Home » Articles » HEALTH CORNER

 
HEALTH CORNER


யோகி இராஜேந்திரா
Author:

ஆரஞ்சப் பழம்
யோகி இராஜேந்திரா, திருப்பூர்

எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு முதலியன ஒரே இனத்தைச் சார்ந்தவை.

எலுமிச்சையில் உள்ளதைவிட ஆரஞ்சுப் பழத்தில் அமிலத்தன்மை மிக மிகக் குறைவாகவே உள்ளது. இதன் சுவையில் மட்டுமே சிறிது அமிலத்தன்மை இருப்பது போல தெரியும். ஆனால் இப்பழத்தினை உண்பவர்களுக்கு இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கும்.

இதன் சுளைகளை மூடியிருக்கும் வெண்மையான பகுதிகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் மட்டுமே எல்லாச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும். சளித்தொல்லையுள்ளவர்கள் ஆரஞ்சப் பழச்சாறில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தலாம்.

சுளையின் மீதுள்ள வெண்மைப்பகுதிகளை நீக்காமல் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் பரப்பிவைத்து அதன்மீது குறுமிளகுத் தூளைத் தூவி விட்டு அதன்பிறகு சாப்பிடுவது மிகுந்த பயனளிக்கும்.

இரவு படுக்கைக்கு செல்லும்போது சில ஆரஞ்ச சுளைகளை சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

நன்மைகள்

ஆரஞ்சுப் பழத்தின் சாறு பித்தம் சார்ந்த அனைத்து நோய்களையும் குணமாக்கும் ஆற்றல் வாய்ந்தது.

சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களையும் குணப்படுத்த உதவும்.

கால்சியம் சத்துக் குறைபாடுள்ளவர்கள் இப்பழத்தினை தினசரி உண்டுவந்தால் மிகுந்த பயனளிக்கும்.

உடலில் இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு திசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

காய்ச்சல் நோய்க்கு மருந்தாகவும், காய்ச்சல் நோயாளிகளுக்கு உணவாகவும் பயன்படும்.

உணவுப்பாதையை சுத்தப்பட்டுத்துவதோடு செரிமானத்தைச் சீராக்கி பசியைத் தூண்டும். பெண்கள் கருவுற்ற காலங்களில் தங்களுக்கு ஏற்படும் குமுட்டலைப் போக்க இதன் சுளைகளை வாயிலிட்டுச் சுவைக்கலாம்.

இப்பழத்தின் மேல்தோலை ஊறுகாய் தாயாரிக்கப் பயன்படுத்தலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்