Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

டாக்டர் ஜி. இராமநாதன்

நல்ல பர்சனாலிட்டியை உருவாக்க…

ஒருவருடைய சிந்தனையே அவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. உயர்ந்த சிந்தனைகள் உருவானால், செயல்கள் உயர்ந்து வாழ்க்கையும் உயர்வடையும், அதற்கு பெற்றோர் செய்ய வேண்டியவை :

குழந்தைகளுடன் பழகும்போது கோபப்பாடாமல் நிதானமாக செயல்படுதல்.

குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் பண்புகளை பெற்றோர்களே தங்களுடைய செயல்களில் காட்டுதல்.

தவறுகளைச் செய்யும்போது அன்புடன் திருத்துதல், கடுமையான தண்டனைகளை தவிர்த்தல்.

எல்லாமுமே நூறு சதம் சரியாக இருக்க எண்ணாதிருத்தல்.

உயர்ந்த குறிக்கோளை மனதில் உருவாக்குதல்.

குறைகளைக் காட்டி புண்படுத்தாமை.

பிற குழந்தைகளுடன் ஒப்பிடாமை.

மிகக் கடுமையான கட்டுப்பாட்டை விதிக்காமை.

குழந்தைகள் எதற்காக சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுதல்.

தவறுகளை பிறர் முன்னிலையில் சுட்டிக் காட்டாமல் தனிமையில் சுட்டிக் காட்டுதல்.

தவறான பழக்கங்களை அவ்வப்போதே சரிப்படுத்துதல்.

பெற்றோர் தவறு செய்துவிட்டால், பெருந் தன்மையுடன் குழந்தைகளிடம் வருத்தம் தெரிவித்தல்.

புதியதாக எதையாவது செய்ய முனையும்போது முற்றிலும் தடை விதிக்காதிருக்கும்.

சுதந்திரமாக பேசுவதற்கும் செயல்படுவதற்கும் வீட்டின் சூழ்நிலைகளை அமைத்தல்.

தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்காதிருத்தல்.

தினமும் குழந்தைகளுடன் பழக நேரம் ஒதுக்குதல்.

அன்றாட நிகழ்ச்சிகளை கலந்து பேசுதல்.

தரக்குறைவான வார்த்தைகளால் திட்டா திருத்தல்.

அவமானப்படுத்தாமை.

பயமுறுத்தாமை.

சிக்கல்களை அவர்களாக சமாளிக்க வாய்ப்பளித்தல்.

சாதனைகளை மனம்விட்டு பாராட்டுதல்.

நல்ல பர்சனாலிட்டி உருவாக தவிர்க்க வேண்டியவை :

ஒருவரை சந்திக்கும்போது நேருக்கு நேர் பார்க்காமல் அங்குமிங்கும் பார்த்தல்.

தலையைச் சொறிதல்

உதட்டைக் கடித்தல்

நாக்கை உறுத்துதல்.

கையைக் கட்டி அமருதல்.

கையைக் கன்னத்திலோ மேஜையிலோ வைத்து அமர்தல்.

காலை ஆட்டுதல்

பெரியோர் முன்னிலையில் காலை உயர்த்தி மற்றகால் மீது போட்டு அமருதல்.

எதையாவது தட்டிக் கொண்டிருத்தல்.

வாயை மெல்லுதல்.

மீசையைக் கடித்தல்

செருமுதல்.

மூக்குக் கண்ணாடியை அடிக்கடி கழற்றி மாட்டுதல்

பேனா, பென்சில் போன்றவற்றை வாயில் வைத்தல்.

சிகரெட் பிடித்தல்

தயங்கித் தயங்கி பேசுதல்

புதிவர்களைப் பார்த்தால் பேசுவதை தவிர்த்தல்.

இதுபோன்றவைகளை தவிர்க்கச் செய்து முதலில் சொன்னவைகளே பெற்றோர்கள் செயல்படுத்தினால் நல்ல பர்சனாலிட்டியுள்ள பிள்ளைகளாக உருவாகுவார்கள். இத்துடன் புன்னகைத் தோற்றம், தெளிவான பேச்சு, நிமிர்ந்த நடை, உடலுக்கேற்ற உடை அனைத்தும் பர்சனாலிட்டியை உயர்த்தும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்