Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

புருஷோத்தமன்

சராசரி மனுஷங்களை மட்டுமல்லாம, சமூகத்திலே அந்தஸ்தான ஆட்கள் கூட ‘ கந்துவட்டி’ ங்கிற குழியிலே விழுறாங்க. இது வரைக்கும் அதுபற்றிப் பேசாதவங்களும் பேசத் தொடங்கிட்டாங்க.

நான் பொதுவாச் சொல்கிறேன், பணம்னா அது பெருகணம்சிங்கிற ஆசை எல்லாருக்குமே வரும்.

ஒரு தொழிலேயே முதல் போட்டா பெரிசா வளரும். வங்கியிலே போட்டா வட்டி கிடைக்கும். அதே மாதிரி வட்டிக்குக் கொடுக்கற போதும் பணம் பெருகும். அதுவரைக்கும் சிர ஆனா, என்ன வட்டி, எவ்வளவு சதவிகிதம், எப்படி வசூல்னு எல்லாம் யோசிக்கிற போதுதான் சிக்கல் வருது.

நான் பொதுவாச் சொல்கிறேன். ” பணத்தைப் போதுமான அளவு சம்பாதிச்சுட்டேன்” அப்படீன்னு யாருமே சொல்றது கிடையாது. மனநிறைவுங்கறது பண விஷயத்தில் நாமா ஏற்படுத்திக்கணும்.

” செல்வம் என்பது என்ன? ” 5 லட்சமா, 50 லட்சமா, 5 கோடியா, 50 கோடியா? ” செல்வம் என்பது சிந்தையின் நிறைவு” அப்படீன்னு குமரகுருபரர் சொல்லியிக்காரு.

நம்மை வாழ வைக்கிற பணம் அடுத்த வங்க உயிரைக் குடிச்சுட்டு வரக் கூடாதுங்கிற குறைஞ்ச அக்கரை இருந்தாலே போதும. ‘ கந்து வட்டி’ தானாவே மறைஞ்சுரும்.

நான் பொதுவாச்சொல்றேன். மன மாற்றம் ஏற்படணும்னு நாம ஆசைப்படலாமே தவிர, எல்லாருக்கும் அது ஏற்படும்னு எதிர்பார்க்க் முடியாது.

அரசாங்க சட்டங்கள் இன்னும் தீவிரமாகணும். வாங்கியானாலும் சரி, தனியாரானாலும் சரி, என்ன விகிதம் வட்டி வாங்கணும்னு அரசே நிர்ணயம் செய்யணும். அதுக்கு மேலே வட்டி வாங்கினா கடுமையான தண்டனைன்னு சொல்ற அளவுக்கு வந்தாத்தான் இந்தப் பழ்க்கம் ஒழியும்.

நான் பொதுவாச் சொல்கிறேன், ஆத்திர அவசரத்துக்குதான் கடன் வங்கறாங்க. எப்பாடு பட்டாவது வாழ்த்து கட்டணும்கிற ஆசையில கடன் வாங்கினவங்களுக்கு, அந்தக் கடன் காரணமாவே நீத்தார்கடன் செய்யற அளவுக்குப் போறாது எந்த வகையிலே நியாயம்? நினைச்சுப் பாருங்க.

வட்டி விகிதத்தில்
வரைமுறை காண்போம்!

தற்கொலை இல்லாத்
தலைமுறை காண்போம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்