சூரியன், மனதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.
சிங்கப்பூரில் எனது நண்பர் திரு. அழகேசன் பொறியானராக இருக்கிறார்.
நான் சிங்கப்பூர் சென்றிருந்த பொழுது அவருடைய அனுபவங்களைக் கேட்டேன். அவர் ஒரு சில ஆண்டுக்ள சிங்கப்பூர் ஏர்போர்ட் பராமரிப்புப் பொறியாளராக இருந்திருக்கிறார். அப்போது அங்கு ஒரு சின்ன பழுது ஏற்பட்டு இருந்தது. தன்னுடைய பணியாளர்களை வைத்து மிக விரைந்து சரிசெய்துவிட்டாராம்.
அதன்பிறகு, அவரது மேலதிகாரி அவரை அழைத்து கீழ்க்கண்டவாறு சொன்னார்,
”நீங்கள் விரைந்து சரி செய்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால், இந்தப்பிச்சனை ஏன் வந்தது? இனி இந்தப் பிரச்சனைவராமல் இருக்க நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பதைப் பற்றியெல்லாம் விரிவான ரிப்போர்ட் கொடுங்கள்” என்று.
இந்தச் சம்பவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்கின்ற கருத்து என்னவென்றால், ”வாழ்க்கையிலும், தொழிலிலும் வருகின்ற பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். அதே சமயத்தில் பிரச்சனைகள் ஏன் வந்தன? என்ற காரண, காரியங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இனி பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்” என்பது பற்றிய விழிப்புணர்வுடன் செயல்படண வேண்டும்.
நண்பர் அழகேசன் சொன்னார், ” கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறை கூட மின்சாரம் பவர்கட் ஆனதில்லை. அந்த அளவிற்கு தெளிவாக பராமரிப்பு செய்கிறார்கள்” என்றார்.
மலேசியாவில், கோலாலம் பூரில் உலகத்திலேயே உயர்ந்த கட்டடமான Twin Towers – க்கு பலமுறை சென்று பார்த்தேன்.
கட்டடக் கலையின் சிறப்பை அதில் காணலாம்.
எவ்வளவு உயரமான கட்டிடம்! அந்தத் கட்டிடத்தின் பெரிய ” ஷேர் ஹோல்டர்” அனந்தகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர். அவர் மலேசியாவின் மூன்று பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவர் தனது 5-ம் வகுப்பு வரை தமிழ்ப்பள்ளியில் படித்தவர்.
பினாங்கு என்பது ஒரு தீவு. அங்கு செல்வதற்கு கடலில் நீண்டதொரு பாலம் இருக்கிறது. பினாங்கிற்கு தரைமார்க்கமாக அந்தப்பாலத்தின் வழியே செல்லலாம் அல்லது கப்பல் பயணம் மூலம் செல்லலாம்.
பினாங்கு பல்கலைக் கழக வளாகத்தில் மூன்று நாட்கள் மாணவர்களுக்குப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப் பயிற்சி முகாமிற்கு ஒருமுறை காரில் பலாம் வழியாகச் சென்றோம். இன்னொரு முறை கப்பலில் அழைத்துச் சென்றார்கள். அப்போது கரையோரத்தில் கப்பல் நின்றிருந்தது. காரில் நேராகக் கப்பலுக்குள்ள சென்று, காரை விட்டுவிட்டு, கப்பலில் அமர்ந்தோம். அக்கரைக்குச் சென்ற பிறகு, கப்பலில் இருந்தே காரில் ஏறி பினாங்கு சென்றோம். நல்ல அமைப்பு!
சில பெரிய கட்டிடங்களில், வளைந்து வளைந்து காரில் மேலே செல்ல்லாம்! அங்கங்கு கார் நிறுத்துமிடம் உள்ளது. அங்கே ” பார்க்” செய்யலாம்.
வியாபாரத்திலும் , தொழிலிலும் முன்னேறி மிக நல்ல நிலையில் இருக்கின்ற பல தமிழர்களை பேட்டி எடுத்தேன். அவர்களின் வெற்றி ரகசியங்களின் சுருக்கம்.
1. உழைப்பு – உழைப்பு – உழைப்பு.
2. முன்னேறி நல்ல நிலையை அடைந்து விடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
3. சிலபேர் அதிக கல்வி இல்லவிட்டால் கூட தேவையான அளவுக்கு மொழியைக் கற்று தாழ்வு மனப்பான்மை இல்லாமல் எல்லோரிடமும் நன்கு கலந்துரையாடும் நிலையை அடைந்து அந்தத் தடையை உடைத்தது.
4. தொழிலில் மிகுந்த திறமை.
5. ”சந்ததியர் நல்ல கல்வி பெற்று பொருளதாரச் சுகந்திரத்துடன் நன்கு வாழ வேண்டும்” என்ற தியாக எண்ணம்.
6. ”பேட்டி உலகத்தில் தொடர்ந்த விழிப்புணர்வுடன் அக்கறையுடன் – செயல்பட்டு வெற்றியடைந்து அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்” என்ற தீவிர எண்ணம்.
இந்த உலகில் எல்லாம் உள்ளது. நல்ல உள்ளங்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களிக்குக் கூட உதவி செய்து அன்பு செலுத்தும் மனிதர்கள் நிறைந்தது இவ்வுலகம்.
நாம் நல்ல மனத்துடன் வாழும் போது அத்தகைய உள்ளங்களின் தொடர்பு எங்கு போனாலும் கிடைக்கும். இது ஓர் வாழ்வியல் உண்மை.

May 2003




























No comments
Be the first one to leave a comment.