Home » Articles » அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்

 
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்


சாந்தாசிவம்
Author:

உங்களுக்காக
திருமதி. சாந்தாசிவம்

நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிந்தேன். என் நெருங்கிய சிநேகிதி, கண்களில் ஆர்வம் பொங்க, வேகமாக வந்து, கைகளைப் பிடித்தவாறு, ” ரொம்ப அருமையா இருந்தது உன் கட்டுரை, நடைமுறை சாத்தியங்களை நறுக்கென சொல்லியிருந்த விதம் மிக பிடித்துப்போனது. தொடர்ந்து எழுது வாழ்த்துக்கள் ” என்றாள்

வந்த என் சிநேகிதியின் அன்பான வார்த்தைகளைவிட, அளவின் முகம் மலர்ந்த சிரிப்பைவிட, அவள் என்னை அன்போடு இரு கைகளையும் பிடித்து ( தோழமை உணர்வின் காரணமாக ) நெகிழும்படியாகத் தொட்டுப் பேசிய உணர்வுதான் என்னை மலர்ச்சியடைய வைத்தது.

ஒருவர் நம்மைத் தோழைமையுடன் தொட்டுப் பேசும்போது அவரின்பால் நமக்கு அன்பென்ற நெருக்கம் ஆழமாக விதைக்கப் பட்டு, மறக்க முடியாதபடி செய்துவிடுகிறது. அவர் நம்மோடு ஒருவராகிவிடும்படியான நிலைக்குத் தள்ளப் படுகிறொம்.

முதன் முதலாக, அம்மாவின் அன்பான, கதகதப்பான அரவணைப்பில்தான் நம் முதல் தொடு உணர்வு வெளிப்படுகிறது. ஆரம்பமே வெளியுலகுக்கு இப்படித்தான்… என்பதற்கு முன் சிசு கருவிலேயே தாயின் கருப்பையை மிருதுவாக கைகளால் மெத்தென்றிருக்கிற உட்பரப்பைத் தொட்டு பார்த்து மகிழ்ந்து அனுபவித்து விடுகிறது.

வெளியே வந்ததும் தாயின் கைகள், அருகிலிருக்கும் சக மனித உறவுகளின் தொடுதல், அதன் படுக்கை, தொட்டில் எனத் தொடர்ந்த வண்ணமிருக்கிறுத். அப்பா, அம்மா வாங்கித் தரும் பரிசுப் பொருட்களை விட, அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கும் மழலைகளுக்கு அவைதான் மிகவும் பிடித்தமான விஷயம் என்பது நிறைய பெற்றோர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பூனைக்குட்டி, நாய்க்குட்டியை நீவிக் கொடுத்தும்தான் அவை நமக்குக் கட்டுப்படுகின்றன. குழந்தையாகட்டும் பெரியவர்களா கட்டும் அன்பாகத் தொட்டு, நம் ஸ்பரிசத்தை உணர்த்தி எதையும் புரியவைக்கும்போது, நம் முயற்சிகள் வெகு சீக்கரம் பலனைத் தருகிறது என்பது நாம் நம் அன்றாட அறியாத ஒன்று.

எல்லோருமே, ” அடியாத மாடு படியாது ” என்றே சொல்லிப் பழகித் தவறாக நடைமுறைப் படுத்தியும் வருகிறார்கள். ” அடியாதே… மாடு படியாது” இது தான் சரி என்பது என் கருத்து.

என் வீட்டு வழியே மாட்டு வண்டிக்காரன் ஒருவன், நிறைய பாரங்களை ஏற்றி, அதை அடித்து விரட்டி ஓட்டிச் சென்றான். மாடோ நுரைதள்ள தடுமாறிக் கீழே விழும் நிலை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ” யோவ் ஏய்யா அதைப் போட்டு இந்த அடி அடிக்கிற? அதுக்குக் கால் முறிஞ்சாலோ, செத்துப் போனலோ அழிவேயில்லை? அதை வெச்சுத்தானே ஜீவனம் நடத்தறே? உனக்கு அறிவில்ல? ஒழுங்கா அதுக்குத் தண்ணி காட்டினியா? வயித்துக்கு தீனிதான் வெச்சியா? ஏங்க சொல்லி உன்ன அபராதம் கட்ட வெக்கணுமோ அங்க கட்ட வெச்சிடுவேன். பிராணிகள் வதை தடுப்புத் சங்கத்துக்குச் சொல்லவா?” என்றேன்.

அவன் சிறிதும் எதிர்பார்க்காத குரல், அதிர்ச்சியில், ” இல்லம்மா, இல்லம்மா” என வண்டியை விட்டுக் கீழே இறங்கி, மாட்டைத் தட்டிக் கொடுத்துத் தடவித் தடவி, ” போடா போடா ” என்றான் அன்பாக. மாடு இப்போது மிக அமைதியாக அவனின் தொடு உணர்வுக்குள் சிக்கி அமைதியாக அவனின் தொடு உணர்வுக்குள் சிக்கி உள்வாங்கி நடந்தது. அவன் அடித்தது, அதன் பசி, களைப்பு எல்லாம் அவனுடைய தொடுகையில் காணாமல் பொனது. தீண்டும் போது இன்பம் தூண்டப்படுவது எண்ணப் பரிமாறல்களை புரிய வைக்கும் ஒரு நிலையில் தான்.

தூங்குபர்களை எத்தனை கூப்பிட்டாலும் விழிக்கமாட்டார்கள். தொட்டுக் கூப்பிட்டு எழுப்பும்போது படக்கென்று எழுந்திருப்பார்கள்.

அன்னை தெரஸா தன் புனித சேவையில் அன்புக்கு ஏங்கும் மனித உள்ளங்களை, கை, கால்கள் முடங்கிப்போன தொழு நோயாளிகளைத் தொட்டுத்தூக்கி, உணர்வுகளின் வெளிப்பாட்டை உள்ளார்ந்து தந்ததுதான் உலகை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திப் பார்க்க வைத்தது.

எப்படி? எப்படி? என்று அதற்குள் நுழைந்து பார்க்கத் தெரியாத பலரும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் ஸ்பரிசங்களைப் புரிந்து, உணர்ந்து பார்க்காத பலரும் நம்மோடு பகைவர் களாகவும், மண நோயாளிகளாகவும் இருக்கிறார்கள என்பதுதான் வேதனையான விஷயம்.

முதியவர்கள் நோயில் படுத்துக் கிடந்தால், அவர்களைத் தொட்டுப் பேசி, உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறும்போது அவர்களின் நோய் மனதளவில் குறைய நிறைய வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு, என் தாயார் உடல் நலம்குன்றி இருக்கும் சமயத்தில் நான் அடிக்கடி சென்று பார்த்து வருகிறேன். தலையைத்கோதி, கைகளைப் பிடித்து விட்டு, உடல் தொட்டு அன்பாகப் பேசும் போது, ” நீதான் எனக்கு ஒரே ஆறுதல் ” என்பார்.

இதை என் அருகிலிருக்கும் என் உடன் பிறப்புக்களுக்குப் புரிந்துகொள்ளத் தெரியாது. பலரிடமும் சொல்லிச் சொல்லி, பின் என் முகத்துக்கு நேரே, ”நீங்க என்ன மந்திரம் போடுறீங்க? நீங்க வந்தா கப்சிப்னு ஆயிடறாங்க. இல்லேன்னா கத்தல், ஆர்ப்பாட்டம்தான். எல்லோரையு திட்டித் தீட்டித் தீர்க்கறாங்க, உங்களைப் பார்த்துமே எப்படி அமைதியே இருக்காங்க?” என்ற கேள்வி பலரிடமிருந்தும்.

பலருக்கும் இதைப் புரிந்து கொள்ள நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. பிறரைத் தொட்டுப் பேச முதலில் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். அவர்கள்தான் தொட்டுப் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். பெண்கள் தான் அதிக அளவில் தொட்டுப் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் ( பெண்களைத்தான் ) என்பது ஆய்வின் உண்மை. தொடு உணர்வின் நுட்பமும் பெண்களுக்குத்தான் அதிகம்.

” தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும். கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்” என்ற பாடல் வெறும் காதலன் காதலி பாட்டு மட்டுமல்ல எல்லா மனித உறவுகளுக்கும் பொருந்தும்.

” தொட்டால் பூ மலரும் ” என்ற வரிகள் உண்மை என்றால், இப்போது சொல்லப் போகும் விஷயமும் உண்மைதான். என் சிநேகிதி, பல வருடங்களுக்கு முன் தென்னங்கன்றுகளை நாட்டு அவற்றைத் தன் அருமைக் குழந்தைகளாகப் பாவித்துத் தாயன்போடு தட்டிக் கொடுத்தும் தடவிக் கொடுத்தும் வளர்த்தார்.

பல வருடங்களாகவே தென்னை மரத்தைத் தட்டித் தடவி அன்பாகவும் செல்லமாகவும், ” சமையலுக்குத் தேங்காய் வேணும்பா” என்றதும் தேங்காய் விழுகிறது. இன்றுவரை ஒரு தேங்காய்கூட மரத்தில் ஆள் ஏறிப்பறித்ததில்லை. தேங்காயும் மரத்தின் கீழுருக்கும் பூந்தொட்டிகளை உடைக்கவோ அல்லிக் குளத்தை சேதப்படுத்தவோ செய்யாமல் தரையில்தான் விழும். இந்த அதிசயம் தினம் நடக்கும் ஒன்று.

நம்ப முடியாத்தெல்லாம் ஆச்சரியம், அதிசயம் என்ற வார்த்தைகளில் அடங்கும். உச்சக்கட்ட அன்பின் வெளிப்பாடு தொடுதலே, தொடுகையும் அரவணைப்பும் அன்பு எனும் உயர்ந்த பரிசைத்தரும் வெளிப்பாடுகள்.

தொடக்கூடாத உறவுகளும், நேரங்களு உண்டு. அங்கெல்லாம் அன்பைக் காட்டுகிறேன் என்று தொட்டுவிட்டால் பதிலுக்கு அவர்களும் தொடுவாரகள் ‘ பலமாக ‘, ஜாக்கிரதை தீண்டினால் இடங்களில் ஆண் பெண்ணைத் தீண்டினால் அப்புறம் பல கைகள் முதுகைப் பதம் பார்த்து விடும்.

பிறரிடம் உங்கள் அன்பு வளரத் தீண்டுங்கள்
பிறர் உங்களிடம் அன்பாய் இருக்கத் தூண்டுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்