சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
தன்னம்பிக்கை மாத இதழும், கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப பயிலரங்க வரிசையில் 5 – ஆவது நிகழ்ச்சி 23.3.2003 அன்று கரூர், சன்னதி தெரு, நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
திருச்சி, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் திரு. கே.பாலசுப்ரமணியன் அவர்கள் வெற்றிச் சூத்திரங்கள் என்ற தலைப்பில் பேசினார்.
திட்டமிடுதல், தொலைநோக்குப் பார்வை, செயல்பாடு, வெற்றி பெறுதல் என்ற மாறுபட்ட சிந்தனை ஒருவரை உயர்த்தும் என்றும், ரிலையன்ஸ் கம்பெனி திரு. அம்பானி நல்ல தரத்துடன் புதுப்புது டிசைன்களையும் மக்களுக்கு தந்து இந்தியாவில் ஒரு பெரிய டெக்ஸ்டைல் மாற்றத்தை ஏற்படுத்தினார். என்று மிக அழகாக உதாரணம் காட்டினார்.
கீதாசாரத்திலிருந்து … எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ நன்றாகவே நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம். எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என எண்ணிக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது, நேர்மறை சிந்தனைகள் இருந்தாலும், பொதுவான எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.
250 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட கௌரவ ஆலோசகர்கள் டிஸ்னிபேப் திரு. நல்லுசாமி, ஆல் டைம்ஸ் திரு. அன்புத்தம்பி திரு. கருவைவேணு ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் திரு. கல்யாண ராமன், திரு.சந்தோஷ், திரு. அருண் தங்கராஜ், திரு. கண்ணன், திரு. செல்வராஜ், திரு. சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

April 2003






























No comments
Be the first one to leave a comment.