக்கமும்

    14. பழைய – புதிய நினைவுகள்

    15. உந்துதலும், உளப்பாங்கும்

    16. தோல்வியைத் தொடர்விடலாமா

    17. இவர்கள் எப்படிப்பட்டவர்கள்

    18. உண்மை உன்னை உயர்த்தும்

    19. இளமை இனிமையானது

    20. இளைஞா! உனக்கா! எல்லாம் உன்க்காக!

    21. இதுதான் காதல் உலகம்.

    22. இளைஞனால் முடியாதது உண்டா?

    23. ஆக்குவதற்குத்தான் சக்தி! அழிப்பதற்கல்ல.

    24. உலகம் ஒரு சபை

    25. பலமும் – பணியும்

    26. வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்

    27. உலகமே உழவனின்றி இல்லை.

    அடிக்கோடிட்டு இருக்கும் அத்தனை அத்தியாயங்களும் அருமை, பெருமை, மேலும் இருபத்தியேழு அத்தியாயங்களில் இளைஞர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், தேசப்பற்று, காதல், உடல் நலம், உள்ள நலம், உழவன் நலம், இவையனைத்தையும் கலந்து கதம்பமாக தொகுத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

    பல்வேறு சுவை உணவுகளை நன்றாக கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ஒரு வித்தியாசமான சுவையினைப் போல இந்நூலினைப் படிப்போருக்கு நிச்சய் உருவாகும் கதம்ப சுவை உணர்வு.

    பத்து புத்தகங்களில் தர வேண்டிய சிந்தனைச் செய்திகளை, பல்சுவையினை பகுதிகளாக்கி தந்துள்ளார் நூலின் ஆசிரியர்

    வலிமை மிக்கவர்களால்தான் வரலாறு
    படைக்க முடியும்!

    சக்தி மிக்கவர்களால்தான் சரித்திரம்
    படைக்க முடியும்!

    தன்னம்பிக்கை மிக்கவர்களால்தான்
    வெற்றி பெற முடியும்!

    – இளைஞர்களுக்கு இது ஓர் செய்தி.

    கடின உழைப்பு இருந்தால் கடலைக்கூட கடக்கலாம்.

    உழைப்பே உயர்வு! உழைக்காமல்
    இருப்பதுதான் இன்றைய இளைஞர்கள்
    செய்யும் பிழை!

    தோல்வியில்லாத வெற்றி இன்று வரை
    யாரும் பெற்றதில்லை.

    – இதுபோல ஆயிரம் வரிகள் இந்த நூலிலே.

    கற்றுக் கொள்வதற்கு காலங்களில்லை;
    ( வயதில்லை )

    இந்த நூல் விமர்சனத்தின் மூலமாக ஆசிரியருக்கும் அன்புச் செய்தி!

    இணைந்து செயல்படுதல் மூலம் சிறிய
    செயல்களை வெற்றி சாதனைகளாக்காலாம்.

    ஒன்றுபடுதல் ஆரம்பம்! ஒன்றாயிருத்தல்
    வளர்ச்சி! ஒன்றாக செயல்பட்டால் வெற்றி!

    நம்பிக்கை – தன் – நம்பிக்கையாளர்கள் வரிசையில் PSK செல்வராஜ் அவர்களுக்கும் ஒரு தனி இடம் – வாழ்த்துக்கள் ! வளம்பெற!

    கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்

    தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து நடத்தும் தொடர் சுயமுன்னேற்ற பயிலரங்க வரிசையில், ஜீன் மாத நிகழ்ச்சி 15.06.2003 அன்று கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

    Continue Reading »

    சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்

    அப்பா, அம்மா இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அண்ணன், தம்பி, அக்காள் , தங்கை, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்ற உறவுகளை இல்லாமல் கூட பலர் இருக்கிறார்கள். நண்பர் இல்லாதவர் யாராவது இருக்கிறார்களா?

    Continue Reading »

    பயிலரங்கம் கனவா? நனவா?

    ‘ உங்களுக்காக ‘ திருமதி. சாந்தாசிவம்

    பெரும்பாலும் நம்மில் பலருக்கும் நாம் இப்படி ஆக வேண்டும். அவரைப்போல் உயரவேண்டும். என்ற கனவுகள் நிறைய அதுவும் பயிலரங்கத்திற்குச் செல்பவர்களுக்கு இதெல்லாம் வாழ்வின் உச்சக்கட்டக் குறிக்கோள். பயிலரங்கத்திற்குச்

    Continue Reading »

    வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்

    கணிதம் நன்றாக வரவேண்டும் என்றால், வெண்டைக்காயும்;

    நினைவாற்றல் பெருக வேண்டும் என்றால், வல்லாரையும்; சமீபகாலமாக சிபாரிசு செய்யப்படுகிறது.

    மேற்படி ” தாவரங்கள் ” நினைவுத் திறுனுக்கு உதவுகிறதோ இல்லையோ

    Continue Reading »

    தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை

    பௌர்ணமி நிலா பகல் போலக் காய்ந்து கொண்டிருந்தது. வானம் நிர்மலமாக காட்சியளித்தது. பொழுதெல்லாம் கொழுத்துகளி வெய்யிலுக்கு இரவு வந்ததும் காற்று வீசினால் கொஞ்சம் இதமாக இருக்கும். என்னவோ காற்று அசைவே இல்லை. சுடக்சுட இரவு

    Continue Reading »

    வேர்கள் உள்ளவரை

    – கவிஞர் சுகுணன், சென்னை

    கொளுத்தும் கோடையின்
    கொடூரம்…

    பழுத்த என் கனிகள்
    விழுந்து விட்டன.

    Continue Reading »

    எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

    தொடர்
    – டாக்டர் ஜி. இராமநாதன்
    வெற்றியின் மனமே….

    குட்டி போட்ட பீங்கான் ஜாடி

    பக்கத்துப் பக்கத்து இரண்டு வீட்டுக்காரர்கள் இருவர்!~

    ஒருவன் தந்திரசாலி.

    இன்னொருவன் சராசரி

    தந்திரசாலி பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு நாள் , ” என் வீட்டிற்கு விருந்தினர் வருகிறார்கள். அவர்களுக்கு டீ தருவதற்கு என் வீட்டிலே, நல்ல கப் இல்லை. உன் வீட்டிலே இருக்கிற அழகான பீங்கான் ஜாடியை இரவலாகக் கொடு” என்றான்.

    Continue Reading »

    திருச்சி தன்னம்பிக்கை வாசகர் வட்டம் நடத்தும் ( 1 நாள் பயிற்சி )

    சாதனை படைப்போம் வாரீர்!
    (ஆட்டோ சஜசன், மனச்சித்திரப் பயிற்சிக்ள)

    பயிற்சியாளர் : திரு. சக்சஸ் ஜெயச்சந்திரன்
    நிறவனர், தமிழ்நாடு வெற்றி கழகம், ஈரோடு

    மிகக் குறைந்த கட்டணத்தில்
    ஒருநாள் பயிலரங்கம்

    Continue Reading »

    கரூரில் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    பயிற்சியளிப்பவர்: MJF. Lion . A.R. சாந்திலால் நகார்

    தனி மனித மேம்பாட்டுப் பயிற்சியாளர், சென்னை

    தலைப்பு : வாழ்க்கையில் வெற்றி பெற்று வெற்றிகரமாக வாழ
    17 கட்டளைகள்

    Continue Reading »