Home » Articles » வெற்றிக்கு ஒரே வழி

 
வெற்றிக்கு ஒரே வழி


admin
Author:

நிறுவனர் பக்கம்
டாக்டர். இல.செ. கந்தசாமி

வெற்றியான, வளம் மிகுந்த, புகழ் வாய்ந்த வாழ்க்கை வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு. அதற்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது தங்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொள்வதுதான்.

தகுதியிம் அடிப்படையில் வராத வெற்றியும், வளமும், புகழும் தற்காலிகமானவையாகவே இருக்கும்; அல்லது நிலைத்து நில்லாது குறுகிய காலத்தில் அவை மறைந்துபோகும். மறைந்து போவதோடு மனத் துன்பத்தையும் சேர்த்துத் தந்து விட்டுப் போகும்.

தகுதியின் அடிப்படையில் இல்லாமல், குறுக்கு வழியில் உயர்ந்த சிலரை எண்ணிப் பாருங்கள் உண்மை புலனாகும்.

அதனால் நிலைத்த வெற்றி பெற வேண்டுமானால், நாம் நம் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர்த்திக் கொள்ள வேண்டும்.

தகுதிகள் என்றதும் பி.ஏ., எம்.ஏ., மட்டும் தான் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நாம் எங்கும் செல்லாமலே நம்மையே நாம் தகுதியிடையவர்களாக ஆக்கிக் கொள்ளலாம்.

சிலரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம்?

அவர் நல்ல எண்ணம் உடையவர், அவர் மனத்தாலும் பிறர்க்கு தீங்கு நினைக்க மாட்டார் என்று சொல்கிறோம்.

அவர் ஒருபோதும் இப்படிக் கீழ்த்தரமாகப் பேசமாட்டார். அவர் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரவே வராது என்று ஒரு சிலருக்காக நாம் வாதாடுகிறோம்.

ஒரு செய்தியைக் கேட்டவுடன், அவரா! நிச்சயம் அவர் அதைச் செய்திருக்க மாட்டார். யாரோ வேண்டுமென்று பழி சொல்கிறார்கள். நான் பந்தயம் கட்டுகிறேன் என்று அவர்மீது உள்ள நம்பிக்கை ஒருபடி மேலே சென்று நம்மைச் செயல்படத் தூண்டுகிறது.

மாறாக இன்னும் சிலரைப்பற்றி…

அவர் நல்லதையே நினைக்க மாட்டார், பிறரைத் துன்பப்படுத்துவதில்தான் அவருக்கு மகிழ்ச்சி, அவர் வாயிலுருந்து ஒரு நல்ல சொல்கூட வராது, நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்.

இவர் இருக்கிறாரே எதில் என்ன கிடைக்கும், எதில் எப்படுச் சுண்டலாம்? என்றுதான் பார்ப்பார். அழகிய பெண்கள் இவர் கண்ணில் பட்டால் ஒழிந்தார்கள் – இப்படிச் சிலரைப் பற்றி நாம் எண்ணுகிறோம். கணித்து வைத்திருக்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட கால அளவு பழக்கம் பிறரைப்பற்றி, நம்மைப்பற்றி இப்படி எண்ண வைக்கிறது. இதே போல் நம்மைப்பற்றி மற்றவர்களும் எண்ணுவார்கள் இல்லையா? ஒரு கணக்குப்போட்டு வைத்திருப்பார்கள் இல்லையா?

சிலர் உங்களோடு பேசும்போது, ” நீ பெரிய ஆளையா” என்று சொல்கிறராகளே ஏன்? ” நீ எப்போதும் இப்படித்தான் ” என்று உங்கள் நண்பர்கள் குறைபட்டுக் கொள்கிறாரே எதனால்? ” தம்பி இது நியாயமில்லை” என்று சிலர் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்களை எதனால்?

நம்மைப் பற்றி பிறரும் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதுதானே பொருள்.

நம்மீது பிறருக்குத் தவறான எண்ணம் எப்படி வருகிறது? நம் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி ஒரே மாதிரி கருத்தையே சொல்கிறார்களே ஏன்?

நம்முடைய நீண்ட நாள் எண்ணம், நமது இயல்பான பேச்சு, நமது அன்றாட நடைமுறைகள் இவைகள் எல்லாம்தான் பிறர் நம்மைப் பற்றி இவ்வாறு எண்ணச் சொல்கிறது.

படிப்பிலும், தொழிலிலும், பிற தகுதிகளிலும் உயர்ந்து இருந்தாலும் அவை முழு வெற்றியை நல்காது. அதனால் நம் தகுதிகளில் எல்லாம் அடிப்படைத் தகுதியான எண்ணம், சொல், செயல் இவற்றை நாம் சரி செய்து கொள்ளவும் செம்மைப்படுத்திக கொள்ளவும் வேண்டும். மறு ஆய்வு செய்யவேண்டும்.

அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அவ்வாறு செய்தால் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம், வளம் பெறலாம், புகழ் பெறலாம், மன நிறைவோடு வாழலாம்.

————————————————————————————————-
டாக்டர். இல.செ.க. அவர்கள் எழுதிய ” வெற்றிக்கு ஒரை வழி” என்ற நூலிலிருந்து….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்