Home » Articles » எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!

 
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!


இராமநாதன் கோ
Author:

மனதை உற்சாகப்படுத்துங்கள்

வெற்றியின் மனமே…
தொடர்
டாக்டர் ஜி. இராமநாதன்

போட்டியாளர்கள் அதிகம்; எல்லாத்துறைகளிலும் நிறைய அளவில் உருவாகி விட்டார்கள். இனிமேல் நான் ஈடுகொடுக்க முடியுமா?

விலைவாசிகள் மலையேறிவிட்டன. அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு பை நிறைய வாங்கினேன். இப்போ அது முடியுமா? அந்தக் காலத்தில் ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய் தான். இப்போ பல ஆயிரங்கள்.

இப்படிப்பட்ட வார்த்தைகளை பலரும் பேசுவதை அவ்வப்போது காதில் கேட்கலாம்.

இப்போதும் கேட்கலாம்.

எதிர்காலத்திலும் கேட்கலாம்.

அப்படியென்றால் இவ்வார்த்தைகளின் அர்த்தங்கள் சரியா?

மேலோட்டமாகப் பார்த்தால் ” சரி ” என்று சொல்லலாம்.

ஆனால், முழுமையாக ஆராய்ந்தால், அது சரியில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

எப்படி?

அதுதான் வளர்ச்சியின் அடையாளம்

– காலத்தின் வேகம்.

– மாற்றங்களின் தோற்றம்.

உதாரணத்திற்கு, பொறியியல் துறையை எடுத்துக்கொண்டால், ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் ஒவ்வொரு பிரிவிலும் உருவாகிறார்கள். ஆனால், அதன் மறுபுறத்தில் ஆயிரக் கணக்கானோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே வருகின்றன.

விவசாயத் தொழில்களிலும் நீர்வளம் குறைந்ததை ஒப்புக்கொண்டாலும் அவை சம்பந்தப்பட்ட தொழில்கள் முன்பைவிட அதிகமாகவே உண்டாகிவிட்டன.

கிராம்ப் புறங்களுக்கு இவை பொருந்துமா?

கிராமங்களில் உள்ள தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு சமுதாயக் காரணங்களைச் சொன்னாலும் அங்குள்ளவர்களுக்கு முன்பை விட இப்போது வாய்ப்புகள் அதிகம் தான்.

வளர்ச்சி என்றால் என்ன?

போட்டிகள் அதிகமாவது.

விலைகள் அதிகமாவது அல்லது குறைவது.

புதிய வகை இயந்திரங்கள் நடைமுறைக்கு வருவது…

……………………..

……………………..

போன்ற பல்வேறு அம்சங்கள்தான்.

இந்த வளர்ச்சி உலக இயக்கத்தின் தொடர்ச்சி

இதனால்தான் உலகம் மாறி வளர்ந்திருக்கிறது.

இதை ஏற்காமல் வாழ்ந்திருந்தால் மனிதன், கற்கால வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும்.

சரி, இதை ஏற்றுக் கொண்டாலும், மனம் அவ்வப்போது நம்பிக்கையை இழந்து தளர்ந்து விடுகிறதே! என்ன செய்வது?

இங்கு இரண்டு அம்சங்களை ஆராய்தல் அவசியம்.

ஒன்று, நம் மனதை தளர்வடையாமல் செயல்படுத்துதல்.

இரண்டு, நவீன காலத்திற்கேற்ப புதுமைகளை ஏற்று, போட்டிக்கு நம்மை ஈடுசெய்தால், மனம் தளர்வடைய முக்கிய காரணம் என்ன?

” சுய மதிப்பு ”

சுயமதிப்பு குறையாமல், வளர்ப்பது எப்படி?

தயக்கத்தை பின்தள்ளி செயல்பட ஆரம்பித்தல், எதிரகாலத்தில் நாம் அடையப் போகிற உயர்நிலையை மனதில் எப்போதும் ஆழமாக பதித்தல்.

மற்றவர்களால் செய்ய முடிந்ததை நம்மாலும் சாதிக்க முடியும் என முழுமையாக நம்புதல்.

பிற மனிதர்களிடம் இணக்கமாகப் பழகுதல்.

இயன்றவரை நம்மால் முடிந்ததை, மற்றவர்களுக்குத் தேவையானவற்றை வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் கொடுத்து உதவுதல்

மற்றவர்களுடன் ஒப்பிட்ட்உ நம்மை தாழ்த்திக்கொள்ளாமலும், எல்லாமே நூறு சதம் சரியாக இருக்க வேண்டுமே என்று பார்க்காமலும் செயல்படுதல்.

எந்தச் சூழ்நிலையிலும் தாழ்வானவன் என்றோ தோலவியாளன் என்றோ மனதில் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்.

தோல்விகள் மற்றும் தவறுகள் சகஜமே. அதை வெற்றிகளாக மாற்றுவதற்கும், தவறுகளிலிருந்து நம்மைச் சரிப்படுத்திக் கொள்ளவும் சிறந்த மனதுடன் செயல் படுதல்.

மனதின் நியாயமான ஆசைகளைப் பூர்த்தி செய்தல்.

எல்லா நேரங்களிலும் சீரியஸாக இல்லாமல் அவ்வப்போது மனதை ரிலாக்கஸ் செய்தல்.

பொன்ற பழக்கங்கள் நம்மை தளர் வடையாமல் செயல்படுத்த உதவும்.

நமது மனதை தளரச் செய்கின்ற இரண்டு முக்கிய பயங்கள்:

தொழில் தோல்வியாகுமோ?

உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ? என்பது தான்.

இவ்வெண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் வெற்றியே கிடைக்கும்; உயரும் உடலும் பாதுகாப்பானதுதான் என்பதை மனதிற்குள் ஆழப்பதியச் செய்தால் அப்பயங்கள் விலகிவிடும்.

நவீன வாழ்க்கைக்கு ஏற்ப நாம் செயல்படும். துறைகளில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி, சுயமதிப்பை வளர வைத்து செயல்படுத்தினால் என்றுமே வெற்றிதான்.

உலகை நேசியுங்கள்!
உலகமே உங்களை நேசிக்கும்!
——————————————————————-
எங்கே போக வேண்டும் என்று குறித்துக்கொள்ளாத பயணமும், எதை அடைய வேண்டும் என்னும் குறிக்கோள் இல்லாத வாழ்க்கையும் இன்னிலில் முடியுமே அன்றி இன்பம் தராது.
——————————————————————-

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்