Home » Articles » விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!

 
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!


முத்தையா ம
Author:

காஞ்சிபுரத்திலிருந்து “தன்னம்பிக்கை” வாசகர் ஒருவர் சமீபத்தில் தொலைபேசியில் அழைத்தார். “எனக்கு முன்ன னுபவமே கிடையாதுங்க. நான் விளம்பரத் துறைக்குள்ளே நுழைய முடியுமா?” என்று கேட்டார். இன்று விளம்பர உலகை உலுக்கிக் கொண்டிருக் கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பதினைந்து வருடம் – இருபது வருடம் என்று அனு பவம் பெற்றவர்கள், திரும்பத் திரும்ப வெவ்வேறு நிறுவனங் களுக்கு மாறிக்கொண்டு ஒரே மாதிரியான வேலையை செய்து வருகிறார்கள் என்கிற குற்றச் சாட்டு, முன்பைவிடவும் இப் போது அதிகமாக எழுந் துள்ளது.

பொதுவாக “மறுபயன் பாடு” (தங்ஸ்ரீஹ்ஸ்ரீப்ண்ய்ஞ்) என்கிற பெயர் இப்போது பிரபலமாகி வரு கிறது.  ஒரு காரணத்திற்குப் பயன்படுத்தப்படும் ஒன்றை மற்றொரு காரணத்திற்குப் பயன் படுத்துவது என்பது இதன் பொருள். பிளாஸ்டிக் பொருட் கள் மறு பயன்பாட்டுக்கு உரியனவா இல்லையா என்பது தற்போதைய விவாதம்.

விளம்பர உலகில் பல் லாண்டுகள் பணிபுரிந்தவர்கள் அதே துறையில் தங்களைத் தாங்களே தொடர்ந்து ஈடு படுத்திக் கொண்டால் புதுமை களுக்கு வாய்ப்பில்லை என்பது இன்றைய இளைய தலைமுறை யின் விவாதம்.

எனவே, முன் அனுபவம் இல்லாவிட்டாலும், நிறைய கனவுகளும், சாதிக்கும் ஆசையும் கொண்ட புதியவர்களின் வருகையை விளம்பர உலகம் எதிர்பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

விளம்பர உலகில் நுழைய சில அடிப்படைப் புரிதல்கள் அவசியம். அடுத்துவரும்

இதழ்களில் அந்தப் புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முயலப் போகிறோம்.

என்னதான் விளம்பர உலகின் செயல்பாடுகளை பல்வேறு முறைகளாகப் பிரித்தா லும், அர்த்த நாரீசுவரர் மாதிரி இரண்டு துறைகள் இணைந்தே இருக்கின்றன. ஒன்று படைப் பாக்கம். மற்றொன்று ஆராய்ச்சி.

ஆராய்ச்சியென்றால் உடனே ஒரு விஞ்ஞான பரிசோதனைக் கூடத்தை கற்பனை செய்துகொள்ள வேண்டியதில்லை. கள ஆய்வையே இது குறிக்கிறது. ஒரு பொருளை விற்பனைச் சந்தை யின் சூழல்களோடு சேர்த்து ஆய்வு செய்யும்போது அதன் நிறை குறைகள் “பளிச்” என்று தெரியும்.

அந்த ஆய்வின் அடிப் படையில் விளம்பரங்கள் உருவாகும்போது வெற்றிகரமாக அமையும். இது விளம்பர உலகின் எழுதப்படாத விதி.

இப்போது பரபரப்பாக நடைபெறும் கருத்துமோதல், நம்மூர் பட்டிமன்றங்களை விடவும் சுவையானது. படைப் பாக்கத்தைவிட ஆய்வுக்குதான் அதிக முக்கியத்துவம் வேண்டு மென்று ஒரு பிரிவும், ஆய்வு போரடிக்கும் – படைப்பாக்கம் தான் விளம்பரத்தை சுவாரசிய மானதாக்கும் என்று இன்னொரு பிரிவும் அடிக்கடி மோதி வருகின்றன. இந்த இரு பிரிவினரும் “அர்த்த நாரீசுவரக் கொள்கை”யை ஆதரிக்காத வர்கள்.

சமீபத்தில் மிட்லிடே இதழுக்குப் பேட்டியளித்த விளம்பரவியல் நிபுணர்

ப்ரஸுன் ஜோஷி, “உங்களுக்குப் படைப்பாக்கம்தான் முக்கிய மென்றால் வீட்டில் உட்கார்ந்து கவிதை எழுதுங்கள். விளம் பரங்கள் உருவாக்க வராதீர்கள்” என்று காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

படைப்பாக்கம் என்பது அழகான – ஆழமான சுழல். கொஞ்சம் அவுன்ஸ் கூடுதலாகிப் போனால் அது வணிகத் தன்மையை இழந்துவிடுகிறது. அதனாலென்ன என்கிறீர்களா? இத்தகைய சூழல் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் அந்த விளம்பரத்தை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படும் பொருளை நினைவு வைத்துக் கொள்வதில்லை.

ஆனால், தகவல்களின் தொகுப்பாக மட்டும் விளம்பரம் இருந்தால் போரடிக்கும். இந்த இரண்டில் நீங்கள் எந்தக் கட்சி? ஒரு சின்ன பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, தொலைக் காட்சி  விளம்பரங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

1)    உங்களை மிகவும் கவர்ந்த ஐந்து விளம்பரங்களை பட்டியல் போடுங்கள்.

2)    அடுத்ததாக, அந்த விளம் பரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள உத்திகளை எழுதுங்கள். அவை உங்களைக் கவர்ந்தது ஏன் என்று விரிவாக விளக்குங் கள்.

3)    இப்போது அந்த விளம் பரத்தின் வழியாக, விளம் பரப்படுத்தப்படும் பொருள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டுள்ள தகவல்களை வரிசைப் படுத்துங்கள்.

4)    அந்த விளம்பரம் உங்கள் அறிவோடு பேசியதா? மனதோடு பேசியதா? எழுதுங்கள்.

5)    இந்த ஐந்து விளம்பரங்களில் காட்சிகளும் உரை யாடல்களும் மனதில் பதிந்த அளவுக்கு விளம் பரப்படுத்தப்படும் பொருள் மனதில் பதியாதவை எவை?

நீங்கள் ஐந்து கேள்வி களுக்கும் எழுதிய பதில்கள் உச்சநீதி மன்றத்தீர்ப்புக்குச் சமம். “ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் சர் டங்ஹஸ்ரீங் ர்ச் ஙண்ய்க்” என்று ஒரு படத்தில் சிவாஜி அலுத்துக் கொள்வதுபோல, விளம்பரப்படுத்தப்படும் பொருளையே மறக்கடிக்கும் விளம்பரங்கள் வெற்றிகரமான தோல்விகள்.

யாரோ ஒருவர் சொல்ல இன்னொருவர் தன் படைப்புக் கலையை வெளிப்படுத்தி யுள்ளார். சில தகவல்கள் மட்டுமே உள்ளது. விளம்பரத் தில் உத்திகள் ஏதுமில்லை என்றால் அவை தோல்விகள். வெறும் அறிவிப்புகளாக மட்டுமே வந்துள்ளன.

“படைப்பு உத்தியும் பிரமாதம், தகவல்களும் மனதில் பதிகின்றன” என்றால் அவையே வெற்றிகரமான விளம்பரங்கள்.

இந்தப்புரிதல் படைப் பாக்கத்துறையில் உள்ளவருக்கும் கள ஆய்வுப் பிரிவில் உள்ள வருக்கும் புரிய வரும் போது  எந்தெந்த விகிதத்தில் என்னென்ன கலக்க வேண்டு மென்று புரியும்.

அந்த விளம் பரங்களே “கலக்கல்” விளம்பரங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்