இந்திய பாகிஸ்தான் உறவுகளில் மறுமலர்ச்சிக்கான அடையாளங்கள் அரும்பியிருக்கின்றன. திரும்பிப் பெற்ற தூதர்களை விரும்பி அனிப்பும் காலம் வந்துவிட்டது. அமைதிக்கு அமெரிக்கா ஆசைப்படுவது போல் காட்டிக் கொள்கிறது. எனினும் அதனை இந்தியாவும் பாகிஸ்தானும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வெண்டும்.
ஒருபுறம் அமைதிக்கான அஸ்திவாரம், மறுபுறம் தீவிரவாத அணுகுமுறைக்கு ஊக்குவிப்பு என்கிற அணுகுமுறையை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டால், ஆக்கப்பூர்வாக முன்னேற்றங்களை எட்டிவிட முடியும்.
இத்தனைக்கும் மத்தியில் இந்தியா தன் நிதானமான அணுகுமுறையில் உறுதியாக நிற்பது பாராட்டுக்குரியது. தற்காப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறதே தவிர, ஒருபொதும் இந்தியா சீண்டிவிடும் முயற்சியில் இறங்கியதில்லை.
கல்வி வளர்கிறது, அறிவியல் வளர்கிறது. உலகளாவிய ஒருங்கிணைப்புகள், மனித குலத்தின் பொது மேன்மைக்காக அவசியமாகின்றன.
இந்தச் சூழலில், அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு நாடுமே முன்வரவேண்டும்.
எப்போதும் போல் இந்தியா இப்போதும் வழிகாட்டுகிறது.
நல்லுறவுக்கான நம்பிக்கையுடன்
ஆசிரியர் குழு

June 2003































No comments
Be the first one to leave a comment.