Home » Articles » வெற்றியின் மனமே…

 
வெற்றியின் மனமே…


இராமநாதன் கோ
Author:

தொடர்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

– டாக்டர். ஜி. இராமநாதன்
உத்தமர் யார்

ஒரே கம்பெனியில் வேலை செய்த இரண்டு மேலாளர்கள் அன்றன்றை தங்களுடைய நிர்வாகக் குறிப்பை எழுதுவார்கள்.

அன்று கம்பெனியின் பணத்தை தன் சொந்த செலவிற்கு எடுத்த மேலாளரைப் பற்றி இரண்டாவது மேலாளர் ரிப்போர்ட் எழுதிவிட்டார். ” இன்று கம்பெனி பணத்தை முதல் மேலாளர் சுருட்டி விட்டார்” என்று.

அவர் எவ்வளவோ மன்றாடினார். இரண்டாவது மேலாளர், ” உண்மையைத் தானே ரிப்போர்டில் எழுதினேன்” என மறத்துவிட்டார்.

அடுத்தநாள் முதல் மேலாளர், ” இரண்டாவது மேலாளர் இன்று கம்பெனி பணத்தை சுருட்டவில்லை” என தன் ரிப்போர்ட்டில் எழுதினார்.

பதறிப்போய் அவரிடம் ” நீ இப்படி ரிப்போர்ட் எழுதினால் நான் மத்த நாட்களில் பணம் சுருட்டினதாக அர்த்தமாகும்’ எனக் கேட்டார் இரண்டாம் மேலாளர்.

” நானும் உண்மையைத் தானே எழுதுகிறேன் ” என்றார்.

இது உண்மையே என்றாலும் எத்தனை வஞ்சகம் நிறைந்துள்ளது என்பதை உணரலாம்.

சிம சமயங்களில் நியாயம் / அநியாயம், சரி – தவறு, உண்மை – பொய், நல்லது – கெட்டது, தர்மம் – அதர்மம் இவைகளுக்கிடையிலான வித்தயாசக் கோடு மிகவும் மெலிதானது.

இதற்கு நடைமுறை உதாரணமாகச் சொன்னால், ஒருவரிடம் கட்டாயப்படுத்தி பணத்தைப் பெற்றால் லஞ்சம்; அதையே மற்றவர் விரும்பிக் கொடுத்தல் பரிசு.

லஞ்சமா? பரிசா? என்பது கொடுத்தவரின் மனசுக்கே வெளிச்சம்.

இதுபொன்று பல விஷயங்களில், நியாயம் அல்லது அநியாயம் என வெளியில் தெரியாவிட்டாலும் அவரவர் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு மனிதரே உத்தமராக உயர்த்து பண்புகள் எவை – எவை?

அதற்கு சில கேள்விகள் :

1. பிறர் உங்கள் மீது முழு நம்பிக்கை வைக்குமளவிற்கு உங்களுடைய செயல் பாடுகள் உள்ளதா?

2. நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுகிறீர்களா?

3. உங்களைச் சார்ந்துள்ளவர்களின் மீது முழு அக்கறை எடுத்துக் கொள்கிறீர்களா?

4. பிறரிடம் எதிர்பார்ப்பதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்கிறீர்களா?

5. உங்களுடைய பொறுப்புகளை நீங்களாகவே செய்து விடுகிறீர்களா?

6. பிறருக்குத் தெரியாத சூழ்நிலையிலும் நேர்மையாக செயல்படுகிறீர்களா?

7. நீங்கள் பலனடைந்தவர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்கிறீர்களா?

8. உங்கள் பண்புகள் உயர்வானவைகளா?

9. பிறர் சொல்கிற ரகசியத்தை கட்டிக்காப்பவரா?

10. பொதுச் சொத்துக்களை உங்களுடையதாக நினைத்துப் பாதுகாப்பவரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ ஆம் ‘ என்ற பதில்கள் வருமானால்.

நினைத்தவைகளை சாதிக்க முடியும்.

எதிரிகள் தாமே ஒதுங்குவர்.

முன்னேற்றத்தை பிறர் தடுக்க முடியாது.

உறவினர் மற்றும் நண்பர்களுடன் பலமான உறவுகள் பெருகும்.

சமுதாயத்தின் நிரந்தர அங்கீகரிப்பு கிடைக்கும்.

முடிவாகச் சொன்னால் நீங்களே உத்தமர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்