Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


ஜெயகாந்தன்
Author:

மரபின் மைந்தன் ம. முத்தையா

”திடீரென்று நள்ளரவில் படுக்கையில் எழுந்து கார்ந்து தொண்டு ‘வீட்டுக்குப் போகணும் ‘ என்று ஆரம்பிப்பேன். மறுநாள் கொண்டுபோய் விடுவதாகக் கூறி சமாதானம் செய்து தூங்க வைப்பார்கள். மறுநாள் காலையில் அதற்காக என்னைப் பரிகாசமும் செய்வார்கள் ”என்று குறிப்பிடுகிறார்.

‘ஜனசக்கதி ‘ இதழில் பணிபுரியத் தொடங்கி மாபெரும் எழுத்தாளராக மலரந்த ஜெயகாந்தன், தன்னுடைய பாதையைது தானே வகுத்து வெற்றியடைந்தவர்.

‘சில நேரங்களில் சில மனிதனர்கள்; ‘கழுத்தில் விழுந்த மாலை’ போன்ற சமூகப்பார்வை மிக்க நாவல்கள் இப்போதெல்லாம் எழுத்ப்படிவதேயில்லை.

சமூகம் மீன அக்கறையும், தெளிந்த சிந்தனையும் கூர்மையான எழுத்து நடையும் வாய்க்கும் போது சமூக வளர்ச்சிக்கு எந்த அளவு வழிகாட்ட முடியும் என்பதற்கு சரியான உதாரணம் ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.

தன் நீண்ட அனுபவத்தின் விளைவாக, தன் வாழ்க்கை குறித்து ஆறு தீர்மானங்களை ஒரு காலகட்டத்தில் அவர் அறிவித்தார்.

1.) எந்த அரசியல் கட்சியிலும், ஆன்மீக மடத்திலும் நான் அங்கம வகிக்க மாட்டேன்.

2. உண்மையாராகவும் நேர்மையாகவும் வாழ்கிற தகுதியைத் தவர இன்றைய சமூகத்தில் நிலவுகிற பொய்யான கௌரவங்களுக்கும், பதவிகளுக்கும் நான் ஒரு போதும் ஆசைப்பட மாட்டேன்.

அப்படி ஆசைப்படுகிறவர்கள் எது மக்களேனாலும் அவர்களை அந்நியர்கள் போலக் கருதுவேன். எனது பராமரிப்பில் இருக்கிறவர்களை வியாபாரம், கமிஷன் வாங்குதல், வாடகைக்கு விடுதல், கடன் வாங்குதல் வட்டி ஈட்டுதல், பிறரைத் தூற்றிப் பிழைப்பது போன்ற நமது சமூகத்தின் இழிந்த பாதைகளிலிருந்து இயன்றவரை அன்பினாலும் அல்லது என் வலிமையைப் பிரயோகித்தும் முதலில் நான் தவிர்க்க முயல்வேன். முடியாதபோது அவர்களை விலக்குவேன். அல்லது விலகுவேன்.

3.) பதவி, பட்டம், வெகுமதி, செல்வம் இலை தேடாமலும் வரும். வருவதை யெல்லாம் நான் அங்கீகரிக்க மாட்டேன். எல்லைகளைக் கறாராகத் தீர்மானித்தே ஏற்பேன்; அல்லது மறுப்பேன். எனக்குப் பட்டம் வேண்டும் என்கிற பிராயம் வருகிற பொழுது என் தகப்பனாருக்குரிய பட்டமாகிய ‘ பிள்ளை ‘ என்கிற பிராயம் சாதி குறித்தோ இழிவான எண்ணத்தைப் பிறர்க்கோ என் மக்களுக்கோ நான் உருவாக்க மாட்டேன்.

4.) என் மக்களும், எனது வம்சமும் நல்ல தொழிலாளியாக மாறி நாட்டோடு சேர்ந்து நல்வாழ்வு வாழ்வதே எனக்குச் சம்மதம். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு வந்த பிறகு அந்தச் சமூகத்தில் என் மகனோ, மகளோ கலைத்துறையில் சிறந்து விளங்குவது எனக்குச் சம்மதமே.

5.) ஆயினும் தற்காத் தமிழ்த் தமிழ்ச் சமுதாயத்தில் எனது மக்கள், கலைஞர்களாக ஆவது எனக்கோ, எனது மக்களின், சாதியினரின் எதிர்காலத்துக்கோ உதவாது, பெருமை தராது என்பதால் அவர்கள் ஆண்களாயின் தொழிலாளர்களாகவும், பெண் மக்களாயின் அந்த தொழிலாளியின் சிறந்த மனைவியராகவும் வணங்கத்தகுந்த அன்னையராகவு ஆதல் சிறந்தது. அல்லாமல் அவர்கள் எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் ஆகிப் ‘ புரட்சி ‘ யை எழுதியும் நடித்தும் புரட்சிக்குப் பொருந்தாத வகையில் இந்தச் சமூகத்தோடு சம்பந்தப்பட்டு ‘ புட்டுக்காரர்’ களாக மாறும் சாபத்திலிருந்து இறைவன் எனது உறவுகளையும் தமிழ்ச் சாதியையும் காப்பாற்றட்டும்!

6.) இந்தியாவும் தமிழகமும் ஒரு சோஷலிச சமுதாய அமைப்பே மேற்கொள்ளுகிற பக்குவத்தை நெடு நாட்களாகவே, பெற்றுக் காத்துக்கிடக்கிறுது! இங்கு மிக மிகத் தேவையானதும் இந்த மண்ணின் பக்குவத்துக்கு உகந்ததும், ஓர் அவசியமும் அவரமும் ஆகிய ‘சோஷலிச சமூக அமைப்பு ‘ ஒருவேளை இங்கு இறக்குமதி செய்யப்பட்டும் விடலாம்.

தனிப்பட்ட முறையில் எழுத்தாளர் என்கிற செல்வாக்கையும் மக்கள் அபிமானத்தையும் கண்கூடாகக் கண்டு அவற்றில் மத்தியிலேயே வாழ்ந்துவரும் எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர்.

புகழுரையோ, இகழுரையோ அவர் கொண்ட உறுதியை ஒரு நாளும் குலைத்ததில்லை.

இப்போதெல்லாம் அபூர்வமாக எழுதினாலும், அவருடைய எழுத்துக்களில் சத்தியம் சுடர்வீசுவதைக் காண்கிறோம்.

சான்றாக ஒரு கட்டுரை.

”இந்தியா என்னும் தேசம் இருக்கிறது. இந்தியன் என்று யாரும் இல்லையே. தமிழன், வங்காளி என்று மொழிவழியாகத்தான் ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். அதுவும் இக்காலத்தில் மதம், சாதி வழியாகத்தான் இந்த நாட்டு மக்கள் கணிக்கப்படுகிறார்கள். இதில் இந்தியன் என்பவன் யார்?” என்று ஒரு நண்பர் கேட்கிறார்.

இந்தக் கேள்வியை ஒரு அமெரிக்கரைப் பார்த்துக் கூடக் கேட்கலாம். நியூயார்க், நியூஜெர்ஸி, கலிபோர்னியா, டெக்ஸாஸ் என்று பல மாநிலங்களாகத் தான் இருக்கிறதே தவிர, அமெரிக்கர்கள் என்போர் லண்டனிலிருந்தும் ஸ்பெயினிலிருந்தும் வந்தவர்கள் என்று அவர்களின் பூர்வோத்திரத்தை அறியலாம். இதில் அமெரிக்கன் என்பவர் யார்?

‘தேசமன்டா மண்ணு காது; மனுஷூலு’ என்றொரு தெலுங்குக் கவிதை உண்டு. தேசமென்பது மண்ணல்ல; மனிதர்க்ள. இவ்வளவு வேற்றுமைகளிலிருந்து ஒற்றுமை என்பது உருவாகும் ஒரு மனித நாகரிகத்தின் பெயர்தான் இந்தியா என்பதும் இந்தியர் என்பதும்.

இந்தியா எப்படி இருக்கிறது? பல மொழி பேசுகிறவர்களாக, பல கருத்தோட்டம் உடையவர்களாக, பல மதங்களையும் மார்க்கங்களையும் சார்ந்தவர்களின் சங்கமமாக, பல வர்க்கங்களும் சாதிகளுமாகப் பலபடப் பிரிந்திருக்கும் ‘ நாங்கள் அனைவரும் ஒன்று ‘ என்று நிரூபிக்க முடியுமானால் அதுவே நம் இந்தியா என்று ஆராய்ந்து அறிவது எனது சுய தரிசனத்துக்கு இன்றியமையாதது ஆகிறது.

இந்த இந்தியர்களையும் இந்தியனையும் எது உருவாக்குகிறது என்பதற்கு நமது இலக்கியம், நாகரிகம், பண்பாடுகள், கலாசாரங்கள், வாழ்வியல், நம்மோடு வாழ்ந்து வரும் கோடானு கோடி மக்கள் வாழ்க்கைகளே சாட்சியங்கள். இந்த இந்தியக் தன்மையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும், இதனை மேலும் செழுமைப்படுத்துவதும் இலக்கியவாதிகளின் கலைஞர்களின் கடமையாக வழிவழியாக வந்து நமக்கு வழி காட்டுகிறது.

இந்தியாவில் எல்லாக் காலத்திலும் காவியங்களும் கவிதைகளும் முற்போக்காகத் தான் இருந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய முற்போக்கு இலக்கியங்களும் உண்டு. அதே காலத்தில் தோன்றிய பிற்போக்கு இலக்கியமும் உண்டு. இந்தியாவில் இரண்டுக்கும் இடம் உண்டு; எதுவும் ஒழித்து விடுவதில்லை.

வேற்றுமை என்பதும் ஒற்றுமை என்பதும் பிற்போக்கு என்பதும் நாம் உருவாக்குவது அல்ல. அது ஏற்கனவே வேர் கொண்டுள்ளது. காலத்திற்கு எற்ப அதில் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளி நாம் அதைக் கட்டிப் பாதுகாக்கிறோம். மேலும் செழுமையாக்குகிறோம்.

எனவே, ஒவ்வொரு காலத்திலும் நமக்கு இந்தக் கடமை தொடர்கிறது. ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு எடுத்துச் செல்கிற, சொல்கிற அவசியம் இருக்கிறது.

இந்த தேசத்தின் வரலாற்றை, மனித வாழ்க்கையை, நாம் அறிந்தவற்றை என்னுடைய குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வேனோ, என்னுடைய சகோதர சகோதரிகளோடு எப்படிப் பகிர்ந்து கொள்வேனோ அப்படி இந்தச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவே நமது படைப்புகள்.

இந்தப் பொறுப்பை நான் ஏற்கிற பொழுது இந்த பேதங்களையெல்லா கடந்த நடுநிலையில் நின்று பார்க்கிற பார்வை இருந்தால்தான் நான் படைப்பாளியாக இருக்க முடியும். அதுவே இந்தியப் பார்வை.

(முகங்களில் சந்திப்பு தொடரும்….)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்