![]() |
Author: ஆசிரியர் குழு
|
மாதம் ஒரு சொற்பொழிவு
தேசிய நல விழிப்புணர்வு இயக்கம், ஈரோடு ” சுதந்திரச் சுடர்கள்” என்கிற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி, மாதம் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஈரோடு, கொங்கு கலையரங்கம், சக்தி மசாலா ஹாலில் 20.03.2003 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ‘ சுதந்திரச் சுடர்கள்’ தொடக்க விழாவும், முதல் சொற்பொழிவும் தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் திரு. எஸ்கேஎம். மயிலானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியில் ” தமிழகத்தில் காந்தியடிகள்” என்கிற தலைப்பில், விடுதலை வேள்வியில் தமிழகம் நூலின் தொகுப்பாசிரியரும், பிரபல வழக்கறிஞருமான திரு. ஸ்டாலின் த. குணசேகரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இவர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பற்றிய உரை நிகழ்த்தவுள்ளார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகி திரு.கி.லட்சுமி காந்தன் பாரதி, ஐ.ஏ.எஸ் தொடக்க உரை நிகழ்த்த, முடிவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்க செயலாளர் திரு. தங்கவேல் நன்றி கூறினார்.
மாதந்தோறும் நடைபெற உள்ள இந்த தொடர் நிகழ்ச்சியின் இரண்டாம் நிகழ்ச்சி கொங்கு கலையரங்கம் சக்தி மசாலா ஹாலில் வருகிற 18.07.03 மாலை சரியாக 6.30 முதல் 8 மணி வரை ” வ.உ.சி.” என்கிற தலைப்பில் நடைபெறவுள்ளது.

July 2003

























No comments
Be the first one to leave a comment.