Home » Articles » வெற்றி ஊருக்குச் செல்ல…

 
வெற்றி ஊருக்குச் செல்ல…


லேனா தமிழ்வாணன்
Author:

– லேனா தமிழ்வாணன்

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், முதலில் அவன் தூக்கத்தைக் குறைக்க வேண்டும். சாதாரணமாக ஒரு மனிதன் 6 அல்லது 5 மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைத்துப் படுக்கிறான். அந்த அலாரம் சத்தம் எழுப்பும் போது எத்தனை பேர் விழிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். சிலர் அதன் விலையில் ஒரு தட்டி தட்டி விட்டு மீண்டும் உறங்கச்சென்று விடுகிறார்கள். இப்படி தொடர்ந்து 5 – நாள் செய்யும்போது 5 – வது நாள் கண்டிப்பாக நம் ” மூளையில் உதிக்கும், நாம் யாரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்…? என்று.

வாழ்க்கைப் பாதையை மாற்றுங்கள். எழுந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்குங்கள். எல்லோர் உடம்பிலும் ‘ Biological colck’ இருக்கு. கண்டிப்பாக அது நம்மைத் தட்டி எழுப்பும். இரவு படுக்கப் போவதற்கு முன்பாக ‘ ஆட்டோ சஜசன்’ செய்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக வீட்டில், ஜன்னல், கதவு காற்றிற்கு அசையும் போது மனைவி என்ன சொல்லுவார் ‘ என்ன ஆச்சு போய்ப் பாருங்க’ என்று, ஏதோ பயத்தை மனதில் வைத்துக் கொண்டு படபடப்பாக கூறுவார்.

ஆனால், வெளியூருக்கு ரயிலில் பயணம் செய்யும் பொழுது, ஏகப்பட்ட இரைச்சல்கள் ஏற்படலாம். குழந்தைகள் ஒரு பக்கம், கணவன் – மனைவி, சண்டை ஒரு பக்கம். வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என்று ஏகத்திற்கும் கூச்சலாக இருக்கும்.

இருப்பினும் அந்த சத்தத்தில் ஒரு ஜன்னல் அசைந்ததிற்கே பயந்த மனைவி நன்றாக உறங்குகிறார். இதற்கு என்ன காரணம்? என்று நினைக்கிறீர்கள்? நம் மனம்தான். சூழலுக்கு ஏற்ற வகையில் மனதைத் தயார்படுத்திக் கொள்வது.

அதிகாலையில் எழுந்ததுமே மனதிற்கு பிடித்தமான வேலையைச் செய்ய வேண்டும்.

ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்குவதற்காக சென்றிருந்தேன்.

டிக்கேட்டின் விலை ரூ. 2. ஆனால், நானோ 100 ரூபாய் எடுத்து நீட்டினேன். அவர் ” சில்லரை கொண்டுவா! ” என்று கூறி விட்டார்.

திரும்பவும் சென்றால் மறுபடியும் கடைசியிலிருந்து வரிசையில் வரவேண்டும் என எண்ணினேன். திடீரென்று ஒரு யோசனை தொன்றியுது. உடனே எனக்கு 5 டிக்கெட் கொடுங்கள் என்று ஒருவாறு சமாளித்து வெளியே வந்தேன். நினைத்துப் பாருங்கள். 2 ரூபாய் சில்லரைக்காக எவ்வளவு நேரம் வீணாகிறது. காலையில் எழுந்ததும் உங்களுடைய மணிபர்சை தகுந்தவாறு நிரப்பிக் கொள்ளுங்கள்.

நேரத்தின் அருமையை உணர நீங்கள் செய்ய வேண்டியுது,

( i ) வேண்டுமானால் 5 மதப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்க வேண்டும்.

( ii ) ஒரு மாதத்தின் அருமையை உணர வேண்டுமானால் குறைப்பிரசவமாகக் குழந்தை பெற்ற தாய்மார்களைக் கேட்க வேண்டும்.

( iii ) ஒரு வாரத்தின் அருமையை உணர வேண்டுமானால் வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைக் கேட்க வேண்டும்.

( iv ) ஒரு நாளின் அருமையை உணர தினக் கூலிகள், அன்றாடங் காய்ச்சிகள், சாலையோர நடைபாதைக் கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகளைக் கேட்க வேண்டும்.

( v ) ஒரு மணி நேரத்தின் அருமையை உணர வேண்டுமா? மருத்துவரைக் கெளுங்கள். அவர் சொல்லுவார் ‘ சற்று முன்பாக அழைத்து வந்திருந்தால் இந்த உயிரை நான் காப்பாற்றியிருப்பேன்’ என்று.

( vi ) பத்து நிமிடத்தின் அருமையை உணர வேண்டுமானால் காதலிக்கிறார்கள் அல்லவா, அவர்களைக் கேட்க வேண்டும்.

வாழும் வாழ்க்கையில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். சில இடையீடுகளும், பிரச்சினைகளும் போராட்டங்களும் இருக்கதான் செய்யும். சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், சிந்தித்து செயல்படுங்கள்.

நேரத்தை எதில் அதிகம் செலவிட வேண்டுமென்றால், சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது, என்ன பிரச்சினையாக இருந்தாலும் முடிவெடுக்கும்போது அதிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

காலம் என்பது அறுகிக் கொண்டே இருப்பது. நேரத்தைப் மதிக்காதவர்களை அது தன் காலடியில் போட்டு மிதித்து தேய்த்திருக்கிறது. வாழ்வின் வெற்றியாளர்கள் அனைவரும் ஒரே உணர்வு உள்ளவர்களே! ஆக வெற்றியூருக்குச் செல்ல முதல்படி நேரத்தை மதித்தலும், அதை திட்டமிட்டு நிர்வகித்தலும்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்