– 2003 – June | தன்னம்பிக்கை

Home » 2003 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத்துளி..!

    வாழ்க்கை முற்றிலும்
    இளந்தென்றலாக இருப்பதுமில்லை.
    அல்லது அது முற்றிலும்
    சுழன்றடிக்கும் சூறாவளியாக
    இருப்பதுமில்லை.
    இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை!
    முன்னதை நுகரவும்
    பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன்
    அறிந்துகொள்ள வெண்டும்.

    – இங்கர்சாஸ்

    வெற்றியின் மனமே…

    தொடர்
    எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

    – டாக்டர். ஜி. இராமநாதன்
    உத்தமர் யார்

    ஒரே கம்பெனியில் வேலை செய்த இரண்டு மேலாளர்கள் அன்றன்றை தங்களுடைய நிர்வாகக் குறிப்பை எழுதுவார்கள்.

    Continue Reading »

    வெற்றி அழைக்கிறது

    விடிந்து விட்டது இளைஞனே
    விழித்தெழு நீயும் விரைவாக
    முடிந்துவிட்டது வாழ்க்கையென்று
    முனகிக் கொண்டே இருக்காதே!

    தொழில்களா இல்லை செய்வதற்கு
    தோள்களா இல்லை சுமப்பதற்கு
    வழிகளா இல்லை வாழ்வதற்கு
    வலிமையே… வளமை காணவா!

    Continue Reading »

    நீங்கள் ஜெயிக்கத் தயாரா?

    கோவை பயிலரங்கம்

    தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து நடத்திய மே மாதத்திற்கான சுயமுன்னேற்றப் பயிலரங்கம், 11.02.03 அன்று காலை கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

    Continue Reading »

    அன்னாசிப் பழம்

    HEALTH Corner
    யோகி இராஜேந்திரா, திருப்பூர்.

    அன்னாசிப் பழம் சுமார் 500 ஆண்களுக்கு முன்பாக போர்த்துக்கீசியர்களால் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தமிழில் ‘ பறங்கித்தாழை ‘ என்றும் ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் ( Pine Apple ) என்று அழைப்பார்கள். அன்னாசிப்பழத்திற்கு ‘ வெப்ப நாடுகளின் ராணி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    Continue Reading »

    வெற்றிக்கு உன் முகம்!

    வெற்றி என்பது
    வானத்துச் சூரியனல்ல…
    உன்கை
    தொடும் தூரத்தில் தான்…!

    ஆர்வத்திசையில்
    திட்டப் படகேறி
    முயற்சி துடுப்புப் பொட்டு
    குறிவைத்து நகர்ந்தால்
    கோட்டையும் உன்வசம்….!

    இலக்கினைக் கண்டு
    எண்ணம் குவித்து
    எறும்பாய் நீ
    சுறுசுறுப்பானால்
    வெற்றி என்பது
    உன் விரலின் மோதிரம்….!

    பத்து வழியிலும்
    பார்வை போனால்
    வெற்றி என்பது
    தூரத்து வான்தான்…!

    பாதை அறிந்து
    பயணம் போனால்
    வெற்றி என்பது
    தொடுகின்ற ஊர்தான்…!

    வெயிலில் தாள்
    பற்றுவதில்லை…
    வெயிலைக் குவி
    வெந்துபோம் தீயில்…!

    எதுவும் முடியும்
    உன்னால்…
    எல்லாம் உழைப்பின்
    பின்னால்…!

    காற்றில் நீ
    எங்கும் பறக்கும்
    தூசாய் வேண்டாம்…
    திசை நோக்கிச் செல்லும்
    மரக்கலமாயிரு…!

    இருந்தால் –
    உனக்கு வெற்றிமுகம்
    வெற்றிக்கு உன்முகம்…!

    – சி.சு. முருகேசன்
    நெல்லை

    அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்

    உங்களுக்காக
    திருமதி. சாந்தாசிவம்

    நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிந்தேன். என் நெருங்கிய சிநேகிதி, கண்களில் ஆர்வம் பொங்க, வேகமாக வந்து, கைகளைப் பிடித்தவாறு, ” ரொம்ப அருமையா இருந்தது உன் கட்டுரை, நடைமுறை சாத்தியங்களை நறுக்கென சொல்லியிருந்த

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    உன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அப்படியே இருப்பதற்கு நீ முயற்சி செய்வதுதான் புகழுக்குச் செல்லும் மிகச் குறுகிய வழி,.

    Continue Reading »

    தோள்கள் தொட்டுப் பேசவா

    தொடர் (3)
    மரபின் மைந்தன் ம. முத்தையா

    இளமைக் காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல், தன்னை வழிநடத்த இன்னொருவர் வேண்டுமெம எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல் வாதிகள் வரை, பலராலும் ஈர்க்கப்படும் காலமிது.

    Continue Reading »

    திருச்சியில் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    பயிற்சியளிப்பவர்: திரு. சக்சஸ் ஜெயச்சந்திரன்
    நிறுவனர், தமிழ்நாடு வெற்றிக்கழகம், ஈரோடு

    தலைப்பு: வெற்றியின் இரகசியம் இதோ…

    நாள் : 15.06.2003 ஞாயிறு

    Continue Reading »