Home » Articles » விதியை எழுதுபவன்

 
விதியை எழுதுபவன்


admin
Author:

<p align=”right”>- எம்மாரெல், கோவை</p>

அகலாத இருளென்று அகிலத்தில் இல்லை
மலராத மொட்டென்றும் மண்ணுலகில் இல்லை
விடைகாணா விதிகள் இவ்வுலகத்தில் இல்லை
வீணாக மனம்நொந்தால் விடியல்தான் இல்லை
வளமைகள் பலஉண்டு விழிதிறந்து விட்டால்
பெருமைகள் பெறமுடியும் மனம்விரிந்து விட்டால்
கண்மூடி மனம்நொந்து கருத்தழிந்து விட்டால்
மண்மூடிப் போகுமிந்த மகத்தான வாழ்க்கை.
தடைகண்டும் தளராது முன்னேற வேண்டும்
தளராத மனத்தோடு போராட வேண்டும்
முகம்காணா விதிதன்னைத் தகர்த்தெறிய வேண்டும்
முன்னின்று புதுவாழ்வு மணம்பரப்ப வேண்டும்.
மாளாத செல்வங்கள் இவ்வுலகில் உண்டு
மகத்தான திறமைகள் நம்முள்ளே உண்டு
வீணாக யார்மேலும் பழிபோட வேண்டாம்
வாடாத பலவெற்றி படைத்தாள நீவா.
சூரியனைச் சிறையெடுத்து சுடுமுன்றன் விழிகள்
சுடுகின்ற அக்கினியைத் தடுக்குமுன் தசைகள்
புயலுக்கே புயலாகும் உன்மூச்சுக் காற்று
புயமுயர்த்தி வானத்தைத் தொடுமுன்றன் கைகள்
கடலையே கலக்கும்உன் தளராத கால்கள்
காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்தோடும் ஆற்றல்
விழிப்புணர்வு பெற்றபின் வேதனைகள் இல்லை
நம்விதியை நாம் எழுதும் வகையறிவோம் நீவா

எம்மாரெல், கோவை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்