Home » Articles » தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி

 
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழின் நிறுவனர் அமரர் டாக்டர் இல.செ.க அவர்கள் மறைந்து 6.4.2003 அன்று 11 ஆண்கள் நிறைவுபெற்றன.

தன்னம்பிக்கை இதழ் சார்பில் ” நிறுவனர் நினைவுநாள் நிகழ்ச்சி” கோவை கொடிசியா அரங்கில் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.
—————————————–
சிறப்பாசிரியர் டாக்டர் ஜி. இராமநாதன் அவர்கள் தனது தலைமை உரையில், ” எந்தவித எதிர்பார்ப்புமின்றி டாக்டர் இல.செ.க அவர்கள் ஊன்றி விதை, இன்று விருட்சமாகி பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயன்தருகிறது. அவரது தொலைநோக்குச் சிந்தனை, மக்கள்மீது அவருக்கிருந்த பற்றுதல் அபரிதமானது ”என்று குறிப்பிட்டார்.
——————————————————
தன்னம்பிக்கை இணை அசிரியர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா தனது நினைவுரையில் ” இங்கு பேசியவர்கள் மட்டுமின்றி, தன்னம்பிக்கை வாசகர்கள், வாசகர் அல்லாத பலரையும் சந்திக்கிற போது அவர்களிடம் இல.செ.க.வின் தாக்கம் இருப்பதை உணர முடிகிறது.சிலரால் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும். ஆனால் பாதிப்புகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆனால், தாக்கம் நேர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அந்த வகையில் இல.செ.க.வின் தாக்கமும் ஏராளமான நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
——————————————
தொடர்ந்து உரையாற்றிய தன்னம்பிக்கை இதழின் அசிரியாரும், டாக்டர் இல.செ.க. அவர்களின் புதல்வருமான திரு.க.கலைக்கண்ணன் ”டாக்டர் இல.செ.க. இறக்கும் தருவாயில் இதழைத் தொடர்ந்து நடத்தும் படி கேட்டுக் கொண்டார். அதன்படி 6,7 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினோம். ஆனால், இன்று இது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிறைய மக்களுக்கு சென்றடைவதும், அதனால் பல்லாயிரக்கணக்காணோர் பயன்பெறுவதும் நாம் சரியான திசையில் செல்கிறது”

தொடர்ந்து அவர் பேசுகையில், ” இன்றைய நிலையிலும் நாம்ர கிடைத்த வேலையை செய்து கொண்டு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு என்ற வகையில் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன தேவையோ அதற்கேற்ப இப்போதே உழைக்கத் தொடங்கி விடுகிறார்கள். அது போன்ற தொலைநோக்குப் பார்வை இருந்தால்தான் நாமும் சாதித்துக் காட்ட முடியும்” என்றார்.
——————————————————————-
தன்னம்பிக்கை இதழின் கௌரவ ஆசிரியர், டாக்டர் பெரு. மதியழகன் தனது நினைவுரையில், டாக்டர் இல.செ.கவுக்கும், தனக்கும் இருந்த அன்புப் பிணைப்பை வெளிக்காட்டிய தோடு, தான் எழுத்துத் துறையில் அடியெடுத்து வைக்கவும், மிக இளவயதிலேயே மாநில அளவில் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்ற சிறப்புக்களைப் பெறவும் அய்யா அவர்கள் அளித்த உற்சாகம்தான் காரணம் என்று கூறினார்.

”இயேசு பிரானின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க எப்படி இறைத்தூதர்கள் இருந்தார்களோ, அதைப் போன்றுதான் ” தன்னம்பிக்கை” இதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர் பணி ஏற்றிருப்பவர்களும், எனவே, இனி தன்னம்பிக்கை முகவர்களை தன்னம்பிக்கைத் தூதர்கள் என்றே அழைப்போம்” என்றார்.

————————————————
சிந்தனைக்கவிஞர் கவிதாசன் தனது, நினைவுரையில், ”கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் டாக்டர் இல.செ.க. ஆற்றிய எழுச்சி உரை, 1000 மாணவர்களில் ஒருவராக, மிகுந்ந தயக்க உணர்வுடன் இருந்த என்னை எழுச்சிபெறச் செய்ய வைத்தது. அன்று மட்டும் அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்று நானும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால், தமிழகம் முழுவதும் சென்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசவும், எழுதவும் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருப்பது அவர் உரை என்னுள் ஏற்படுத்திய தாக்கமே. அவரது மறைவு நமக்குப் பேரிழப்பே என்றாலும், அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி” என்றார்.

—————————————————–
நிறைவாக சிறப்புரை ஆற்றினார், ”விடுதலை வேள்வியில் தமிழகம்” நூலின் தொகுப்பாசிரியரும், வழக்கறிஞருமான திரு.ஸ்டாலின் த. குணசேகரன் அவர்கள்.

”இந்திய சுதந்திரப் போராட்ட காலங்களில், அன்றைய இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இந்திய விடுதலை என்ற ஒரே குறிக்கோள்தான் இருந்தது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தன்னலம் கருதாது அவர்கள் ஆற்றிய பணியினை நினைவு கூறும்போது, அதற்கேற்ப நீண்டதொலைநோக்குப் பார்வையுடன், மனிதகுல மேம்பாடு அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் சிந்தித்துச் செயல்பட்ட மனிதர் இல.செ.க. என்றார்.

” மேலும் இல.செ.க. விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அவரது குடும்பத்தாரும் தன்னம்பிக்கை நிறுவனமும் சமூக நலனில் கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கது” என்றார்.

—————————————————————-
முன்னதாக பேராசியர் இருசுப்பிள்ளை அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தன்னம்பிக்கை முகவர்கள், ஆசிரியர் குழு சந்திப்பு நிகழ்ச்சி தன்னம்பிக்கை இதழ் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியாக நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர் முகவர் கலந்து கொண்டு இதழ் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார். நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு தன்னம்பிக்கை தனது இணைய தளத்தை தொடங்கியுள்ளது.

முகவரி : www. thannambikkai.com

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்