Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


ராஜன் ய.சு
Author:

– மரபின் மைந்தன் ம. முத்தையா

ய.சு. ராஜன் தொடர்கிறார்….

ஜாதிப் பிரிவுகள், அதில் விளைந்த ஏற்றத் தாழ்வுகள் காரணமாக, நாம் பின் தங்க நேர்ந்தது. 3-4, நூற்றாண்டு வரை மனித சமூகத்தின் மத்தியில் நல்ல இணக்கம் இருந்தது. அதற்குப் பிறகுதான், மற்றவர்களோடு சேர்வது குறைந்தது.

ஜாதிப் பிரிவுகள் பொருளாதார அடங்கு முறைக்கும் வழிவகுத்தன. பகுத்து ஆராயும் அறிவுதான் ஒரு நாட்டில் வளர வேண்டும். ஆனால், இந்தியாவிலோ அறிவைப் பகுக்காமல் மக்களைப் பகுக்கத் தொடங்கினார்கள்.

சிறந்த அறிவியலாளர்களின் சிலபேர் மத்தியில் கூடத் குறுகலான ஜாதிய உணர்வுகள் உள்ளன. ஒன்றில் சிறந்து விளங்குபவன் இன்னொன்றில் பரந்த உணர்வுடன் இருப்பான் என்று நம்புவதற்கு வாய்ப்பில்லை.

சில விஞ்ஞானிகளை நான் ” புதிய காவி உடைகள்” என்று சொல்வதுண்டு. கோபம், தன்னலம் போன்ற குணங்கள் பலரிடம் உண்டு. இதனை அவர்களுடைய மறுபக்கம் என்று கொள்ள வேண்டியுள்ளது.

கடவுளை நான் நம்புகிறேன். கடவுள் இருக்கிறார் என்பது, எனக்கு சக்கதி தருகிற விஷயமாக இருக்கிறது. சிலருக்குக் கடவுள் இல்லை என்று செல்வதில் சக்தி கிடைக்கிறது. அதிலும் பல பாதைகள் உள்ளன. எல்லாவற்றையும் கடவுளே செய்வார் என்று நம்புவதற்குப் பெயர் வேறு. எது தேவை, எது தேவையில்லை என்பதைப் பார்க்கும் இயல்பான அறிவு எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டும்.

இராமகிருஷ்ணா பரமஹம்சரிடம் ஒரு யோகி வந்தார். ” நான் தண்ணீரில் நடப்பேன்” என்றார். ” நாலணா கொடுத்தால் படகோட்டி உன்னை மறுகரையில் விடுவானே” என்றார் பரமஹம்சர்.

எனவே, எது தேவை, எது தேவையில்லை என்று பார்த்து, கொள்வதைக் கொள்வதும், தள்ளுவதைத் தள்ளுவதும் நல்லது.

குளியல் தொட்டியில் குழ்ந்தையைக் குளிக்க வைத்த பிறகு தண்ணீரைக் கொட்ட வேண்டியதுதான். அதற்காக குழந்தையையும் சேர்த்து வீசிவிடக் கூடாது. சில நம்பிக்கைகள் தவறு என்பதற்காக ஆன்மிகமே தவறென்று ஆகிவிட்டது.

வாழ்வை அதன் முழுமையான தன்மையில் கண்டுணரவும், சிலாகிக்கவம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் வாழும் வாழ்வே கல்வி என்று சொல்லப்படுகிறது.

இன்று உயிரியல் பாதுகாப்புப் பற்றி அதிகம் பேசிகிறார்கள்.அதுபோலவே பண்பாடு, நாகரிகம், ஆன்மீகம் போன்ற பலவிதக் கூறுகளையும் பராமரிக்க வேண்டும்.

நான் ” நுண்ணுணர்வு ” பற்றி அடிக்கடிக் கூறினேன். இது கம்யூட்டர் உலகம். கம்ப்யூட்டர் என்பது எடை அளவில் பெரிதாக உள்ளது. ஆனால், அதன் மென்பொருள் வெளியே தெரிவதில்லை. அந்த மென்பொருள்தான் கம்யூட்டரின் செயல்பாட்டுக்கு வழி செய்கிறது. மனித உடல் ஒரு கம்யூட்டர் என்று வைத்துக் கொண்டால் நுண்ணுணர்வுதான் அங்கே மென்பொருளாகத் திகழ்கிறது.

உலகமயமாதலை எதிர்கொள்வது பற்றி இங்கே பலரும் கேட்டார்கள். விரிவாகப் பார்த்தால், மனிதன் எப்போதும் உலக மயமானவனாகத்தான் இருக்கிறான். ஆப்பிரிக்காவில் தான் முதலில் மனிதன் பிறந்தான். அவன் உலகமயமாகிவிட்டான்.

உலகம் முழுவதையும் ஆளவேண்டும் என்கிற அலெக்ஸாந்தரின் ஆசை கூட உலகமயமாக் கலின் ஒரு கூறுதான்.

இன்று வர்த்தக உலகிலும் அறிவியல் உலகிலும் எற்படும் அசுர வளர்ச்சி, இப்போதைய உலகமயமாக்கலுக்கு நம்மைத் தயார்ப்படுத்தும்.

காலம் மாறும்போது அயுதங்கள் மாறுகின்றன. வெளியே யுத்தம் நிகழ்ந்த போது போர்க்கருவிகள், ஆயுதங்கள் உள்நிலை யுத்தம் நிகழ்கிறபோது சட்டம் மனிதனின் புதிய ஆயுதமாகத் திகழ்கிறது.

உலகில் நாம் வல்லரசாவோம் என்றொரு இலட்சியத்தை முன்வைத்திருக்கிறோம். இது வெறும் ஏட்டுக் கனவல்ல.

இங்கே பேசிய முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டன், RURAL REALITY – ஐ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். VISION INDIA 2020 பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

2 1/2 ஆண்டுகாலம் 5000 நிபுணர்களின் ஆய்வின் அடிப்படையில் 25 பேரேட்டுத் தொகுப்புகளாய்து திரட்டிய தகவலின் விளைவு அது. கிராமிய உண்மைகளை நாங்கள் தெரிந்து கொண்டுள்ளது மட்டுமல்ல, அதற்கான பணிகளிலும் இறங்கியிருக்கிறோம்.

TYFAC சார்பாக பல கிராமங்களில் நேரடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பீகாரில் 1999ல் 3000 விவசாயக் குடும்பங்களோடு சேர்ந்து பணி புரிந்தோம். அவர்கள் இப்போது ஆண்டுக்கு இரு விளைச்சல் காண்கிறார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில் நேரடிப் பணியில் இறங்கியிருக்கிறோம். கோவை – சிவகாசி போன்ற பகுதிகளில் கூட கல்லூரி தொழில்நுட்பம் கூட்டுறவுக்காக CENTRE FOR RELIANCE & EXCELLENCE என்றே பெயரில் மையங்களை ஏற்படுத்தி வருகிறோம்.

பஞ்சாப் மாநிலத்திலும் பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம்.

சிறந்த சிந்தனைகளை மனதில் கொண்டு அவற்றை செயல்படுத்தும். ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மனிதனின் இந்த ஆற்றல் பெருகுவதைத்தான் ” நுண்ணுணர்வு ” என்று சொல்கிறேன்.

இந்த நுண்ணுணர்வு செயல்படத் தூண்டுவதற்கு 17 ஆண்டுகாலக் கல்வி ஒரு மனிதனுக்கு தேவைப்படுகிறது.

(முகங்களில் சந்திப்பு தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்