Home » Articles » சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு

 
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு


ஜெயசித்ரா குமரேசன்
Author:

படிப்போம்! படிக்க வைப்போம்!!
சொல்லித் தந்தது பூமி
அள்ளித் தந்தது வானம்
ஜெயச்சித்ரா குமரேசன்
ஆசிரியர் :டெக்ஸ்டர் ஏகர் ரான்பால்

வெளியீடு :Netserve India Pvt. Ltd., New Delhi

விலை : ரூ. 90 / 118 பக்கங்கள்

நூலினைப் பற்றி

பத்து லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டிய ” உங்களின் கனவுகளை யாரும் திருட விடாதீர்கள்” நூல் ஆசிரியரின் மற்றொரு புதிய படைப்பு. சிந்தனை முத்துக்கள் அள்ளித் தெளிக்கப்பட்ட இந்த நூல், அறிவுச்சுடரை தூண்டி நீங்கள் விரும்பும் உயரத்திற்கு உங்களை உயர்வத்தவதற்காக உருவாக்கப்பட்ட நூல்.

நூலின் ஆசிரியரைப் பற்றி

அமெரிக்காவின் பணம் படைத்த தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர். பணம் கொழிக்கும் வழிகள் பற்றியும், பொருளாதார வெற்றிகள் பற்றியும் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இளம் வயதில் சோடா விற்பதில் தொடங்கி, கார் விற்பனையாளராக மாறி தற்போது கோடீஸ்வரராக உள்ளவர்.

இந்த நூலில் உங்கள் மதிப்புமிக்க வியாபார்த்தை தக்க வைத்துக் கொள்ளவும், மிக்பெரிய வெற்றியின் இரகசியம் பற்றியம், உங்களின் மிகப்பெரிய கனவுகள் மெய்ப்படும் வழியையும் அழகாக கூறியுள்ளார்.

நூலின் உள்ளே…

உங்களின் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்கள் கைகளில்தான், வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டிருப்பதுதான் ஒவ்வொரு வெற்றியாளரும் வெற்றிபெரும் ரகசியமாகும். நான் வெற்றி பெற காரணமான அடிப்படை வியங்களை உங்களுட் இந்த நூலில் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி பெற அவை உதவியாக இருக்கும் என்கிறார் முன்னுரையிர் இந்த நூலின் ஆசிரியர்.

இந்நூலின் பெயரினை தங்க எழுத்துக்களால் பொறித்திருக்கின்றனர் பதிப்பகத்தார். நூல் முழுவதும் வைர வரிகளால் வரிக்கும வரி மெருகூட்டியுள்ளார் ஆசிரியர். பத்து அத்தியாயங்களாக பகுத்து, வெற்றிப்பாதைகளின் மைல் கற்களாக்கியுள்ளார்.

1. உங்களுடைய இலட்சியக் கனவு எது என்று முடிவு செய்யுங்கள்.

உங்களின் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்கள் கைகளில்தான். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டிருப்பதுதான் ஒவ்வொரு வெற்றியாளரும் வெற்றிபெரும் ரகசியமாகும். நான் வெற்றி பெற காரணமான அடிப்படை விசயங்களை உங்களுடன் இந்த நூலின் பகிர்ந்து கொள்வதுன் மூலம் நீங்கள் வெற்றி பெற அவை உதவியாக இருக்கும் என்கிறார் முன்னுரையில் இந்த நூலின் ஆசிரியர்.

இந்நூலின் பெயரினை தங்க எழுத்துக்களால் பொறித்திருக்கின்றனர் பதிப்பகத்தார். நூல் முழுவதும் வைர வரிகளால் வரிக்கு வரிமெரு கூட்டியுள்ளார் ஆசிரியர். பத்து அத்தியாயங்களாக பகுத்து வெற்றிப்பாதைகளின் மைல் கற்களாக்கியுள்ளார்.

2. திட்டமிடுங்கள்

இலக்கை நிர்ணயிப்பதால் 100 / 100 வெற்றி பெறலாம். வெற்றியை அடைய செயல்முறைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

3. தடைக்கற்கள்

உங்களுடைய இலட்சிய கனவு நிறைவேற, உங்களூடைய உடனடி தேவைகளை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?

4. வலிமையான அஸ்திவாரத்தின் மேல் உங்கள் இலட்சியக் கனவை கட்டுங்கள்.

உங்கள் இலட்சியக் கனவு பாதியிலேயே, பெட்ரோல் இல்லாத கார் போல நின்று விடக்கூடாது. வெற்றி என்பது சாதிக்க வெண்டும் என்று இதயத்தில் கொழுத்து விட்டு எரியும் அக்னியின் பிரதிபலிப்பாகும்.

5. சீரான வேகத்தைக் கடைபிடியுங்கள்

வெற்றியை நோக்கிச் செல்லும் பாதையில் மனதைக் கவரக்கூடிய பல சாலை நிறுத்தங்களால் கவரப்படுகிறீர்கள்.

6. பிரம்மாண்டமாக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

நான் நூறு சதவீதம் தலைவனாக தகுதி உடையவன் என்று கணிக்காதிருக்கும் வரையில் உங்களால் முதலிடத்தை அடைய முடியாது.

7. தகுதியுடையவராக, மனிதராக உங்களை ஆக்குங்கள்

நம்முடைய லட்சியக் கனவை அடைவதற்கு தகுதியுள்ளவராக நம்மே ஆக்கிக் கொள்வது மிக முக்கயமானது ஆகும்.

8. உங்கள் இலட்சியக் கனவின் உன்னத்மானவைகளை அகங்காரம் அழிந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெற்றிப் பெருமிதத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தை விட்டு விடாதீர்கள். பணிவே வளர்க்கும் மதி நுட்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல், வெற்றியின் உச்சியை ஒருபோதும் அடைய முடியாது.

9. உங்கள் மனதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்

நம்முடைய எதிர் யார்? நம்முடைய மனம்தான். உங்கள் ஆசை உங்கள் மனவுறுதியுடன் தொடர்பில்லாமல் இருக்கும் வரை உங்களால் ஒருபோதும் சாதிக்க முடியாது.

10. உங்கள் வெற்றிக்கு வழி வகுத்து சுவை கூட்டக்கூடிய விசேஷமான உட்பொருட்களைக் கண்டுபிடியுங்கள்.

தன்னம்பிக்கைக்கும் , தலைக்கனத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணருங்கள்.

சுயமுன்னேற்றம் – – சூத்திரத்தை கொண்டு தன்னம்பிக்கை தத்துவத்தின்படி ஒவ்வொரு மனிதனையும் சாதனையாளாராக்குவதற்காக உருவான நூல்.

இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக கூறும் ஒரே விமர்சனம் ” இதைப் போன்ற நூலினை இதுவரை படித்ததில்லை” என்பதுதான். இதுவே இதன் தனிச் சிறப்பு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்