Home » Articles » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


முத்தையா ம
Author:

எழுத்தாளர் பாலகுமாரன்

“மெர்க்குரி பூக்களில்” மலர்ந்த போதே பலரது கவனத்தை ஈர்த்தவர் பாலகுமாரன்.  ஆண் – பெண் புரிதல், நேசம், காதல் என்று அவரது சிறுகதைகளும் நாவல்களும் மளமளவென்று வரத்துவங்கின.

இயல்பாகவே பெண்கள் தங்கள் “சின்னச் சின்ன வட்டங்களை “விட்டு வெளியே வரத் துவங்கிய காலம் இது.  க்வி, வேலைவாய்ப்பு, தனிக்குடித்தனம் என்று பெண்களின் சுயம் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் பரவலாக வளர்ந்த காலட்டத்தில்தான் “பெண்மனம்” பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் வந்த பாலகுமாரனின் படைப்புகள் பரும் வரவேற்பைப் பெற்றன.

“பச்சை வயல் மனது”, “அகல்யா”, “இரும்புக் குதிரைகள்” என்று பல படைப்புகளைச் சொல்லலாம்.

இதே தாளகதியில் வந்து கொண்டிருந்த எழுத்துக்கள் பலரது கவனத்தையும் பெற்றது போலவே எதிர்ப்புகளையும் பெற்றது.  பாலகுமாரன்ன் ஆரம்ப கால எழுத்துக்களில் போதனை மனோபாவம் இருக்காது.  இப்போதும், அவர் போதிப்பதில்லை என்பது வேறு விஷயம்.

பெண்ணின் மென்மையான இயல்புகள் மட்டுமின்றி போர்க்குணமும் வெளிப்படும் விதமாய் அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன.

எந்த உணர்வுமே வடிகாலில்லாத போது வக்கரித்துப் போகிறது என்பதை அவர் எழுத்துக்கள் மூலம் உணர்த்தினார்.  அதனாலேயே அந்த எழுத்துக்கள் சில சமயங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளாயின.

காதலித்து கைவிட்டவனை மீண்டும் பழிவாங்குகிற பெண், விதவையாகி மறுமணம் செய்து கொண்டு கணவன் மேல் சந்தேகப்படும் பெண், இரண்டாவது தாரமாக வாழ்வதற்குப் போய், மறைந்து போன முதல் தாரத்தின் நினைவுகளிலிருந்தும், முதல் மனைவியின் தங்களை போடும் ஆட்டங்களிலிருந்தும் கணவனை மெல்ல விடுவிக்கின்ற பெண் என்று பெண்மையின் பல முகங்களை அவர் உணர்த்தினார்.

இந்த சூழ்நிலையில்தான், அவரது வாழ்க்கையின் சம்பவங்களை வெளிப்படுத்திப் பேசும் “முன் கதைச்சுருக்கம்” வெளிவந்தது.  தன் கட்தகால வபாழக்கையி அவமானங்கள், அனுபவங்கள் அனைத்தையும் நேரமையோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.  வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும் எழுந்து வர முடியும் என்பதை இளைஞர்களுக்கு உற்சாகத்துடன் சொன்ன நூல் அது.

அதற்குப் பிறகுதான் அவரது எழுத்துக்களில் ஆன்மீகத்தின் தாக்கம் அதிகமாகத் தென்படத் துவங்கியது. கனவுகள் விற்பவன் – புருஷவிரதம் போன்றவை அதற்கான ஆரம்ப அடையாளங்கள்  திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமாரடன் ஏற்பட்ட நெருக்கம், அவரது ஆன்மீகத் தேடலை எழுத்துக்களில் முழுவீச்சில் கொண்டு வரத் தொடங்கியது.

அப்படியொரு முயற்சியில், பால குமாரனின் மகத்தான படைப்பு என்று “திருப்பூந்துருத்தி” நாவலைச் சொல்ல்லாம்.  ஒரு சராசரி வணிகன் மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு அந்த வினாடிகளில் பெரும் ஆன்மீக அனுபவம் காரணமாய் ஒரு சித்த புருஷனாய் மலர்வதை மிக நுட்பமாக உணர்த்துகிற நாவல் இது.

தொடர்ந்து சேஷாத்திரி சாமிகள், பாட கச்சேரி சுவாமிகள் என்று சமீபத்தில் வாழ்ந்த ஞானிகள் மட்டுமின்றி அருணகிரி நாதர் வரலாற்றைச் சொல்லும் “காதல் பெருமான்”, தாயுமானவர் வரலாற்றைச் சொல்லும் “ஆனந்த யோகம்”, அபிராமிபட்டர் வரலாற்றைச் சொல்லும் “கண்மணித் தாமரை” போன்றவையும் தனித்தன்மை மிக்க படைப்புகள்.

பாலகுமாரனின் கைவண்ணத்தில், புதிய வடிவம் பெற்று வந்த “பெரியபுராணச் சிறு கதைகள்” சதாஇவ பிரம்மேந்திர்ர் வரலாற்றைச் சொல்லும் தோழன், இவை எல்லாம் நாவலாய் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை குறிப்பாக இளைஞர்களை சென்றடைந்திருப்பதுதான் முக்கியம்.

அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் மிக சுவாரசியமானவை அவர் சினிமாவோடு சம்பந்தபட்டவர் என்றாலும், சினிமா தொடர்பான கேள்விகள் அவரிடம் அதிகம் கேட்கபட்டுவதில்லை என்பதை ஆரோக்கியமான விஷயம்.

தன் வாசகர் ஒரு படி உயர வேண்டும் என்கிற  அக்கறையோடு ஒவ்வொரு படைப்பையும் வெளியிடுகிறார்.  பாலகுரமாரன் என்பது அவரின் எழுத்துக்கள் மூலமாகவே நமக்கு இளங்குகிற விஷயம். “கற்றுக் கொண்டால் குற்றமில்லை” – என்ற கட்டுரைத் தொகுப்பு இதற்கு நல்ல உதாரணம்.

“மெர்க்குரிப் பூக்களில்” தொடங்கி சமீபத்தில் வெளிவந்த “அவனும் அவளும்” வரையில்தொகுத்துப் பார்த்தால் பாலகுமாரனின் பரிணாம்ம் நமக்கு புரியும். கூடவே அவரது பிரம்மாண்டமும்.

அவரது ஆரம்பகால எழுத்தக்களின் உள்ளடக்கத்தில் நம்மில் பலர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், சில ஆண்டுகளாக வெளிவரும் அவரது படைப்புக்கள் வாசகனைப் பண்படுத்துகிறது.

மாத நாவல்களின் முக்கிய முகமாகக்கருதப்டும் “வெறும் பொழுது போக்கு” என்கிற விஷயத்தை முற்றிலும் துடைத்தவர் அவர்.

1999 இறுதியிலிருந்து தன்னம்பிக்கை இதழி வெளிவந்த “நம்பிக்கையும் நானும்” எனும் தொடர் நேர் காணல்களில், முதல் நேர்காணல் அவருடையதுதான் அதிலிருந்து சில பகுதிகள்… இதோ பாலகுமாரன் பேசுகிறார் தன்னம்பிக்கை வாசகர்களுடன்

“இந்த உலகத்தில் உதைபடாதவன் என்று எவனுமில்லை. தோல்விகள், காயங்கள், அவமானங்கள் எல்லாம், எல்லோருக்கும் வரும். எனக்கும், அந்தத் தோல்விகள் அவமானங்களால் பெரிய பெரிய காயங்கள் எல்லாம் ஏற்பட்டன.

எத்தனை பெரியகாயமென்றாலும், அதனைக் காலம் ஆற்றும். “ஆஹா… ” என்று முதலில் தோன்றுகிற,  இரண்டு நாட்களில் சாதாரணமாகிவிடுகின்றது.  எனக்குப் பின்னால் இத்தனை தோல்விகள் இருக்கின்றன என்று வெளிப்படப்பேசுவது என்ற வாசகனுக்கு உரமூட்டுகிறது.  வாழ்க்கையை எதிர்கொள்ள அவனுக்கு வலிமை தருகிறது.

“எனது நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்து விடும். போனவாரத்துத் துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த வலியும் வேதனையும் புதன்கிழமை வரை கூட இருப்பதில்லை.  இந்தப் புரிதல் மனிதனுக்கு வந்துவிட்டால் சோர்ந்து போகாமல் தனது கடமையைத் தொடர்ந்து கொண்டிருப்பான். என் கடந்த பதிவுகள் மூலம் நான்தர விரும்புகிற நம்பிக்கை இதுதான்”.

“உள்ளுணர்வு” என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய விஷயமல்ல.  அமைதியாக இருத்தல், தியானம்,போன்ற சில நல்ல இயல்புகள் அதற்குத் தேவை.  அதிலும் சரியான வழிகாட்டுதல், ஆன்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிற சத்சங்கம் போன்றவையெல்லாம் அமைந்தால்தான் அது சாத்தியம். ஆன்மீகத்தேடல் உள்ளவனுக்கு இவையெல்லாம் கிட்டும்.

நீண்ட காலமாக எழுதி வருகிறவன் என்கிற முறையில் நான் செய்வதெல்லாம் இதுதான்.  என் வாசகனுக்கு என்ன தேவை இருக்கிறது.  எது சொல்லப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறேன்.  அதை எழுதும்போது மிக உண்மையாக எழுதுகிறேன்.  சமூகம் சார்ந்த நாவல்கள் எழுதும்போதும் அப்படித்தான்.  எந்த ஒரு செயலையும் உண்மையாக செய்கிறபோது அது உரிய மரியாதையைப் பெறுகிறது.

இந்த தலைமுறைக்கு உண்மையான ஆன்மீகம் பற்றிய வழிகாட்டுதல் தேவை என்பதை உணர்கிறேன். மிகுந்த சிரத்தையோடு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

எனது நாவல்கள் எல்லாமே வாழ்க்கையிலிருந்து வருபவைதான் வாழ்க்கை என்றால், என்னைப் பற்றியும், என்னை சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியும் எழுதுவதுதான் சாத்தியம்.

எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதை விட்டு விட்டு அவை யாரைச் சொல்கின்றன என்பது நோக்கி எந்த வாசகராவது நகர்வார் என்றால் அவருக்குப் பக்குவம் போதவில்லை என்பது அர்த்தம் மனிதர்களின் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாமே தவிர, அவர்கள் யார் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடுவது அர்த்தமில்லாத வேலை.

வாழ்க்கையில் தோல்விகள் நிறைய ஏற்படவேண்டும் என்கிறேன். பலமாக அடிபட வேண்டும். காதலி பிரிந்து போவாள், நண்பர்கள் புறம் பேசுவார்கள்.  எதிரிகள் உருவாகி அவர்களால் அவமானப்பட நேரிடும். இயலாமை தரும் தோல்விகள் நொறுங்கிப் போக வைக்கும் இப்படி வரிசையாக அடிவிழுந்து கொண்டே இருக்கிறபோது ஏதாவது ஒரு இடத்தில் உட்காருவோம். உட்கார்ந்து யோசிப்போம்.

ஏன் இப்படி நிகழ்கிறது என்று யோசிக்க, யோசிக்க, தெளிவு பிறக்கும்.  தெளிவு நமது செய்கைகளைத் தீர்மானிக்கும்.  இனிமேல் விழாதபடிக்கு எழமுடியும்.  நம்மை நாம் இனம் காணுவதற்கு நம் தோல்விகள், துரோகங்கள் விரட்டும்.  அவை நம்மை வலுபடுத்தும்.

வாழ்கையின் ரொம்பக் கீழேயிரந்து மேலே வந்தவன் நான்.  என் வாழ்க்கையிலிருந்து செய்திகளை எடுத்துக் கொள்ள முடியும்.  என் வாழ்க்கையில் பல நல்ல சம்பவங்களும் உண்டு.  கெட்ட சம்பவங்களும் உண்டு.  இரண்டிலும் இருந்து அடுத்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இயலும்.

(முகங்களில் சந்திப்பு தொடரும்..)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2003

இந்தியா – நேற்று இன்று நாளை
தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்
தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்