Home » Articles » நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்

 
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்


admin
Author:

டாக்டர் பெரு. மதியழகன்

முன்னேற்றம் என்னும் வசந்த மாளிகையின் தூண்களாக இருப்பவை பல. அவற்றில் மிக முக்கியான ஒன்று நற்பண்பு உடையோரின் நட்பு. வரலாற்றில் படித்தறிந்தும், வாழ்வில் பட்டறிந்தும் நமக்கு உணர்ந்தும் மிகப்பெரிய பாடம் இதுவே.

ஏராளமான சுயமுன்னேற்ற நூல்கள் நாளும் பொழுதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் முன்னேற்றத்திற்கு முக்கயத் தூண்களாக பல்வேறு கூறுகளையும், மூலங்களையும், அடிப்படைகளையு பல்வேறு கூறுகளையும், மூலங்களையும், அடிப்படைகளையும், மூலங்களையும், அடிப்படைகளையும் பல்வேறு கோணங்களில் பலரும் விரிவாக எழுதியுள்ளர்.

ஆனால், ஒரவரின் முன்னேற்றத்தில் நட்பின் பங்களிப்பை, அதன் பல்வேறு பரிமானங்களை அங்குமிங்கும் மிகச் சிலரே மெல்லியதாய் தொட்டும் சென்றுள்ளனர்.

மானுடத்தின் மிக உன்னதமான பாத்திரங்கள் நல்ல நண்பர்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார, என்பார்கள். ஆணுக்குப் பின்னால் பெண்ணும் பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருக்கிறார்கள். சில நேரங்களில் அப்படி இல்லாமல் கூட இருக்கலாம்.

ஆனால், ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பின்னால் உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள். மகத்தான சாதனையாளர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் மாசிலாத நண்பர்கள் மறைந்திருக்கிறார்கள். என்பதே உண்மை.

நட்பின் வகைகள்

நட்பின் சில வகைகளையும் – அதன் இயல்புகளையும் குறித்து ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளிவந்த எமது கவிதை ஒன்றைக் குறிப்பிடுவது பொருந்தும்.

கடல்கடந்து வெளிநாட்டில்
இருந்திட் டாலும்
மடல்வழியே வளருகின்ற
பேனா நட்பு!

குடல்களிலே இருக்கின்ற
புழுக்கள் போல
குடிகெடுக்கும் சில்லோரின்
கூடா நட்பு

உற்ற தொரு நேரத்தில்
உதவி செய்தே
உயிரையும் காத்துணியும்
வாடா நட்பு

பிஞ்சினிலே பழுத்திட்ட
வெம்பல் போல
வஞ்சகர்கள் வளர்க்கின்ற
அழுகில் நட்பு

ஒட்டுண்ணி குடற்புழுக்கள்
போலே இங்கே
உடனிருந்தே உயிர் குடிக்கும்
நண்ப ருண்டு!

சாறுண்ணி கிருமிகளைப்
போல நம்மைச்
சார்ந்திக்கும் சாதுக்களும்
சகத்தில் உண்டு!

வேரினிலே இருக்கின்ற
நுண்ணுயிர் போல
வேண்டியதைச் செய்கின்ற
நண்ப ருண்டு!

காரினிலே இரயில்களிலே
பூத்தே உதிரும்
காற்றோடு கலந்துவிடும்
நட்பும் உண்டு!

முகத்துக்கு முகம் சந்திக்கவில்லை என்றாலும் முடங்கல் வழியாக மட்டுமே சந்தித்து வளர்கின்ற நட்பைத்தான் பேனா நண்பர்கள் ( ( Pen Friends ) என்கிறோம்.

நமது குடல்களிலே இருக்கின்ற புழுக்கள் எப்படி உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வளர்வது மட்டுமின்றி நோயையும் உண்டாக்கி பாதகம் விளைவிப்பது போல கூடவே இருந்து குடிகெடுக்கிற சிலரின் கூடா நட்பு.

உரிய நேரத்தில் உதவி செய்தும், உயிரையே தந்து உதவிடக் கூடிய நல்ல நண்பர்களின் வாடா நட்பு. பிஞ்சிலே பழுத்தது எப்படி வெம்பி உதிர்ந்து விடுகிறதோ அதுபோல நற்பண்பு அற்றவர்களின் அழுகல் நட்பு.

உடலிலே தொற்றிக் கொண்டு உயிரையே குடிக்கக் கூடிய நூண்ணுயிர்களைப் போன்ற நண்பர்களும் இருக்கவே செய்கிறார்கள். சாறுண்ணிக் கிருமிகள் தாவரங்களுக்குப் பாதகம் செய்யாது. அதுபோன்ற சாதுவான நண்பர்களும் உலகில் உள்ளனர்.

தாவரங்களின் வேர்களிலே இருக்க கூடிய சில நூண்ணியிர்கள் மண்ணில் உள்ள தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் தேக்கிவைத்து நன்மை செய்வதுபோல வேண்டியதைச் செய்கின்ற நண்பர்கள் உண்டு.

பேருந்துகளில் இரயில் வண்டிகளில் பக்கத்தில் பயணம் செய்ததால் உருவான நட்பு அந்தப் பயணத் தோடு முடிந்து விடுவதும் உண்டு. இப்படி, பல வகையிலான நண்பர்கள் இருந்தாலும் நற்பண்பு மிக்க நண்பர்களே நமக்குத் தேவை.

நல்ல நண்பரைத் தேர்ந்தெடுங்கள்

”உனது நண்பனைக் காட்டு, நீ யார் என்று சொல்கிறேன்” என்ற தொடரைப் பலமுறை படித்தும் கேட்டும் இருக்கிறோம்.

நண்பர்கள் நமது ஆளுமை, செழுமை அடைவதில், உருவப்பெறுவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் பழக்க வழக்கங்களும், பண்புகளிம் நம்மை அறியாமலே நம்மில் தாக்கத்தை விதைத்து, வேர்விட்டு, செழித்து வளர்ந்து ஆக்கிரமித்துக் கொள்ளும்.

அவை நல்ல பண்புகளாயின் முன்னேற்றத்திற்குப் படியாகும். தீய பண்புகளாயின் வீழ்ச்சிக்கு, அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கச் சொல்வதுண்டு. அந்தச் சமயங்களில் கூறும் ஆலோசனேகளில் – நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று தவறாமல் சொல்வதுண்டு.

நல்ல நண்பர்கள் மாசுபடாத சுற்றுச் சூழலைப் போன்றவர்கள். மாசுபடாத நல்ல சூழ்நிலையில் வளரும் எவ்வுயிரும் செழித்தே வளரும். இதுதான் இயற்கையின் நியத். மாசிலா நண்பர் களுடன் சேர்ந்து வளரும் குழந்தைகள் மாசிலா மணிகளாகவே வளர்வார்கள்.

நிலமும் நீரும் காற்றும் மாசுபடாத வளமான சூழ்நிலையில் வளரும் பயிர் விளைச்சல் சிறப்பாகவே இருக்கும்.

மாசுபட்ட சூழலில், களைகளுக்கு மத்தியில் வளரும் செடியில் வளர்ச்சி இருக்கலாம். ஆனால் விலைச்சல் இருக்காது – வீரியம் இருக்காது. மனிதர்களும் அப்படித்தான்.

நல்ல நண்பர் – யார்?

1. நல்ல நண்பர் என்று நீங்கள் எத்தகைய வரைக் கருதுகிறீர்கள்?

2. நல்ல நண்பர்களால் உங்களுக்கு ஏற்பட்ட தாக்கம் என்ன?

3. உங்கள் முன்னேற்த்திற்கு எந்தெந்த வகையில் நண்பர்கள் துணையாக தூணாக நின்றார்கள்?

உங்கள் அனுபவங்களை எமக்கு எழுதுங்கள் எமது முகவரி :

டாக்டர் பெரு. மதியழகன்,
தன்னம்பிக்கை இல்லம்
10, பொன்னர் – சங்கர் நகர்,
பெரியப்பட்டி சாலை, நாமக்கல் – 637 001
E – Mail : perumathi@rediffmail.com

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்