Home » Articles » அச்சம் தவிர்!

 
அச்சம் தவிர்!


மெர்வின்
Author:

மெர்வின்

அச்சம் ஒரு விலங்கு போல நம்மை தடைப்படுத்தி விடுகிறது. நம்முடைய சிந்தினைக்குத் தடையாக, ஒற்றுமைக்கு இடையூறாக, முயற்சிக்கு முட்டுக் கட்டையாக, மூட நம்பிக்கைக்கு மூலமாக, உண்மையை மறைக்கும் திரைவாக இருக்கிறது.

”மனித முன்னேற்றத்திற்கு மிக்ப்பெரிய தடையாக இருப்பது அச்ச உணர்வே. அச்சத்திலிருந்து விடுதலை அடைவதே உண்மையான விடுதைல” என்கிறார் தாகூர்.

அச்சமே முன்னேற்றத்தின் முட்டுக் கட்டையாக நிற்கிறது. உயிரற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிப்படையாக இருப்பதும் அச்சமே.

பரம்பரையாக வந்த பழக்கங்களை எப்படி விடுவது? வழி வழியாக வந்த வழக்கங்களைக் கைவிடுவது எவ்வாறு?

இந்த அச்சத்தால்தான் அறிவற்ற பழக்கவழக்கங்களை உதறித்தள்ள முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

அதனால் நம்முடைய வளர்ச்சி குன்றுகிறது. சிந்தனையும் செயலும் ஒடுங்குகிறது.

எங்கு மக்கள் மனதிலே அச்சமின்றி தலை நிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கு சிந்தனை சுதந்திரமாகச் செயல்படுகிறதோ எங்கு ஒய்வற்ற முயற்சி உயர்வைக் காட்டுகிறதோ.

எங்கு பகுத்தறிவு என்ற ஒளி பாழான பழக்கங்கள் என்ற இருளில் மறைந்து விடவில்லையோ, எங்கு சிந்தனையும் செயலும் பரந்து விரிந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றனவோ அங்குதான் வெற்றி பெற முடியும்.

உலகம் தோன்றியதில் இருந்து எத்தனையோ கோடிக் கணக்கான மக்கள் பிறந்து வாழ்ந்து இறந்து போய் இருக்கிறார்கள்.

எண்ணவே முடியாத தொகையில் ஒரு சிலரை மட்டும் நாம் நினைவில் வைக்கிறோம் போற்றுகிறோம். காரணம் என்ன?

உண்டு, உறங்கி, பின்பு மாண்டு போவதில் எந்த உயர்வும் இல்லை. விலங்கினங்கள் கூட இவ்வாறுதானே இறுதியில் மடிகின்றன.

அப்படியானால் நமக்கும் விலங்குகளுக்கு வேறுபாடு இல்லையா? விலங்கு போன்ற வாழ்வுதான் அமைய வேண்டுமா? செயற்கரிய செய்வதற்கு உடலைப் பெற்று இருக்கும் நாம் அதற்குரிய பயணைப் பெற வேண்டாமா?

கரும்பின் ருசி, அதன் இனிப்பான சாறு, அந்தச் சாறு இல்லையெனில் அதுவெறும் சக்கையாகும்.

உடம்பினால் உழைக்க முடியும் என்ற உறுதி எற்படும் பொழுது அச்சம் அகன்று விடும். உடம்பு என்ற கரும்பிலிருந்து வெற்றி என்ற சாற்றைப் பிழிய முடியும்.

வெற்றி பெறத்தவறி விட்டால் நம் உடம்பு சாறு வற்றிய கரும்பு போல் ஆகிவிடும்.

உண்மையான வெற்றிக்கு உற்ற துணையுடையது அதன் குறிக்கோள்.

உடம்பை வருத்தாமல் உழைக்காமல் உயர்ந்து விட முடியாது. உழைப்பு தான் உயர்வு தரும்.

எனவே, அச்சம் தவிர்த்து வாழ்வதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

 

2 Comments

  1. manikandan says:

    super

  2. sariba says:

    super

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்