Home » Articles » பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்

 
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்


புருஷோத்தமன்
Author:

” பிளாஸ்டிக் ஒழிப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு” என்று பலரும் பேசறாங்க. நான் பொதுவாச் சொல்கிறேன், பிளாஸ்டிக்கை யாரும் ஒழிக்க சொல்லலை, பிளாஸ்டிக் கழிவுகள்தான் ஆகாதுன்னு சொல்றாங்க. பிளாஸ்டிக் பலவிதங்களிலே நமக்குப் பயன்படுது. அதனுடைய கழிவுகளை முறையா அகற்றாததாலே பிரச்சனை வருது.

நான் பொதுவாச் சொல்கிறேன், ஆறறிவுள்ள மனிதன், அத்துமீறல் பற்றி அதிகம் கவலைப் படறான். அத்துமிறல்னு தொடங்கி, ஒரு மனிதர் தூங்கற போது எதேச்சையா எழுப்பறது கூட தனிமனித உரிமையைப் பொறுத்தவரைக்கும் அத்துமீறல்னு ஆயிடுச்சு.

நான் பொதுவாச் சொல்றேன், இவ்வளவு தூரம், தன்னுடைய எல்லைக்குள்ளே அத்துமீறக் கூடாதுன்னு கவலைப்படற மனுஷன், தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உரிய காடுகளிலே மேற்கொள்கிற பிளாஸ்டிக் அத்துமீறல் அநாகரீகத்தோட உச்சமாகத் தெரியலையா?

பிளாஸ்டிக்கினுடைய தீமைகள் தெரியாத விலங்குகள் அதைத் தின்று செத்துப் போகுதுன்னு தெரிந்தும், அலட்சியமா இருக்கான் மனுஷன், விளை நிலங்களிலேயும் பிளாஸ்டிக் கிடக்கு.

உடனே சிலபேர் கேக்கறாங்க ” ஏனுங்க, நான் என்ன காட்டையும் மேட்டையும் தேடிப் போயா பிளாஸ்டிக் பொருட்களை வீசுறோம்”. நீங்க உங்க வீதியிலே வீசினாலே போதும. அது காத்தில பறந்து பறந்து ஒதுக்குபுறமான பகுதிகளிலே போய் விழுது. அதனால் மண் வளம், தாவர வளம், விலங்குகளோட வாழ்க்கை எல்லாம் பாதிக்கப்படுது.

பிளாஸ்டிக் கழிவுகளை முழுக்க அகற்றணும்னா அதுக்கு ஒரே ஒரு வசதிதான் இருக்கு, மனுஷன், தன்மனசிலே இருக்கிற சுயநலக் கழிவுகளை முழுசா அகற்றிடணும். அப்பதான் அது சாத்தியம்.

நான் பொதுவாச் சொல்கிறேன், கடுமையான சட்டங்களும் அபராதங்களும் போட்டுதான் காடுகளைக் காப்பாற்றணுங்கறது, நம்மீது நாமே நிறைவேற்றிக்கிற நம்பிக்கையில்லாத தீர்மானம்.

நாடளுமன்றத்திலே நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறினா பிரதமர் பதவி விலகனும்னு சொல்றாங்க. இதுமாதிரியான சட்டங்கள் நிறைவேறும் போதெல்லாம், நம்ம மேலே நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறை வேறுதுன்னு அர்த்தம்.

அப்படீன்னா ” மனிதன் ” அப்படீங்கற பதவியிலே இருந்து நாம எப்பவோ விலகிட்டதா அர்த்தம்.

நம்மை காப்பாத்தற இயற்கையை நாமே பாதுகாக்கலைன்னா அதைவிட மூடத்தனம் என்ன இருக்கும்?

இயற்கையின் அருள்தான் மனிதனின் இருப்பு;

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்