Home » Articles » எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

 
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி


இராமநாதன் கோ
Author:

தொடர்
– டாக்டர் ஜி. இராமநாதன்
வெற்றியின் மனமே….

குட்டி போட்ட பீங்கான் ஜாடி

பக்கத்துப் பக்கத்து இரண்டு வீட்டுக்காரர்கள் இருவர்!~

ஒருவன் தந்திரசாலி.

இன்னொருவன் சராசரி

தந்திரசாலி பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு நாள் , ” என் வீட்டிற்கு விருந்தினர் வருகிறார்கள். அவர்களுக்கு டீ தருவதற்கு என் வீட்டிலே, நல்ல கப் இல்லை. உன் வீட்டிலே இருக்கிற அழகான பீங்கான் ஜாடியை இரவலாகக் கொடு” என்றான்.

அவனும் கொடுத்தான்.

இரவல் வாங்கியவன் இரண்டு வாரம் வரையிலே திருப்பித் தரவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து அந்த பீங்கான் ஜாடியோடு, இன்னும் இரண்டு குட்டி ஜாடிகளைச் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தான்.

கொடுத்தவன் கேட்டான், ” நான் ஒரு பீங்கான் ஜாடிதானே கொடுத்ததேன். இதனோடு இரண்டு குட்டி ஜாடிகளை கொண்டு வந்திருக்கிறாயே?” என்று.

” நீ கொடுத்த பீங்கான் ஜாடியை இரண்டு வாரமாகக் கொண்டு வராததற்குக் காரணமே, அது கர்ப்பமுற்று இருந்ததாலதான். இந்த இரண்டு குட்டி ஜாடிகள் அது போட்ட குட்டிகள் தான் ” என்றான்.

” அப்படியா?” என்று ஆசையோடு அதையும் சேர்த்து வாங்கி வைத்துக் கொண்டான்.

மறுபடியும் ஒருமாதம் கழித்து அதை மனிதன் ஜாடியை இரவல் கொடுத்தவனிடம், ” வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள்; ஜாடியை கொடுப்பாயா?” எனக் கேட்டான்.

அவனுக்கோ பேராசை. பீங்கான் ஜாடி கொடுத்தால் பீங்கான் குட்டிகள்தான் போடும். எனவே வெள்ளி ஜாடியைக் கொடுப்போம். என வெள்ளி ஜாடியைக் கொடுத்தான்.

வாங்கிப் போனவன் பல மாதங்களாகியும் வரவில்லை.

ஒருநாள் வழியிலே அவனைப் பார்த்து ” என்னவாயிற்று வெள்ளி ஜாடி?” என்று கேட்டான்.

அதற்கு அவன், ” கர்ப்பமுற்றிருக்கிறது” என்றான்.

பிற சில நாட்கள் கழித்து அவனே வந்தான்.

” என்னப்பா கர்ப்பமான ஜாடி என்னாச்சி?” என்றான்.

அதற்கு தந்திரசாலி, பிரசவத்தில் ஜாடி செத்துப்போய்விட்டது” என்றான்.

உடனே அவன் திருப்பிக் கேட்டான், ” ஜாடியா? கர்ப்பமா? பிரசவமா? என்ன கதைவிட்டு ஏமாற்றுகிறாய்?” என்றான்.

ஆதாயம் கிடைத்தபோது கேள்வி கேட்கவில்லை. மனதிற்குள் இருந்தாலும் ஆதாயத்தை இழக்க மனமில்லை. ஆனால், இழப்பு ஏற்படும்போதுதான் ஏன்? எப்படி? என்ற கேள்விகளை கேட்டகத் தோன்றுகிறது.

இதுதான் மனித இயல்பு.

நம்மைப் பாராட்டி நாலு வார்த்தைகள் பேசிவிட்டால் போதும், உச்சி குளிரும்.

நமது தேவைக்கு பணத்தைக் கொடுத்தால் வெற்றுத்தாளில் கையெழுத்தை போட்டு விடுவோம்.

நம் பிள்ளையின் எதிர்காலத்திற்கு என்று சொல்லிவிட்டால் போதும், எவ்வளவு பெரிய கடனானாலும் பெற்றுவிடுவோம்.

இதுதான் அந்த ” குட்டி பீங்கான் ஜாடி” இயல்பு.

இதனால் பலரிடம் சிக்கிக் கொள்ளுதல், தேவையில்லாத கடன்களைக் கட்டுதல், தாதாக்களிடம் மாட்டிக்கொள்ளுதல் போன்ற பல.

நமக்கு இரண்டு பலவீனங்கள்

ஒன்று, அறியாமை.

இரண்டு, ஆதாயத்தைக் கண்டதும் சபலம்.

அறியாமையை கல்வியினாலும், அனுபவத் தினாலும் வெல்ல முடியும். ஆனால் சபலத்தை எப்படி வெல்வது?

இதுபோன்ற சுழ்நிலையில் நமக்குள் கேட்க வேண்டிய கேள்வி, ” பேராசையால் அல்லது சபலத்தால் அல்லது சுயலாபத்தால் உண்மைக்கு மாறான ஒன்றை செய்கிறோமா?” என்பதுதான். ஆம், என்றால் அப்படியே ஒதுங்கிவிடுவதுதான் அதை வெல்லும் வழி.

( தொடரும்….)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்