Home » Articles » வெற்றிமாலை

 
வெற்றிமாலை


கமலநாதன் ஜெ
Author:

– ஜெ. கமலநாதன்

உங்களுக்குள் ஒரு எரிமலையின் சக்திகள் கனன்று கொண்டிருக்கின்றன என்பதை நம்புங்கள்.

உங்களுக்குள் கிடக்கும் வேறுபட்ட சக்திகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

உங்கள் உடலின் ஆற்றல் வரைமுறைக்கு உட்பட்டது; மனதின் ஆற்றல் அப்படிப் பட்டது அல்ல.

உயரம், பருமன், அழகு, இளமை – இவற்றின் வரம்புக்கு உட்பட்டது மனிதனின் உடம்பு மட்டுமே. மனதின் வளர்ச்சிக்கு உயரம், எல்லை இல்லை.

”அழகுக்கு உச்ச வரம்பு இல்லை. ஆளுமைக்கு முதுமை இல்லை” என்கிறார் பிரபல நாவலாசியர் சிவசங்கரி.

கள்ளிகளையும் குப்பை கூளங்களையும் கொண்டுவந்து அரும்பாடுபட்டு கூடுகட்டுகின்றது சிட்டுக் குருவி. மண்ணைக்கிளறிக் கிளறி தனக்கென ஒரு புற்றை அமைக்கிறது சிற்றுயிரான கரையான். பகுத்தறிவற்ற அற்ப உயிர்கள் கூட வாழ விரும்புகின்றன. உழைப்பில்லாமல் உயர்ந்தவர்கள் யாரும் சரித்திரத்தில் இல்லை.

ஏழ்மையிலும் வறுமையிலும் வாடியவர்கள்தான் உலக சரித்திரத்தில் உன்னதமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். காரணம் கடும் உழைப்பும் விடா முயற்சியும்தான்.

1.     ஏழை விறகு வெட்டியின் மகன்தான் பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆனார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

2.     ஏழை புத்தக வியாபாரியின் மகன்தான் பிற்காலத்தில் உலகம் போற்றும் இலக்கிய மேதை ஆனார்; அவர்தான் சாமுவேல்         ஜான்சன்.

3.    ஏழை செருப்புத் தொழிலாளியின் மகன்தான் ரஷ்ய அதிபர் ஆனார்; அவர்தான் ஜோசப் ஸ்டாலின்.

4.    படகு கட்டும் ஏழைத்தொழிலாளியின் மகன்தான் இப்பொழுதும் உலகம் போற்றும் விஞ்ஞானி ஆனார்; அவர்தான் தாமஸ்         ஆல்வா எடிசன்.

5.    குதிரை லாயத்தின் பணி புரிந்த எளிய மனிதரின் புதல்வர்தான் ஆங்கில மொழியின் தலைசிறந்த நாடக ஆசிரியர் ஆனார்;         வில்லியம் ஷேக்ஸ்பியர்.

6.    தொடக்கப்பள்ளி ஆசிரியரின் மகன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு மன உறுதியால் மகத்தான தேசபக்தராக         தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான்.

7.    உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு நடிகர் சீன் கானரி சாதாரண டிரக் டிரைவராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான்.

8.    இந்தியாவின் சிறந்து நடிகராக இன்றும் திகழும் அமிதாப்பச்சன் சாலையோர பெஞ்சில் படுத்துத் தூங்கிக் கஷ்டப்பட்டவர்தான்.

9.    சிதார்மேதை என்று பாராட்டப்பெறும் பண்டிட் ரவிசங்கர் மதன் முதலில் சிதார் வாசிக்க ஒரு குருவிடம் கேட்ட போது ” உன் கைகள் வளையல் அணியத் தான் லாயக்கு வீணை வாசிக்க அல்ல” என்று நிராகரிக்கப் பட்டவர்.

ஏழ்மையிலிருந்து இயலாமையிலிருந்து புறப்பட்டு வெற்றியின் சிகரத்தினை அடைந்தவர்கள் இதுபோல் ஆயிரம் ஆயிரம்.

வாழ்க்கை எனும் போரில் கடினமாகப் போரிட்டு வெல்வதில் தான் பெருமை இருக்கிறது; சுக வாழ்க்கையில் அல்ல.

கப்பல் துறைமுகத்தில் பத்திரமாக இருக்கும்; ஆனால் அது அதற்காக அல்ல.

வாழ்க்கை வசதிமிக்க விட்டிற்குள் படுத்து தூங்குவதற்கல்ல. வெளியே இறங்கி துன்பங்களோடு போரிட்டு வெல்வதற்காகத் தான்.

புயல் வீசட்டும், வெள்ளம் பெருக்கெடுக்கட்டும் எதிர்த்து நிற்போம்! எதிர் நீச்சல் போடுவோம் வெற்றி காண்போம்!

இந்திய மரபு என்னும் வலிமையான கவசம் நமக்கு பாதுகாப்பாக என்றும் இருக்கும் துணை நிற்கும் ! அச்சப்பட வேண்டாம், தளர்ந்து போதல் வேண்டாம்.

வெற்றி மாலை காத்திருக்கிறது ஒரடி எடுத்து வைத்தால், அது பத்தடி வைத்து நம் அருகே வரும்!

(நிறைவு பெறுகிறது)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்