Home » Articles » நோயின்றி வாழ்வது சுலபம்

 
நோயின்றி வாழ்வது சுலபம்


அசோக்குமார் ஏ.எஸ்
Author:

– Dr.A.S. அசோக்குமார் ph.D., (Y.Sc.)
யோகாசன சிகிச்சை நிபுணர்

ஆரோக்கியமாக, நோயின்றி வாழ்வது என்பது நமது பிறப்புரிமையாகும். தவிர எல்லோர் விருப்பமும் அதுவே. இருந்தும் ஏன் முடியவில்லை?

சிந்திக்க வேண்டிய விஷயம்! சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். ஆனால், அவன் சிந்திக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் முயலாமைதான்.

நோய் வந்தால் மருந்து சாப்பிட்டு ஊசி போட்டால், சரியாகிவிடும் என்ற அறியாமைதான் காரணம்.

நமக்குத் தெரியாமல் எந்த நோயும் நமக்கு வருவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், நாம் நோயைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம். இது நமது குற்றம் என்பதை உணர்வதில்லை!

மரணத்தை நோக்கி மனிதன் போகின்றான். ஆனால், மனிதனை நோக்கி மரணம் வருவதில்லை. முள் குத்திவிட்டது என்ற கதைபோல் இதுவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

மலச்சிக்கல், செரியாமை ஆதி நோய்கள் என்பது யோகாசன சிகிச்சைப் பழமொழி.

மலச்சிக்கலுக்கு காரணம் – மனச் சிக்கல்தான். 90% வியாதிகளுக்குக் காரணம் மனமே என்கிறது. ஆராய்ச்சி முடிவுகள். 80% வியாதிகளுக்கு மருந்துகள் தேவையில்லை என்பதும் உண்மை.

இல்லாமை, கல்லாமை, அறியாமை, முயலாமை ஆகியவைகளே நோய்களின் மூல காரணங்கள் ஆகும்.

இயற்கை விதிகளை ஒருவர் மீறும்போது இயற்கை அளிக்கக்கூடிய தண்டனை தான் நோய்கள் – பிணிகள் ஆகும்.

இயற்கை விதிகளை நமக்கு யாரும் கற்றுத் தருவதில்லை. இயற்கை விதிகளைக் கற்றுக்கொள்ள இயற்கை பயிற்சி முறைகள்தான் உதவும்.

யோகாசனங்கள் உடல் முறைகளையும், பிராணாயாமங்கள் மூச்சு முறைகளையும், தியானம் மன – இயல் முறைகளையும் நமக்குப் போதிக்கின்றன. இயற்கை விதிகளின் அடிப்படையிலேயே இப்பயிற்சிகள் அமைந்துள்ளன.

உதாரணமாக, கிட்னி பலவீனமானவருக்கு சலபாசனம் எனும் யோகாசனம் செய்ய வராது. தொடர்ந்து முயன்று செய்து வந்தால் சிறப்பாக செய்ய முடியும். காரணம், கிட்னி தனக்கு வேண்டிய பிராண சக்தியை பெறுவது இந்த பயிற்சிகளால்.

‘ ரோகா அத்வைதா – சிகிச்சா அத்வதா ‘ என்று கூறுகிறார் சாணக்கியர் தனது நூலில். அதாவது. நோய்களுக்கு மூல காரணம் கழிவுகளே. அந்நிய கழிவு நமது உடலில் தொற்று நோயாக மாறுகிறது. அந்தக் கழிவுகளை யோகா – இயற்கை மருத்துவ முறைகளால் வெளியேற்றும்போது அந்த நோய் முற்றிலும் தீர்ந்து உடல் ஆரோக்கியம் பெற்று விடுகின்றது.

ஆக, நோயின்றி வாழ்வது சுலபம். நீங்கள் முறையாக யோகாசனம் – பிராணயாமம் – தியானம் கற்று பழகி வந்தால், தினம் 20 நிமிடம் ஒதுக்கி பயிற்சிகளை முயன்று செய்து வந்தால் – செய்யத் தயாராக இருந்தால் எங்கள் அனுபவ சிகிச்சை முறைகளை பயிற்சிகளாக உங்களுக்கு கற்றுத்தர தயாராக இருக்கின்றோம்.

இனிய வாழ்வு என்பது – வாய்ப்பு.
நோயின்றி வாழ்வது சுலபம்
வாழ்க்கை என்பது – வாய்ப்பு.
வாய்ப்புகள் மறுமுறை வாய்ப்பதில்லை!
கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும்
நடப்பவை நல்லதாகவே இருக்கும்
வாய்ப்புக் கொடுங்கள் – வாய்ப்புப் பெறுவீர்கள்.
காரணம், கொடுங்கள் – கொடுக்கப்படுவீர்கள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்