Home » Articles » விரைந்து படித்தல் (Speed reading)

 
விரைந்து படித்தல் (Speed reading)


இரத்தினசாமி ஆ
Author:

மாணவர் பெற்றோர் பக்கம்

பேரா. ஆ.இரத்தனசாமி
(நினைவாற்றல் தன்னாற்றல்
மேம்பாட்டுப் பயிற்சியாளர்,
மாணவர் மனநல அலோசகர், ஈரோடு).

அற்புத நினைவாற்றல்

Lord மெக்காலே என்பவர் மேலைநாட்டுக் கல்வியாளர். நம்நாட்டின் தற்போதைய கல்வி முறைக்கு வித்திட்டவர். அவருக்கு, ஒரு போராற்றல் இருந்தது. முன்னூறு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தக்தை அரை மணி நேரத்தில் படித்து விடுவார். எந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது, ஆரம்ப வார்த்தை என்ன, முடியக் கூடிய வார்த்தை என்ன பொன்றவற்றை எளிதாக திரும்பச் சொல்லக்கூடியவர்.

ஒருமுறை அவர் சொன்ன கருத்து அனைவரையும் வியக்க வைக்கும். ” இழந்த சொர்க்கம் ( Paradise Lost)” என்ற மில்டனின் ஆங்கிலக் கவிதைகள் அடங்கிய புத்தங்களில் அனைத்துப் பிரதிகளும் உலகத்திலிருந்து மறைந்தாலும் அவற்றை அப்படியே அடிபிறலாமல் Punctuation உடன் என்னால் திரும்ப எழுத முடியும்” என்று சொன்னார். எத்தகைய அற்புத நினைவாற்றல்.

அத்தகைய நினைவாற்றல் நம் இந்தியர் ஒருவருக்கு இருந்தது. அவர்தான் விவேகானந்தர். எத்தகைய புத்தகமானாலும், என்னை பக்கங்களை கொண்ட புத்தகமானாலும் பக்கங்களை மட்டும் புரட்டிக் கொண்டே போவார். படித்து முடித்ததும் எந்தப் பக்கத்தில் எதைக் கேட்டாலும் சொல்வார்.

இத்தகைய நினைவாற்றலுக்கு புகைப்பட நினைவாற்றால் என்று பெயர் பார்த்தை, படித்ததை அப்படியே பதிய வைக்கும் ஆற்றல்.

இவற்றைப் பெற அடிப்படைத் தேவைகள் 1. ஒருமித்த சிந்தனை (Concentration)

2. விரைந்து படித்தல் ( Speed Reading)

மேற்சொன்னது போன்ற நினைவாற்றலை நமது மாணவர்கள் பெற்றுவிட்டால்.

அனைத்துத் தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறுதானே!

புகைப்பட நினைவாற்றலில் மெக்காலேயைப் போலவோ, விவேகானந்தரைப் போலவோ ஆக முடியாமல் போனாலும் சில பயிற்சிகள் மூலம் நம்மால் விரைந்து படிக்கும் ஆற்றலைப் பெற முடியும். ஒரு மித்த சிந்தனையைப் பெற முடயும்.

முதலில், விரைந்து படித்தல் குறித்துப் பார்ப்போம்.

கண்களைப் பதித்தல் ( Eye Fixation)

நான் படிக்கிறேன் என்று சொன்னால், என்னென்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கண்கள் எழுத்துக்களைப் பார்க்கின்றன. மூளை அதை அறிகிறது. எழுத்துக்களை, வார்த்தைகளை கோர்வைப்படுத்து அதன் அர்த்தத்தை மூளை உணர்கிறது. மூளையில் பதிகிறது. தேவைப்படும்போது அவை திரும்பப் பெறப்படுகின்றன.

சாதாரணமாகப் படிக்கும்போது குழந்தையாக இருந்தால் ஒவ்வொரு எழுத்தாக கண்கள் நகரும். அ, ம், மா – அம்மா என்று எழுத்துக் கூட்டிப் படிக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வார்த்தை வார்த்தையாகப் படிப்பான்.

” ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் நான்

முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்”.

முதலில் கண்கள் ” ஒவ்வொரு ” என்ற வார்த்தையில் பதிகிறது. பின்னர் நகர்ந்து ” நாளும் ” என்ற வார்த்தையில் பதிகிறது. இப்படி எட்டு வார்த்தைகளில் எட்டு முறை பதிகிறது. இப்படிப் படிப்பது எட்டாவது வகுப்பிற்கு மேலும் தொடர்ந்தால் மெதுவாகத்தான் படிக்க முடியும்.

இதையே விரைந்து படிக்கும் முறை தெரிந்தவர் கீழ்க்கண்டவாறு கண்களைப் பதியச் செய்வார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையிலும் நான்

முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்”.

ஒவ்வொரு கண்பதிவிலும் மூன்று அல்லது நான்கு வார்த்தைகள் பதிவதால் இரண்டு அல்லது மூன்று கண் பதிவில் படித்து விடலாம். இதன் மூலம் மூன்று அல்லது நான்கு மடங்கு படிக்கும் வேகம் அதிகரிக்கும். இதை சில கண் பயிற்சியின் மூலம் நம்மால் எளிதில் அடைய முடியும்.

ஆற்றல் மிகுந்த கண்கள்

மூளைக்குப் பின் நமது உடலில் மிக நுண்ணிய உறுப்பு கண்கள். நாம் பார்க்கின்ற எழுத்துக்களை, காட்சிகளே கண்களில் விழித்திரையில் உள்ள 25 கோடி, ஒளி வாங்கி கோளங்கள் கிரகித்து அவைகளை ஒளிவாங்கி நரம்புகளின் மூலம் மூளைக்கு அனுப்பிகிறது. மூளை அவற்றை உணர்கிறது.

கண்கள் சுறுசுற்ப்பானவை. ஒரே பார்வையில் நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றவை. ஒவ்வொரு கண்பதிவிற்கும் அரை வினாடி நேரமே பிடிக்கும். எழுத்துக்களைப் பதியவைக்கும் வேளையில் மனது நம்முடன் இருப்பது மிக மிக அவசியம். அப்போது தான் கண்களால் பார்த்தது மூளையால் அறியப்பட்டு பதிய வைக்கப்படும்.

”ஒவ்வொரு நாளும்” என்ற வார்த்தைகளில் கண்கள் பதியும் போது மனது வெளியேறி விட்டால் கண்கள் அதைப் பதித்தபடி சில விநாடிகள் இருக்கும். மனது அதற்குள் வராவிட்டால் இவனுக்கு. மனது அதற்கள் வராவிட்டால் இவனுக்கு வேறு வேளிபோல, நமது சுறுசுறுப்பிற்கு இவன் ஒத்து வரமாட்டான். என்று சொல்லி கண்கள் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடும். சிலர் தூங்கிக் கூட விடுவார்கள். எனவே படிக்கும்போது மனது நம்முடன் அவசியம் இருக்க வேண்டும்.

எழுத்துக்களை அறிதல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை கூர்ந்து கவனிக்கவும்.

C    G    J    B    இ    ஆ    ஔ    ஓ

H    A    D    I    ஊ    அ    ஈ    உ

E    F    L    K    எ    ஒ    ஐ    ஏ

மூன்று வரிசைகளில் எழுத்துக்கள் மாறி, மாறி அமைந்துள்ளன. வரிசைப்படி எழுத்துக் களைத் தொட்டுக் கண்டுபிடிக்க எத்தனை நேரமாகிறது? (A, B, C, D…J; அ, ஆ, இ… ஔ)

இதே போல் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொட்டுக்கான எத்தனை நேரமாகிறது.

6    10    20    11

3    8    5    9

12    7    1    5

ஏழு வினாடிகளில் நாங்கள் கண்டுபிடித்தால் பரவாயில்லை ரகம். நான்கு வினாடிகளில் என்றால் மிக நல்ல திறமை எனலாம்.

பொதுவாக நம் கண்கள் பதியும் இடத்தின் அளவு 7 செ.மீ. விட்டம் கொண்ட ஓவல் வடிவம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் மையமான கோடிட்ட 7ல் கண் களைப் பதிக்கவும். 7ன் இடப்பக்க எண் கள் 9, 2ம் வலப்பக்க எண்கள் 6,3 கண்களை நகர்ந்தால் ஒரே கண் பதிவில் தெரிகிறதா என்று பார்க்கவும். இடது பக்கமும், வலது பக்கமும் பார்க்கும் பார்வை அளவை ஒவ்வொரு எண்ணாக அதிகரிக்கவும் அதாவது கண்கள் பதியும் விட்ட அளவை அதிகப்படுத்துகிறீர்கள்.

8    4    6    5    2    9    7    6    3    1    5    0    2

ஒரே கண் பதிவில் அதிகபட்சம் எத்தனை எண்கள் தெரிகின்றன என்பதைக் காணவும் வெவ்வேறு எண்களை, எழுத்துக்களை வைத்து தினசரி இப்பயிற்சியைச் செய்துவரவும்.

இதேபோல் எழுத்துக்களை மையமாக வைத்து வலது, இடது பக்கங்களில் இரண்டு, மூன்று, நான்கு எழுத்துக்களை கண்களை நகர்த்தாமல் ஒரே கண்பதில் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக

கு    அ    உ    இ    ஒ    ஃ     தை

டி    தே    வா    பா    சி    கே    ஆ

D    O    N    Y    C    K    L

R    K    A    O    P    Y    D

” இ ” எழுத்தில் கண்களைப் பதியச் செய்ய வேண்டும். ஒ, ஃ வலது பக்கமும், உ, அ இடது பக்கமும் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.

இதே போல் வார்த்தைகளைப் பார்க்க வேண்டும். கீழே உள்ள வார்த்தைகளைப் பார்க்கவும்.

கார்    பிறப்பு        நன்று        சொல்        உரிமை

அழகு    சிறுமை    வாரா        கண்        தொலைவு

See    Old        Blue        Rich        Our

Gold    Red        Dear        House        Silver

நன்று என்ற வார்த்தையில் கண்களைப் பதிக்கவும். வலது பக்கம் சொல், உரிமை வார்த்தைகளையும், இடது பக்கம் கார், பிறப்பு வார்த்தைகளையும் ஒரே கண்பதிவில் கண்களை அசைக்காது பார்க்கவும்.

இவ்விதம் பார்த்துப் பழகிய பின்னர். செய்திப் பத்திரிகைகறில் ( News Paper) வரும் பத்திகளைப் பார்த்துப் படிக்கவும்.

(புத்தகத்தில்  8 பக்கம் வரைபடம் பார்க்கவும்)

(ஒவ்வொரு கோடும் ஒரு வார்த்தையைக் குறிப்பிடும்) இன்னும் படிக்கும் போது கண்களை இடது பக்கம், வலது பக்கம் என்று நகர்த்தாமல் வரிக்கு கிழே வரியாக கண்களை மேலிருந்து கீழாக நகர்த்த வேண்டும். பத்து வரியின் மத்தியில் கண்பார்வை இருக்க வேண்டும்.

இவ்வாறு பழகப் பழக ஒரே கண் பதிவில் அதிகமான வார்த்தைகளைப் படிக்க முடியும்.

உரக்கப் படிப்பவரால், உதடசைத்து படிப்பவரால் விரைந்து படிக்க முடியாது. ஏன்?

உரக்கப் படிப்பவர்கள், உதடசைத்துப் படிப்பவர்கள் படிப்பதை தன் குரல் ஒலி மூலம் காதால் கேட்டு மூளையில் பதிய வைக்கும் ஆற்றலையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக, ஒருவரின் பேச்சு நமக்கு புரியவேண்டுமென்றால் பேசுபவர்கள் விரைந்து பேசக்கூடாது. ஒரு வார்த்தையை காதில் கேட்டு அறியும் முன்னரே அடுத்த வார்த்தை காதில் விழுந்தால் குழப்பம் ஏற்படும். எனவே, இடைவெளி தேவை.

ஒருவர் காதால் கேட்டு அறியவேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு 250 வார்த்தைகளுக்கு மேல் படிக்க முடியாது. கண்களால் பார்த்து,. ஒரே கண்பதிவில் 5 வார்த்தைகளுக்கு  மேல் பதிய வைக்கும் ஆற்றலை பெற்றவர்களால் ஒரு நிமிடத்திற்கு 700 வார்த்தைகளுக்கு மேல் படிக்க முடியும்.

எனவே, வாய்விட்டுப் படிக்கிறவர்களால் விரைந்து படிக்க முடியாமல் போவதோடு ஆற்றல் இழப்பிற்கும் ஆளாகிறார்கள். எனவே, விரைந்து படிப்பவர்கள் மௌனமாக கண்களால் பார்த்து , கண்களை அதிகமாக இடது, வலது பக்கங்களில் நகர்த்தாமல், மேலிருந்து கீழாக நகர்த்திப் படிக்கக் கற்றுக் கொண்டால் நீங்கள் விரைந்து படிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.

ஒருமித்த சிந்தனையைப் பெறுவது எப்படி? அடுத்த இதழில் காண்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்