Home » Articles » வெள்ளைக்கொடி

 
வெள்ளைக்கொடி


சரஸ்வதி குமாரன்
Author:

இன்றைய உலகம்
ஒரு சங்கிலிக் கோர்வை
ஆனாலும் ஒவ்வொரு
மனிதனும் தனித்தனியாய்!

புஷ்ஷா! சதாமா!
என்பதற்காக ஒரு போர்
வெல்லப் போவது யார்?
தோற்பது மனிதகுலம்

எற்கனவே உலகம்
வறுமையின் பிடியில்
தீவிரவாதம் அதன் மடியில்

அழிப்பது சுலபம்.
கலகம் மறந்து உலகம்
செழிப்பது எப்போது?

எப்போதும்
முக்கியத் தேவையாய்
காந்தியின்
குளோனிங் பதிப்புகள்

அப்போதுதான் உயரும்
மனிதநேய மதிப்புகள்

இந்தப் போர்
விரைவில் முடிந்தால்
காலம் காயம்படாமல் தப்பும்

இனிமேல் நடக்காமல்
இருக்குமாக…
மேதினியில் யுத்தம்

அப்போதுதான்
பூமியில் மனிதன்
இருப்பதாக அர்த்தம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்