Home » Articles » உறவே உயர்வு முரணோ முடக்கம்

 
உறவே உயர்வு முரணோ முடக்கம்


ஜெயச்சந்திரன்
Author:

பத்து ஆண்டுகளில் மாபெரும் சாதனை நிகழ்த்த விரும்பும் நீங்கள் மனித உறவுகளில் சில நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எடுத்த குறிக்கோளில் வெற்றிபெற உழைப்பது நீங்களாயினும், ஒத்துழைப்பது உங்களைச் சுற்றி வாழும் சமுதாயமே.

குடும்பம், நிறுவனம், சமுதாயம் ஆகியவற்றில் நல்லுறவும், நல்லெண்ணமும் உங்களுக்குக் கிடைக்க வில்லை என்றால் “ஏன் முயற்சிகளுக்குப் போதுமான பயன் விளையவில்லை? எங்கே தவறு நேர்ந்தது?” என்று நீங்கள் குழப்பம் அடைய நேரலாம்.

நாம் வாழும் சமுதாயத்தின் உதவியும், ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நாம் நல்லுறவைப் பேண வேண்டும். நல்லெண்ணத்தைச் சேர்க்க வேண்டும்; நம்பிக்கையைத் திரட்ட வேண்டும்.

நீங்கள் மற்றவருடன் கொள்ளும் நல்லுறவு உயர்வுக்கு வழி வகுக்கும்; முரண்பாடு உங்கள் முன்னேற்றத்தை முடக்கி விடும்.

முதலில் உங்கள் குடும்பத்தில் நல்லுறவை நிலை நிறுத்துங்கள். அடுத்து உங்கள் நிறுவனத்தில் உங்களுடன் பணியாற்றுபவரின் நல்லுறவைப் பெறுங்கள். அடுத்து உங்களைச் சுற்றி வாழும் சமுதாயத்தில் நல்லுறவை வளருங்கள்.

இதில் நீங்கள் வெற்றிபெறும்போது எல்லா திசைகளிலிருந்தும் உங்களுக்கு உதவியும், ஒத்துழைப்பும் வந்து சேரும். உங்களுக்குத் தேவையானதை மற்றவர்கள் மனமுவந்து செய்து முடிப்பார்கள்.

நல்லுறவை வளர்ப்பதில் மூன்று அடிப்படையான ஆலோசனைகளை டேல் கார்னகி கூறுகிறார். அவற்றை நன்கு புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திப் பாருங்கள். ஆச்சரியப்படும்படியான விளைவுகளை அனுபவிப்பீர்கள்.

எந்த சூழ்நிலையிலும் பிறரைக் குறைகூற

மற்றவருடன் கொள்ளும் நல்லுறவு உயர்வுக்கு வழிவகுக்கும்; முரண்பாடு முன்னேற்றத்தை முடக்கி விடும்.

வேண்டாம். எவரையும் கண்டிக்க வேண்டாம். எவர்மீதும் புகார் சொல்ல வேண்டாம். – இம்மூன்று ஆலோசனைகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்; நடைமுறைப் படுத்துங்கள்.
குறைகூறல்

பிறரைக் குறைகூறுவது மிக எளிதான செயல்; அதனால் நம்மில் பலர் அதைத் தொடர்ந்து செய்கிறோம்; மற்றவரும் நம்மை குறைகூறத் தொடங்கி விடுகிறார்கள்.

பிறர்மீது சரளமாகக் குறைசொல்லும் நாம், பிறர் நம்மீது குறை சொல்லும்போது, அதை நம்மால் தாங்க முடிவதில்லை; அவரை வெறுக்கத் துவங்குகிறோம். அவரை விட்டு விலகி இருக்க முடிவு செய்கிறோம். எல்லாவற்றிலும் அவரிடம் முரண்படத் தொடங்குகிறோம்.

எல்லாரிடமும் ஏதேனும் குறை இருக்கும். ஆனால், அது குறை என்று எவரும் உணர்வ தில்லை. பிறருடைய குறையைப் பேசிக் கொண்டிருப்பதால் அதை அவர் உணரும்படி செய்துவிட முடியாது. அவரவர் தாமே தம் குறையை உணர்ந்தால்தான் உண்டு. ஆகவே பிறரைக் குறைகூறாதீர்கள். எவரையும் திருத்து வதற்காக உங்களை இறைவன் படைக்கவில்லை.

பிறர் உங்களைக் குறை சொல்லும்போது உங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறதா இல்லையா? அதே வருத்தம் மற்றவருக்கு ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிறரைக் குறைகூறுவதை விட அவரிடம் பாராட்டத் தகுந்த சிறப்புகள் எது என்று ஆராயுங்கள். நிறைய இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு சிறப்பையாவது பாராட்டுங்கள்.

மற்றவரிடமுள்ள சிறப்பை நீங்கள் உணர வேண்டும் என்றால், விருப்பு வெறுப்பின்றி மற்றவரை நீங்கள் ஆராய வேண்டும். நீங்கள் விரும்புவதையே மற்றவர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. செய்பவர் பார்க்கும் கோணத்திலும் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

பிறருக்கு மகிழ்ச்சி அளிக்கும் சொற்களை மட்டுமே பேசுங்கள்; செயல்களை மட்டுமே செய்யுங்கள்.

மற்றவர் சொல்லும் அபிப்ராயங்களை மறத்துப் பேசியே தீரவேண்டும் என்று வேகம் காட்டாதீர்கள். அவர் அபிப்ராயத்தைச் சொல் வதற்கு அவர் உரிமையுள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்படியே மாறுபட்ட அபிப்ராயத்தைச் சொல்வது தவிர்க்க முடியாது என்று தோன்றினால், மற்றவர் மனம் புண்படாத வகையில் நட்பு முறையில் பேசுங்கள்.

கண்டித்தல்

பிறர் செய்வது தவறு என்று தோன்றும் போது, மென்மையாக நயமாக அவருக்கு உணர்த்த முயலுங்கள். அதுவும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்பதில் அவருக்கு உடன்பாடு இருந்தால் மட்டுமே.

எல்லாருக்கும் ஆலோசனை கூறவும், தீர்ப்பளிக்கவும் உரிமைகளை உடையவராக உங்களை நினைக்க வேண்டாம். உலகத்தைத் திருத்துவதற்காகவே இறைவன் உங்களைப் படைக்கவில்லை.

மற்றவரைக் கண்டிக்கலாம் என்று தோன்றும்போது, அதே சூழ்நிலையில் நீங்கள் எப்படிச் செயல்பட்டிருப்பீர்கள் என்று சிந்தியுங் கள். கண்டிக்கும் ஆர்வம் குறைந்துவிடும்.

முதலில் மற்றவர் கருத்துகளுக்கும், விருப்பங் களுக்கும் அனுதாபம் காட்டப்பழகுங்கள். அவர் செயல்பாடு உங்களுக்குத் தவறாகவே தோற்ற மளிப்பினும் அவருடைய கண்ணியமாக உணர்வு களைத் தூண்டிவிட்டு அவராகவே அதை உணரச் செய்யுங்கள்.

மற்றவர் செய்வது உங்களுக்குத் தவறாகத் தோன்றினும், அவர் நலனில் அக்கறை காட்டுங் கள் வேகமாக வெறுப்புணர்வையும், பகையுணர் வையும் வளர்க்க வேண்டாம்.

பிறர் தவறு செய்து விட்டதாக நீங்கள் கருதினாலும், அவர் அப்படிச் செய்தார் என்பதை அவரைச் சொல்ல விடுங்கள். அவரிடம் விவாதம் செய்யாதீர்கள்.

மற்றவரிடம் குறைகாணும் போது கடும் சொற்களால் தாக்குதல் தொடுக்க வேண்டாம். கடும் சொற்களை விட மென்மையான சொற் களே வெற்றி தரக்கூடியவை.

கடும்சொற்கள் பகையை வளர்க்கின்றன. மென்மையான சொற்கள் உறவை வளர்க்கின்றன. கடும்சொற்கள் மற்றவர் உணர்வைப் புண்படுத்து கின்றன. உணர்வு பாதிக்கப்படும்போது உறவு பாதிக்கப்படுகிறது.

உங்களின் எந்த எண்ணமும், பேச்சும், செயலும் உங்களுக்கும் பிறருக்கும் நன்மை பயக்காது எனின், எண்ணமாக இருக்கும்போதே அதை அழித்துவிடுங்கள். நல்லெண்ணம் மட்டுமே உறவை வளர்க்கும் என்பதைப் புரிந்து செயல் படுங்கள்.

புகார் சொல்லல்

உங்களைச் சுற்றி வாழ்பவரை கவனித்துப் பாருங்கள். சிலர் ஏதேனும் ஒன்றின் மீது புகார் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

மழை பெய்தாலும் முணுமுணுப்பார்கள். வெயிலடித்தாலும் முணுமுணுப்பார்கள். காற்ற டித்தாலும் முணுமுணுப்பார்கள். இவர்கள் இயற்கையோடு முரண்பட்டு நிற்பவர்கள்.

சிலர் தன் குடும்பத்தார், உடன் பணியாளர் கள், மேலதிகாரிகள் மீது எந்நேரமும் புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து கொண்டே தம் வாழ்நாள் முழுதும் கழித்து விடுவார்கள்.

நீங்கள் பிறர்மீது புகார் கூறி, முணுமுணுப்ப வராக, இருந்தால் பாதிக்கப்படுவது அவர்கள் அல்லர். நீங்கள்தான்.

இந்த உலகம் முணுமுணுப்பவருக்கு அனுதாபம் காட்டி ஆறுதல் கூறத் தயாராக இல்லை. ஆனால், குறைகளைக் களைவதற்கு எவர் முயல்கிறாரோ அவருக்குக் கைகொடுக்கவே விரும்புகிறது.

ஆகவே, எதிராக இருக்கும் சூழ்நிலை அல்லது மனிதர்கள் குறித்து முணுமுணுக்காதீர்; புகார் சொல்லாதீர்.

ஆனால், அவற்றை மாற்றி அமைப்பதற்கு என்ன வழி என்று சிந்தியுங்கள்; திட்டமிடுங்கள் செயல்படுத்துங்கள். “இருட்டைச் சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேன்மையானது”

நீங்கள் கடந்து செல்லும் பாதையில் ஒரு பாறாங்கல் கிடக்கிறது. எல்லாரும் மற்றவரைக் குறைசொல்லிக் கொண்டு, புகார் சொல்லிக் கொண்டு கடந்து செல்கிறார்கள். நீங்கள் கல்லைப் புரட்ட முயற்சிக்கிறீர்கள். முடியவில்லை; நான்கைந்து பேரை அழைத்து அவர்தம் ஒத்துழைப்புடன் கல்லைப் புரட்டி ஓரமாகப் போடுகிறீர்கள்.

மற்றவர் பார்வையில் நீங்கள் உயர்ந்து விடுகிறீர்கள். சராசரி மனிதர் கூட்டத்திலிருந்து வேறுபடுகிறீர்கள். நீங்கள் மற்றவரை ஏவல் கேட்கச் செய்யும் தலைவனாக ஆகிவிட்டீர்கள்.

ஆகவே பிறரைக் குறை சொல்லாதே! கண்டிக்காதே! புகார் சொல்லாதே! என்னும் ஆலோசனையை இன்றுமுதல் கைக்கொள்ள ஆரம்பித்து விடுங்கள்.

மாறாக “பிறரைப் பாராட்டுவேன்! புகழ்ந்துரைப்பேன்; உற்சாகப்படுத்துவேன்!” என்று முடிவெடுத்து ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்துங்கள்.

எதைப் பாராட்டுவது? என்று குழம்ப வேண்டாம் அவருடைய உடமைகளில் ஒன்றைப் பாராட்டுங்கள். அவருடைய திறமைகளில் ஒன்றைத் தேடிப்பிடித்துப் பாராட்டுக்கள். அவர்தம் குணங்களில் ஒன்றைப் பாராட்டுங்கள். அவரின் நடத்தையில் ஒன்றைப் பாராட்டுங்கள். அவர் செய்த செயல் ஒன்றைப் பாராட்டுங்கள்.

குறிப்பிட்ட ஒருவரிடம் பாராட்டும்படி, எதுவுமே இல்லை என்று நினைக்க வேண்டாம். அது உங்கள் பார்வையில் உள்ள கோளாற்றைக் காட்டுகிறது. எல்லாரிடமும் பாராட்டத் தகுந்த சில அம்சங்கள் இருக்கின்றன.

அதுபோன்றே உங்களைச் சுற்றி இருப் பவரைப் புகழ்ந்து பேசுங்கள். மனிதர்களில் பலர் புகழுக்காக ஏங்குகிறார்கள். மற்றவர் புகழத் தவறுவதால் அவர்கள் தம் திறமையைத் தாமே புகழ வேண்டி நேர்கிறது. அதனால் “தற்பெருமை” யாளர் என்று இகழப்பட்டு நொந்து போயிருக் கிறார்கள்.

நீங்கள் மற்றவர் செயல்களைப் புகழ்ந்து பேசும்போது அவர் உங்கள் அருகில் இருக்க விரும்புகிறார். நீங்கள் புகழ வேண்டும் என்பதற் காக மேலும் பல நல்ல, திறமையான, செயல் களைச் செய்ய முற்படுகிறார். பயிற்சியின் காரணமாக திறமைசாலியாகவும் ஆகிவிடுகிறார்.

குறைகூறுவதை விட, கண்டிப்பதை விட பாராட்டுவதன் மூலம், புகழ்வதன் மூலம் எவரையும் மாற்றிவிட முடியும்; திருத்திவிட முடியும்.

குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களும் கூட உற்சாகப்படுத்தாமையால், தங்கள் திறமையை ஆற்றலை வெளிப்படுத்த அஞ்சுகின் றனர். பிறர் முணுமுணுப்பார்களே! புகார் சொல்வார்களே என்னும் அச்சம்தான் அதற்குக் காரணம்.

முணுமுணுப்பதை விட்டு பிறரை ஊக்கப் படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள். உற்சாகப் படும்போது பல மடங்கு வேகமாக மற்றவர் செயல்படுவார்கள்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் உங்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறவராக அவர்கள் மாறிவிடுவார்கள். அதுமட்டுமன்று எப்போதும் உங்களிடம் நன்றிகாட்டத் தொடங்கிவிடுவார்கள்.

மற்றவரைப் பாராட்டுவதும், புகழ்ந்துரைப் பதும், ஊக்குவிப்பதும் ஒரு தலைவனுக்குரிய முக்கியமான பண்புகள். ஒரு ஆண்டுகாலம் இதைச் சரியாக நடைமுறைப்படுத்தினால் உங்களுக் கென்று ஆதரவாளர் குழு உருவாகி விடும்.

அவர்தம் ஆதரவைக் கொண்டு நீங்களும் உயரலாம்; அவர்களையும் உயர்த்தலாம்; சமுதாயத்திற்கும் உதவலாம்.

இவற்றை சுயநல நோக்கின்றி, தவறான எதிர்பார்ப்பின்றி, புன்முறுவலுடன் தொடர்ந்து செய்துவரும்போது அதன் பலனை நீங்கள் ஆச்சரியத்துடன் அனுபவிப்பீர்கள்.

நீங்கள் மாபெரும் வெற்றி பெற விரும்பினால், குறிப்பிடத்தக்க சாதனை புரிய விரும்பினால், ஆயிரக்கணக்கானவரின் உதவியும், ஒத்துழைப்பும் உங்களுக்குத் தேவை.

எல்லாரையும் மதிப்பதனாலும் நல்லெண் ணத்தைப் பகிர்ந்து கொள்வதனாலுமே அதைச் சாதிக்க முடியும்.

நீங்கள் மற்றவரை மதிக்கிறீர்கள்; நல்லெண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பதை மற்றவருக்கு எப்படி உணர்த்துவது? மனதில் வைத்துக் கொண்டால் அவர்களால் உணர முடியுமா? முடியாது?

அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். மற்றவரை எப்போதும் குறை சொல்லா தீர்கள்; பாராட்டுங்கள். மற்றவரை ஒருபோதும் கண்டிக்காதீர்கள்; புகழ்ந்து பேசுங்கள். மற்றவர் மீது புகார் சொல்லாதீர்கள்; மாறாக நல்லதைச் செய்ய உற்சாகப்படுத்துங்கள். ஊக்குவியுங்கள்.

இதன் மூலம் நீங்கள் தலைவர் ஆகிவிடுவீர் கள்; சாதனையாளராகவும் மாறி விடுவீர்கள்.

இதுதான் வெற்றியின்

ஏழாவது இரகசியம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்