Home » Articles » மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை

 
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை


சூரியன்
Author:

– சூரியன், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.

வெளிநாட்டுப் பயணம் என்பது எனது சின்னவயது முதல் இருந்த கனவு. பள்ளிப் பருவத்தில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிப் பருவத்தில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள சிறிய மலைக்குன்றுகளின் மேல் ஏறி நின்று கொண்டு இயற்கையை இரசிப்பேன். அப்போது மேலே விமானம் பறந்து செல்வதைப் பார்க்கும் பொழுது நினைப்பேன் விமானம் ஏறி வெளிநாடு சென்று நிச்சயம் பார்த்தே தீர வேண்டும் என்று. பலமுறைக் கனவு கண்டிருக்கிறேன். அது இப்போது நனவானது.

கற்றல் என்பது தொடர் நிகழ்ச்சி, மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது கற்றலை நிறுத்திவிடும் பொழுது நின்று விடுகிறது. மனதைத் திறந்து வைத்தால் ஒவ்வொரு நாளும் நிறையப் பாடங்களை கற்கலாம்.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று ஒழுங்குத்தன்மை, சுத்தம் மற்றும் அழகு, எதையும் முறையாக வைத்தாலே, சுத்தமாக வைத்தாலே அது அழகாகி விடுகிறது. இதை மகரிஷி யோகி ” Orderleness and Beautiful ” என்பார்.

அங்கு சாலைகளின் அமைப்பு கார்கள் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் அதிர்வுகள் இல்லாமல் பயணம் இனிமையாக இருக்கிறது. அங்கு சீனர்கள் வியாபாரத்தில், தொழிலில் மிக்ப் பெரிய வளர்ச்சியடைந்திருக்கின்றனர்.

சீனர்களின் அந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணங்கள் என்ன என்று பலரைப் பேட்டி கண்டேன்.

அவை:

1.    சீனர்கள் தாங்கள் செய்கின்ற தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இலயமாகி விடுகின்றனர்.

2.    தங்களின் தொழில் முன்னேற்றம் என்பது அவர்களின் உயிர்மூச்சு.

3.     தங்களின் குடும்பத்தினரையும் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.

4.     நண்பர்களை உறவினர்களை சந்தித்தால் ஊர்க்கதை, உலகத்துக் கதை, அரசியல், சினிமா இவற்றைப்பற்றிப் பேசாமல் தொழில்     பற்றயும், தொடர்புகள் பற்றியும் பேசுகின்றனர்.

5.    சீனர்கள் தங்களுக்குள் பேசும் பொழுது சிறிய தொழில் செய்பவர்கள் கூட பெரும் தொகைகள் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பவர்.     தாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிற சிறிய தொகை பற்றி திருப்தி அடையாமல் வளர்ச்சியடைந்து பெரும் பணம் சம்பாதிக்க     வேண்டுமென்பது அவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கிறது.

6.    அவர்கள் ஒரு தொழிலில் இருந்து அவ்வளவு சீக்கரத்தில் வேறொரு தொழிலுக்கு மாறி விடுவதில்லை.

7.     நிறைய நேரம் கடும் உழைப்பு செய்து நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற இலட்சிய வெறி அவர்கள் இரத்தத்தில்     கலந்துள்ளது.

என்பது மலேசிய நண்பர் ஒருவர் தன்னுடைய சீன நண்பர் பற்றிச் சொன்னார்கள். அந்த சீனர் தன்னுடைய தொழிலில் பெரிய நட்டம் ஏற்பட்டதற்குப் பிறகும் அதே தொழிலில் இருந்தாராம். என்னுடைய நண்பர் கேட்டிருக்கிறார் ” இந்த தொழில்தான் நஷ்டமாகி விட்டதே மாறி வேறு தொழிலுக்கு ஏன் செல்லக்கூடாது” என்று.

அதற்கு அந்த சீனர் சொன்னாராம். ” நஷ்டம்வந்ததற்குப் பிறகு ஏன் வந்தது? என்று காரண காரியங்களை, ஆராய்ந்து நல்ல அனுபவம் பெற்றுவிட்டேன். பெற்ற அனுபவத்தை வைத்து மீண்டும் அதே தோழிலைச் செய்து, முன்னேறியே தீருவேன். வேறு தொழிலைச் சென்றால் இந்த அனுபவம் வீணாகிப் போய்விடும்” என்று கூறி போராடி அதே தொழிலில் மாபெரும் வெற்றியடைந்தாராம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்