Home » Articles » சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்

 
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்


admin
Author:

டாக்டர் பெரு. மதியழகன்

நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முன்பு அணுகி ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆராய்ந்து பார்க்காமல் நட்பு கொள்வது போல கேடு விளைவிக்கக் கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் நட்பு ஓர் ஆதாரமாக இருப்பதால் இதில் மிகவும் கவனம் எடுத்துக்கொள்ள வெண்டியுள்ளது.

நட்பு ஆய்தல்

நமது குறிக்கோள்களை அடைய, உலக சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அல்லது அந்தத் துறையில் வெற்றி பெற்றவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள, அவர்தம் வாழ்க்கை அனுபவங்களால் படித்தறிவது போல நாம் வரையறுத்துள்ள குறிக்கோளை அடைவதற்கு ஏற்ற நண்பர்களைத் தேடிப் பார்த்து, அலசி ஆராய்ந்து பார்த்து ஏற்க வேண்டும். இல்லையென்றால், தகுதியற்றவர் தம் நட்பும், ஆராயாமல் கொள்ளுகிற நட்பும் ஒருவரைப் படு பாதாளத்தில் தள்ளிவிடும்.

மண்ணும் இலையும்

சில ஆண்களுக்கு முன்பு வானொலியில் கேட்ட ஒரு கதையை இங்கு குறிப்பிடவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

காய்ந்து போன இலை ஒன்றும், ஒரு மண்ணாங்கட்டியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனவாம்.

ஒரு நாள் இவை இரண்டும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தன. ” நாம் இப்படியே இருந்துகிட்டு இருக்கோமே! போற வழிக்குப் புண்ணியம் தேடிக்க வேணாம? ” ன்னு கேட்டது இலை.

” தேடிக்க வேண்டியதுதான் ! அதுக்கு என்ன பண்ணலாம்?” என்றது மண்ணாங்கட்டி!

வேற என்ன செய்யறுது? மனிதர்கள் புண்ணியம் தேடிக்கிறதுக்கு என்ன செய்யறாங்க ? காசிக்குப் போறாங்க! அதே மாதிரி நாமும் காசி யாத்திரை போக வேண்டியதுதான்” என்று சொன்னது இலை!

சரி புறப்படுவோம். ஆனா நீயோ இலை! நானோ மண்ணாங்கட்டி! நாம இரண்டு பேரும் காசிக்குப் பொறதுன்னா… வழியிலே நிறை இடைஞ்சல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றது மண்ணாங்கட்டி.

நீ சொல்றதும் நியாயமாத்தான்படுவது என்று இலை ஆமோதித்தது.

” காசிக்குப் பயணம் போகுற வழியில ஏதாவது இடையூறு வந்தா இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்துக்கிறதுன்னு” இருவரும் கடைசியா ஒரு முடிவுக்கு வந்தாங்க.

இவ்வாறு ஒப்பந்தம் செஞ்சுக்கிட்டு இரண்டும் புறப்பட்டதுங்க. கொஞ்ச நாள் பயணம் சிக்கல் இல்லாம்ப் போச்சு.

ஒரு நாள் கடுமையான காற்று வீச ஆரம்பிச்சது! இலைக்கு இடையூறாப் போச்சு. மண்ணாங்குட்டி இதைப்பார்த்தது. உடனே அந்த இலை மேலே போய் ஏறி உட்காரந்து கொண்டது. அதனால இலையைக் காற்று அடித்துக் கொண்டு போக முடியவில்லை. மண்ணாங்கட்டி இலையை காப்பாற்றிவிட்டது.

காற்று வீசுவது நின்றது. ஆனால் மழை பெய்யத் தொடங்கியது. உடனே இலை என்ன செய்தது…. மண்ணாங்கட்டி மேலே ஏறி அமர்ந்து கொண்டது. அதாவது மண்ணாங்கட்டி மேலே குடையா போய் மூடிக்கொண்டது. அதனால் மழைத்துளியில் மண்ணாங்கட்டிக் கரைந்து விடாமல் தப்பியது.

இதனால் இரண்டுக்கும் மிகவும் மகிழ்ச்சி. ” பாத்தியா ! நாம ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு ஒத்தாசையா இருக்கிறோம்!” என்று பேசிக் கொண்டன. மிகவும் உற்சாகமாக காசிப் பயணம் தொடர்ந்தது. அடுத்த நாள் காற்றும் மழையும் சேர்ந்து அடித்தது. இலை பறந்து போனது. மண்ணாங்கட்டி கரைந்து போனது.

காற்றில் பறந்து போன இலை ஒரு கற்குவியல் மேல் விழுந்தது. அங்கே இருந்த ஒரு கருங்கல்லிடம் இலை தன்னுடைய நிலையைச் சொல்லி புலம்பியது. ” மண்ணாங்கட்டிக் கரைஞ்சு போச்சு, நான் என்ன செய்யறது” என்று வருந்தியது.

அதற்கு அந்தக் கருங்கல் சொன்னது, ”உங்க நட்பு சரிதான். ஆனா காசிக்குப் போகணும்ங்கற உன்னோட குறிக்கோள் நிறைவேறணும்னா… நீ என்ன மாதிரி ஒரு கருங்கல்ல நண்பனா தேர்ந்தெடுத்திருக்கணும்!” என்றது.

கதையின் கருத்து

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது என்ன?

எண்ணியதை எண்ணியாங்கு வெற்றி கரமாக முடிக்க – குறிக்கோளை அடைய – அதற்கு ஏற்ற நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்