Home » Articles » சாத்துக்குடி

 
சாத்துக்குடி


admin
Author:

Health Corner
நன்மைகள் :

நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் நாக்கில் பட்ட உடனே சத்தியாக மாறுகின்ற ஆற்றல் வாய்ந்த உணவு தேன் மட்டுமே ஆகும்.

அதற்கடுத்தபடியாக விரைவில் செரிமானமாகின்ற உணவுப்பொருள் எதுவென்று தெரியுமா?

”சாத்துக்குடிப்பழம்” தான் அது. நோயாளிகளே நலம் விசாரிக்கச் செல்பவர்கள் சாத்துக்குடிப்பழத்தோடுதான் செல்லார்கள். ஆனால், மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்தான் நோயாளிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே, மலச்சிக்கல்தான் பெரும் பாலான நோய்களுக்குக் காரணமாக இருக்கும்போது பிஸ்கட், ரொட்டி போன்ற உலர்ந்த உணவுகளை உண்பதால் மலச்சிக்கல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, எந்த ஒரு நோயாக இருந்தாலும் தொடக்கத்திலேயே சாத்துக் குடிச்சாறு மட்டும் அருந்தி உபவாசம் ( Fasting ) இருந்தால் நோயை அடியோடு ஒழித்துவிட முடியும்.

இப்பழச்சாற்றில் உடலுக்கு வேண்டிய சக்தி இருப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலும் நிரம்பியிருக்கின்றது. இப்பழங்களை வாங்கும் போது புளிப்புச் சுவையில்லாத பழங்களைத் தேர்வு செய்து வாங்க வேண்டும். பழச்சாறில் வெண் சர்க்கரைக்குப் பதிலாக தேன் அல்லது பனங்கற்கண்டுத்தூள் சேர்த்துக் கொள்வது நல்லது.

நன்மைகள் :

உடலில் உள்ள உஷ்ணத்தேத் தணிக்கும்.

உடல் முழுவதும் உள்ள நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறும்.

உணவுப்பாதையில் ஏற்படும் வறட்சியைப் போக்கும்.

ஆஜீரணம், வாய்வுத் தொல்லைகளை ஒழித்து செரிமான சக்கதியை அதிகரிக்கும்.

வயிற்றில் உள்ள அமிலத் தன்னமையைக் குறைத்து, காரத் தன்மையை அதிகரிக்கச் செய்து போய்ப் பசியைப் போக்கும்.

இதனால் பசி நேரத்தில் ஏற்படும் வயிற்று எரிச்சல் கிறுகிறுப்பு, உடல் தளர்ந்து போதல் போன்ற கோளாறுகள் நீங்கும்.

இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

இதன் சுளைகளை வாயிலிட்டுமென்று சாப்பிட்டு வந்தால் வாய்துர்நற்றம் நீங்கும்.

இப்பழச்சாற்றுடன் இஞ்சிச்சாறு சேர்த்துக் குடித்து வர சளித் தொல்லைகள் ஒழியும்.

இப்பழத்தின் தோலை வீணாக்காமல் மிக்ஸிலிட்டு சிறிது தண்ணீர்விட்டு அரைத்து குளிக்கும்போது பயன்படுத்தலாம். இதனால் சரும நோய்கள் குணமாகும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்