Home » Articles » மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்

 
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்


ஜெயச்சந்திரன்
Author:

சக்சஸ் ஜெயச்சந்திரன்

அடுத்த பத்து ஆண்டுகளில் சாதிக்க வேண்டிய குறிக்கோளை நிர்ணயித்து விட்டீர்கள். அதை நறைவேற்றியே தீர்வது என்று தெளிவான, திட்டமான, உறுதியான, இறுதியான முடிவை எடுத்து விட்டீர்கள்.

இருப்பினும் உங்கள் மனம் அதுவா, இதுவா, அங்கா, இங்கா? அப்படியா, இப்படியா? என்று அலைபாயும்; எதுக்கெல்லாம் மனம் கவர்ப்படுகிறதோ அதுக்கெல்லாம் செல்லத் துடிக்கும்.

குறிக்கோளை விட்டுத் திசைமாற முயலும் மனதை விரும்புகிற திசையெல்லாம் செல்ல விடாமல் அடக்கி குறிக்கோளை நோக்கிக் திருப்பி விடுவது தான் வெற்றியின் தொடக்கம்.

கடலில் பயணம் செய்கிற கப்பலைச் செலுத்துகிற மாலுமி, கப்பல் திசைமாறும் போதெல்லாம் சுக்கானைத் திருப்பி, கலங்கரை விளக்கைப் பார்வையில் பதித்து, அதை நோக்கிய பயணம் செய்யும்படி செலுத்துவது போன்று, உங்கள் மனம் குறிக்கோளை விட்டுத் திசைமாறும் போதெல்லாம், சுக்காளைத் திருப்பி விரும்புவதில் செலுத்த வேண்டும் என்றால் மனதை அடக்கப் பழக வேண்டும்.

கடிவாளம் போடப்படாத குதிரே வேண்டாத சாலைகளில் ஒடக் துடிப்பது போன்று, மனம் என்னும் குதிரை நம் நலனுக்குத் தீங்கான, குறிக்கோளுக்கு மாறான திசைகளில் ஓடத் துடிக்கும். ‘ கட்டுப்பாடு ‘ என்னும் கடிவாளத்தை இறுக்கினால் மனம் என்னும் குதிரையை விரும்பும் திசையில் திருப்பி விடலாம்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீங்கள் வெற்றி காண வேண்டும் என்றால் நீங்கள் மனதின் இயல்புகளையும் அதை அடக்கும் வழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பொருளையும் நீங்கள் மனதில் உருவாக்கித்தான், பின்னர் புறத்தில் உருவாக்க முடியும்.

பயிற்சியின் மூலம் மனதை அடக்கி, கட்டுப்படுத்தி; தேவையான நல்ல எண்ணங்களைப் புகுத்திச் செயல்படச் செய்வதன் மூலம் நீங்கள் விரும்புவதை அடைய முடியும்.

மனதில் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து பதிக்கப்படும் எண்ணங்கள்தான், சம்பவங்களாக உருவாகி, உங்கள் சூழ்நிலையாகவும் உருவெடுக்கிறது என்பது ஒரு முக்கியமான உண்மை.

நீங்கள் கடந்தகாலத் தோல்விகளையும் கஷ்டங்களையும், துன்ப துயரங்களையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவையே விரிவடையும். ஆகவே அவற்றை மறந்து விடுங்கள்.

நிகழ்காலத்தின் அறிகுறிகளோ அடையாங்களோ, அதாரங்களோ எதிராகவும், பாதமாகவும், விரோதமாகவும் இருக்குமானால் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்க முடியாமல் போய்விடும். ஆகவே அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எதிர்காலத்தில் நான் விரும்புவது நடந்தே தீரும்; என் குறிக்கோள் நிறைவேறியே தீரும்; எப்படி என்று தெரியாது; அதைப் பற்றி என்க்குக் கவலை இல்லை; ஆனால் நான் நம்புவது நடந்தே தீரும், என்னும் அழுத்தமான உறுதியான எண்ணம்தான் உங்கள் எதிர்காலத்தை அமைத்துத்தரப் போகிறது.

ஆனால், உங்கள் சூழ்நிலையே மாற்றியமைக்க வேண்டுமானால் நீங்கள் எண்ணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாத, மாற்ற முடியாத உண்மையாகும்.

தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நீங்கள் வெற்றிச் சித்திரங்களைத் தொடர்ந்து மனதில் பதியவைக்க வேண்டுமானால், மனதைக் கட்டுப்படுத்தப் பயில வேண்டும்.

மனதைக் கட்டுப்படுத்தவது மனிதனால் இயலாத காரியம் அல்ல. அதற்கு முயற்சியும், பயிற்சியும் தேவைப்படும்.

முதன் முதலில் மிதிவண்டி ஓட்டத் துவங்கியபோது எத்தனை முறை விழுந்திருப்பீர்கள். காயம் பட்டிருப்பீர்கள். வேண்டாம் என்று முயற்சியிலிருந்து விலகி இருந்தால் மிதிவண்டி ஓட்டும் திறன் உங்களுக்குப் வந்திருக்காது.

தோல்வி, துன்பம் பற்றிக் கவலைப் படாமல், ஓட்ட வேண்டும், ஓட்ட முடியும் என்னும் எண்ணம்தான் உங்களுக்கு வெற்றி தந்தது.

அதுபோன்றே, மனதைக் கட்டுப்படுத்தவும், எண்ணங்களை விரும்புவதில் செலுத்தவும், வேண்டாதவற்றிலிருந்து எண்ணங்களை விலக்கவும் பயிற்சி செய்து நீங்கள் மனதை அடக்க முடியும்.

மனம் எல்லாரிடத்தும், எப்போதும் செயல்படுகிறது. அதுதான் மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படையாய் அமைகிறது. மனிதன் செய்யும் உடற்செயல்கள் அனைத்து முதலில் மனதில் தான் செயல்படுகிறது. அதனால் நம் செயல்களைக் கட்டுப்படுத்த விரும்பினால் முதலில் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மனிதனின் எண்ணம், முயற்சி, செயல் அனைத்தும் முதலில் மனதில் உண்டாகித்தான் பிறகு உடலில், உலகில் நடைபெறுகிறது.

மனித வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள் நன்மை தீமைகள், அவனில் செயல்பட அவனுள் இருக்கும் மனமே காரணமாகிறது. இறைவன் கூட மனிதனுக்கு நன்மையோ, தீமையோ, இன்பமோ, துன்பமோ அளிக்க வேண்டுமானால், அவன் மனதில், அதற்கான வழியில் எண்ணங்களை எழுப்புவதன் மூலம்தான் செய்யமுடியும்.

மனதில் தேவையில்லாத எண்ணம் உதித்த போதும், மனிதன் மனதைக் கட்டுப்படுத்தி அதன்படிச் செயல்பட மறுத்துவிட்டால் வினைப்பயன்கூட அவனுக்குத் தீமை பயக்க முடியாது.

மனதில் தோன்றும் வேண்டாத எண்ணங்களை விலக்கவும், விரும்பும் எண்ணங்களை எழுப்பவும் பயிற்சியளிக்கும், தியானப் பயிற்சியைப் பலரும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுருக்கமான முறையில் தியானப் பயிற்சியைக் கற்பிக்கும் சில நல்ல நூல்களும் உள்ளன.

இயலுமானால் சில பயிற்சிகளைக் கற்றறிந்து நடைமுறைப்படுத்தத் தொடங்கி விடுங்கள். இல்லையெனில் நல்ல நூல்களை வாங்கி
அதில் கூறப்படும் பயிற்சிகளை நீங்களே செய்யத் தொடங்கி விடுங்கள்.

ஆனால், வகைவகையாச் சொல்லித் தரப்படுகிற எல்லாப் பயிற்சிகளையும் பெற்றுவிட வேண்டும் என்னும் ஆசையில் அலைந்து திரிந்து காலத்தை வீணாக்க வேண்டாம்.

தியானம் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி, காரியத்தைப் பற்றி நீண்ட நேரம், ஆழமாகச் சிந்திப்பதே தியானம்.

உங்கள் குறிக்கோள் என்ன? தொழில் / வணிகத்தின் மூலம் நேர்மையான முறையில் உண்மை அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதா?

அப்படியானால் அமைதியான இடத்தில் தளர்வாக அமர்ந்து ” ஒரு கோடி ரூபாய் உருவாக்கு” என்று மெல்லிய குரலில் உணர்ச்சியுடன் ஒலிநயத்துடன், நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் ஆழ்மனக் கட்டளை கொடுங்கள்.

கட்டளை கொடுக்கும் போதே 1,00,00,000 என்னும் எண்ணை மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். அந்த எண்ணை ஒரு நிமிடம் 2 நிமிடம் தொடர்ந்து மனக்கண்ணில் காணுங்கள். நாளுக்கு நாள் படிப்படியாக மனக்காட்சியை 5 நிமிட நேரத்திற்கு நீடிக்கச் செய்யுங்கள்.

அடுத்து ஒரு கோடி ரூபாயை எப்படி அடைவது என்னும் கேள்வியை மனதிற்குள் கேளுங்கள், உங்கள் ஆழ்மனமே ‘ மனப்படங்களின் ‘ மூலம் யோசனைகளை வழங்கும்.

ஆழ்மனம் வழங்கிய ஆலோசனையே ஏற்றுக்கொண்டு பொருளை நீங்கள் உற்பத்தி செய்வது போன்று அல்லது வாங்கி விற்பனை செய்வது போன்று அல்லது உற்பத்தி செய்து விற்பனை செய்வது போன்று மனப்படங்களை உணர்ச்சியோடு, மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.

நீங்கள் மனப்படங்களைக் கண்டு வரும்போது, வேறு படங்கள் குறுக்கிடுவது இயற்கையே, குறுக்கிடும் எண்ணத்தை ஒதுக்கி, விரும்பும் மனப்படத்தை அழுத்தமாக ஓட விடுவதே தியானம்.

ஒராண்டு காலம் முயற்சியைக் கைவிடாமல் இப்பயிற்சியை செய்துவருக. உறங்கி எழுந்தவுடன் 15 நிமிடமும், உறங்கப் போவதற்கு முன்னர் 15 நிமிடமும் இதை நீங்கள் செய்ய முடியுமானால் தொழில் வெற்றிக்கும், வணிக வெற்றிக்கும் தேவையான தியானம். உங்களுக்கு கைவந்து விட்டது என்று நம்பலாம்.

எதைத் தொடர்ந்து சிந்திக்கிறீர்களோ அது விரிவடைந்து கொண்டே போகிறது என்னும் விதியின்படி உங்கள் தொழில், வணிகம், வருவானம், வளம் அனைத்தும் விரிவடைந்து வெற்றி பெருகத் தொடங்குகிறது.

இதுபோன்று உங்கள் குறிக்கோளுக்குத் தக்கபடி மனச்சித்திரங்களை அமைத்து, அது தொடர்பான நடவடிக்கைகளைக் கற்பனையில் கண்டு கொண்டே கவனத்தைக் குவியுங்கள்.

உங்கள் மனம் இப்போது நீங்கள் விரும்புகிறபடி செயல்பட ஆரம்பித்து விடும். உங்கள் கட்டறைக்கேற்ப அது அடங்கப் பழகிவிடும்.

மனம் அடங்கிவரும்போது, நல்லனவற்றை மட்டுமே, உங்களை உயர்த்தக் கூடியவற்றை மட்டுமே, உங்களை உயர்த்தக் கூடியவற்றை மட்டுமே சிந்திக்கும் பழக்கம் உங்களுக்கு வந்துவிடும.

நீங்கள் கற்பனையில் கண்டுவந்த காட்சிகள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் வாழ்க்கை நிகழ்ச்சியாக மலரத் தொட்ங்கும்.

மனச்சித்திரங்களைக் கண்டு பயிற்சி செய்யும்போது இடையில் மனம் தளராமலும் முயற்சியைக் கைவிடாமலும் இருக்க வேண்டும்.

தொடர்ச்சியாக நீங்கள் மனச்சித்திரங்களைக் கண்டுவரும்போது மனம் நுண்ணிய நிலையேஐ அடைந்துவிடுகிறது. அதனால் எண்ணத்தை புதிய பாதையில் திருப்பிவிட மனதால் முடியும்.

தொடர்ந்து இப்பயிற்சியைச் செய்யப் பயின்ற பிறகு மனதைப் பழைய வழியில் செல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் அதனதன் தன்மைக்கேற்ற பயன்தருகிறது. அதுபோன்றே மனதில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதிபெற்று வாழ்வின் பயனாக விளைந்து விடும்.

ஒரே எண்ணம் மீண்டும் மீண்டும் தொன்றும்போது, எண்ணத்திற்கு செயலாற்ற வல்ல வலிமை தோன்றிவிடும்.

எண்ணம் செயலாகும்; செயல் பழக்கம் ஆகும்; பழக்கம் வழக்கமாக மலரும்; வழக்கம் பயிற்சியாக வளரும், பயிற்சி முதிர்ச்சியை அடையும்; முதிர்ச்சி எய்தும் போது அதில் ஒரு விசை உருவாகும்; விசை உங்களுக்கு வெற்றி தேடித்தரும்.

மாபெரும் சாதனைகள் ஆனாலும் மனக்கட்டுப்பாட்டில்தான் தொடங்குகின்றன என்பதை நன்கு கவனியுங்கள்.

ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை மனதில் எழ அனுமதித்தால், மீண்டும் அதை உதிக்காமல் செய்வது எளிதன்று; அதுபோன்ற நல்ல எண்ணத்தை ஒருமுறை உதிக்கச் செய்து விட்டால் மீண்டும் அவ்வெண்ணம் எழுந்து கொண்டே இருக்கும். பின்னர் அதுவே செயலாக மாறி, தொடர்ந்து செயல்களும், விளைவுமாக மாறி உங்கள் சூழ்நிலையே மாறிவிடும்.

சூழ்நிலையை நினைத்து அழுவதாலோ புலம்புவதாலோ, பீதி அடைவதாலோ அது மாறிவிடாது என்பதை நீங்கள் உணர வெண்டும்.

சூழ்நிலையை மாற்றுகின்ற சக்தி அவரவரிடமே உள்ளது. அதை மாற்றும் முயற்சி முதலில் எண்ணத்தில்தான் தொடங்க வேண்டும்.

எண்ணத்தை மாற்ற வேண்டும் என்றால் மனதை அடக்க வேண்டும், மனதை அடக்கி, எண்ணங்களை மாற்றி, அவற்றை வலுவாக்கி, வசப்படுத்திச் செயல்படுத்தினால், சூழ்நிலை முற்றிலும் மாறிவிடும். நீங்கள் விரும்புகிற வாழ்க்கையை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

மனதை அறிந்து, அதை அடக்கி கட்டுப்படுத்தி, தேவைப்படாத எண்ணங்களை விலக்கி, அடக்கப்பட்ட மனதை விரும்புவதை நோக்கி செலுத்துவதுதான் விரும்புவதை அடைவதற்கான ஒரே வழி.

இதுதான் வெற்றியின் எட்டாவது இரகசியம்!

 

6 Comments

  1. G.Sathiyanathan says:

    your explanation is good, but i could not do it. i will try to do the best.

  2. P.MUTHUKUMAR says:

    while i red this my mind is been very peace . thanks

  3. Murugesan says:

    Very nice post. i getting so many information while reading this. Thank you very much.

  4. saravanan says:

    Very Useful info for the Youngsters, those who are disturbed and depressed much more in life activities of all can read this article about gain confidence etc.

Leave a Reply to P.MUTHUKUMAR


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்