![]() |
Author: யோகி இராஜேந்திரா
|
HEALTH Corner
யோகி இராஜேந்திரா, திருப்பூர்.
அன்னாசிப் பழம் சுமார் 500 ஆண்களுக்கு முன்பாக போர்த்துக்கீசியர்களால் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தமிழில் ‘ பறங்கித்தாழை ‘ என்றும் ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் ( Pine Apple ) என்று அழைப்பார்கள். அன்னாசிப்பழத்திற்கு ‘ வெப்ப நாடுகளின் ராணி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இப்பழம் பழுத்தவுடன் இதிலிருந்து வீசும் நறுமணம் நம்மைச் சாப்பிடத்தூண்டும். இதில் என்பது சதவீதத்திற்கும் அதிகமாக நீர்ப்பொருள் அடங்கியுள்ளது. தாது உப்புக் களடங்கிய இந்நீர்ப் பொருள் மனித உடலுக்கு மிகுந்த நன்மையளிக்கக்கூடியது.
நூறு கிராம் அன்னாசிப் பழம் 46 கலோரி சக்தியைத் தரவல்லது. ஆண்டு முழுவதும் கிடைக்கின்ற வகையில் சாகுபடியாகின்ற இப்பழத்தினை, பழத்துண்டுகளாகவும் ( Slice ) பழச்சாறாகவும் ( Juice ) உண்ணலாம்.
நன்மைகள்
அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து அருந்திவர உடலில் வலிமையும், அழகும் கூடும்.
உணவுப்பாதை, இரைப்பை மற்றும் குடல் பகுதியிலுள்ள தேவயற்ற கழிவுப் பொருள்களை நீக்கும்.
வாந்தி, பித்தம், தீராத தாகம், தலைவில், வயிற்று வலி, காமாலை போன்ற நோய்கள் நீங்க உதவும்.
வயிற்றிலுள்ள வாயுப் பொருள்களை அகற்றி குடல் புழுவினைப் போக்கும்.
இப்பழம் சொறி, கரப்பானை நீக்கும் தன்மை வாய்ந்து.
இரத்த சோகை, இருதயக் கோளாறுகளை நீக்கும்.
அன்னாசியிலுள்ள என்சைம்கள் செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
எனவே, உணவுக்குப்பின் சிறிதளவு அன்னாசிப் பழத்துண்டுகள் அல்லது பழச்சாறு அருந்தலாம்.
மூச்சுக்குழலில் ஏற்படும் டிஃப்தீரியா என்னும் நோயைக் கட்டுப்படுத்தும்.
உடலில் உள்ள நச்சுப்பொருட்களையெல்லாம் திரட்டி சிறுநீரில் சேர்த்து வெளியேற்றும் ஆற்றல் வாய்ந்தது.
அன்னாசிப் பழம் குரல் வளத்தைப் பெருக்கும் தன்மையுடையது.
குறிப்பு : இப்பழத்தினை அளவுக்கதிமாக உண்டால் தொண்டை கட்டுவதோடு வயிற்றுக் கொளாறுகளும் ஏற்படும்.

June 2003































No comments
Be the first one to leave a comment.