Home » Articles » பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்

 
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்


admin
Author:

நானும் என் நண்பரும் சென்னைக்குப் போனோம். போற வழியிலே அவரு என்னைப் பார்த்து, ” நீங்க ஏன் உங்க வாழ்க்கைப் பயணத்தையே புஸ்தகமா எழுதக் கூடாது?” அப்படீன்னு கேட்டார்.

”அதுக்கென்ன! இப்பவே சொல்கிறேன், எழிதிக்கறீங்களான்” னு கேட்டேன். அவருக்கு ஆச்சிரியம், ஆனாலும், ”சரி” ன்னு சொல்லிட்டார்.

” நேத்து ஊட்டி போனேன். ஸ்வெட்டர் மஃப்ளர் எல்லாம் போட்டுக்கிட்டேன். மேட்டுப்பாளையம் இறங்கினதுமே ஸ்வெட்டர் மஃப்ளர் எல்லாம் கழட்டிட்டேன். காரமடை வந்தது, மழை பிடிச்சது, குடை பிடிச்சுகிட்டே பஸ் ஸ்டாண்ட் வந்தேன். கோயமுத்தூர் வந்துட்டு இப்ப சென்னைக்குப் புறப்படறேன். அங்கே வெய்யிலா இருக்கும். காட்டன் டீ ஷர்ட் – கதர் சட்டை – வேஷ்டின்னு எடுத்துகிட்டேன். இதுதான் என் வாழ்க்கைப் பயணத்தோட சுருக்கம்” அப்படீன்னேன்.

அவருக்குப் புரியலை. நான் பொதுவாச் சொல்றேன், ஊட்டிக்குப் போகிறபோது இருக்கிற பருவநிலையை சமாளிக்கத் தேவையான கருவிகள் கொண்டுபோனேன். மழை வந்தபோது குடை இருந்தது. வெய்யிலை சமாளிக்க அதுக்கேத்த ஆடைகள் கொண்டு போனேன். வாழ்க்கை யிலேயும் பருவநிலை மாறும்போது அதுக்கேற்ற மாற்றங்களை செய்துக்கணும்.

நான் பொதுவாச்சொல்றேன், ஊட்டியிலே போட்ட ஸ்வெட்டரோட சென்னையிலே போய் இறங்கினா மூச்சு முட்டும். சென்னையிலே போட்டுக்கற ஆடைகளோட ஊட்டிக்குப் போனா குளிர் பின்னிடும். இந்த சூழலுக்கேற்ற மாற்றம் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

பிசினஸ் பிரமாதமா இருந்தபோது செய்த செலவுகளை, நலிவடைந்த நிலையிலே குறைச்சுக்கறது, இளமைக்காலத்திலே இருந்த வாழ்க்கை முறையை வயதானபிறகு மாத்திக்கறது. இந்த மாற்றங்கள் பலர்கிட்டே ஏற்படறதே இல்லை.

நான் பொதுவாச்சொல்றேன், இதுக்குன்னு ஒரு காரணம் உண்டு. உதாரணமாக, ஊட்டியில் ரொம்ப உல்லாசமா இருக்கும். மலை இறங்க இறங்க சீதோஷ்ணம் மாறுது. அதுக்கேத்த மாதிரி ” சட் ” ன்னு மாறிடறோம்.

பிசினஸ் ரொம்ப நல்லா இருக்கிற நேரம். இளமைப்பருவம், இது எல்லாமே எப்படி தெரியுமா? ஊட்டியிலே இருக்கற மாதிரிதான். ஆனா ஒண்ணு. இதிலே இறக்கம் வர்ற போது மனசு ஒத்துக்கிட மாட்டேங்குது. அதனாலே சூழலுக்கேத்த மாதிரி வாழ்க்கை மாறவே இல்லை.

சூடான பிரதேசத்திலே ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு திணறுகிற மாதிரியே வாழ்க்கையிலேயும் சில தடுமாற்றங்கள் ஏற்படுது.

நான் பொதுவாச் சொல்கிறேன், இந்த நிலைமை என்னைக்கு மாறுதோ அன்னேக்கு தான் வாழ்க்கையிலே ஏற்படுகிற மாற்றங்களை இயல்பா எடுத்துகிட்டு தாண்டி வர முடியும்.

வாழ்க்கைப் பயணத்தை இப்படி சுலபமா புரிஞ்சுகிட்டா போதும் அவங்கவங்க சிக்கலிலே இருந்து தான வெளிவந்துட முடியும்னு தோணுது, அப்படித்தானுங்களே!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்