Home » Articles » வெற்றியின் மனமே..

 
வெற்றியின் மனமே..


இராமநாதன் கோ
Author:

சூதை வெல்ல வேண்டும்

சாலையோரத்திலிருந்த சிக்னலை மீறி காரை ஓட்டிய அந்த விஐபி பெண்ணை காரிலிருந்து இறக்கி விதியை மீறிய குற்றத்திற்காக ரிப்போர்ட் எழுதினார், அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அந்தப் பெண் ஆவேசமாக சொன்னாள், “என் அண்ணாதான் போலீஸ் ஐ.ஜி. தெரியுமா?”

இன்ஸ்பெக்டர் அதைப் பொருட் படுத்தாமல் எழுதிக் கொண்டிருந்தார்.

“என்னோட மாமா இந்த தொகுதி எம்.எல்.ஏ.”

இன்ஸ்பெக்டர் அதற்கும் மசியவில்லை.

“என்னுடைய சித்தப்பா செக்ர டரியரேட்ல ஐ.ஏ.எஸ். ஆபிஸர்”.

அதற்குள் ரிப்போர்ட் முழுதும் எழுதிவிட்டு, அமைதியாக நிதானமாக அந்த இன்ஸ்பெக்டர் சொன்னார்.

“மேடம், உங்களுக்கு எங்க டிபார்ட்மெண்ட்ல சந்திரன்னு ஒருத் தரை தெரிஞ்சா, சொல்லுங்க; இந்த ரோடுலிரூல் வயலேஷன் ரிப்போர்ட்டை வாபஸ் பண்ணிடறேன்”

ஒரு நிமிடம் யோசித்த அந்தப் பெண், “எனக்குத் தெரியாது; யார் அவர்?” என்றாள்.

“நான்தான்” என்றபடி ரிப்போர்ட் டையும், அபராதத்தையும் எழுதி கையில் கொடுத்தார். அப்பெண்ணும் மறுப்பின்றி பெற்றுக்கொண்டாள். தொடர்ந்து தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினார் இன்ஸ்பெக்டர்.

அவள் கோபமாகப் பேசிய போதும் அவர் பதட்டப்படவில்லை. பலரைச் சொல்லி மறைமுகமாக மிரட்டிய போதும் நிதானமாக, தான் செய்ய வேண்டியதைச் செய்தார்.

பெரும்பாலும் மனிதர்களின் செயல்பாடுகளை பார்த்தால் தம்மைவிட மெலியவனைப் பார்த்தால் ஆவேசப் படுவார்கள்.

“அடங்குதல்” என்பது டஹள்ள்ண்ஸ்ங் மனநிலை ஆகும். அதனால் விரக்தி ஏற்படும். “ஆவேசப்படுதல்” ஆஞ்ஞ்ழ்ங்ள்ள்ண்ஸ்ங் மனநிலை ஆகும்; இது நிதானமில்லாதது; தவறானது; நமக்கும் மற்றவருக்கும் அதிருப்தியை உருவாக்கும்.

இவ்விரண்டு மனநிலைகளுக்கும் இடைப்பட்ட “உறுதியான நிதானமான மனநிலை” (ஆள்ள்ங்ழ்ற்ண்ஸ்ங்ய்ங்ள்ள்) என்பது

வலியவரைக்கண்டு பயப்படாமல் எதிர்கொண்டு அவரையும் சுமூகமாக ஏற்கச் செய்வது; மெலியவரிடமும் ஆவேசமில்லாமல் அவர்களின் உணர்வு களை மதித்துச் செயல்படுவது.

இம்மனநிலைதான்

மிக உயர்ந்த நிலையாகும். ஏனெனில், அப்போதுதான் நம்முடைய உணர்வுகளை, தேவைகளை, அபிப்ராயங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல முடியும். மற்றவர்களுக் கும் தங்களுடைய எண்ணங் களை நம்மிடம் பேச முடியும்.

இதனால் திறந்த மன நிலையும் உயர்ந்த மரியாதையும் ஒருவருக்கொருவர் அமையும். ஒருவருடைய உரிமைகளில் ஒருவர் தலையிடாமல் சுமூக மான உறவுகள் உருவாகும்.

“ஆள்ள்ங்ழ்ற்ண்ஸ்ங்ய்ங்ள்ள்” என்ற நிதானமான, உறுதியான மன நிலையைப் பெறுவது எப்படி?

முதலாவது, மற்றவர்களின் கருத்துகளுக்கு மாறான ஒன்றைச் சொல்ல முனையும் போது அதனுடைய நன்மை தீமைகளைப் பட்டியலிட வேண்டும். மற்றவர் ஏதாவது சொல்ல வந்தால் அவர்களை முழுவதும் சொல்ல விட்டு பொறுமையாக கேட்க வேண்டும். அதன் மூலம் மற்றவர் என்ன மனநிலையில் உள்ளார் என்பதை நாம் அறியலாம்; அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கலாம்.

இப்படி முழுவதையும் கேட்டுவிட்டு “நீங்கள் சொன் னதை யோசித்துப் பார்க்கிறேன்” என்ற ஆமோதிப்பைக் கொடுக் கலாம்.

இரண்டாவது, மற்றவரிடம் கேட்ட விஷயம் நமக்கு ஏற்புடையதாக இல்லா விட்டாலும், அவர் சொல்லியுள்ள நல்ல அம்சங்களையும், அவருடைய திறமைகளையும் மனம்விட்டுப் பாராட்டலாம்.

இப்படிச் செய்யும்போது மற்றவர் நம்முடைய அபிப் பிராயத்தை ஏற்கும் மன நிலைக்கு வந்துவிடுவார். அது மட்டுமில்லாமல் அவருடைய செயலில் குறைகளைச் சுட்டிக் காட்டினாலும் அது அவரை புண்படுத்தாது. நம்மீது விரோதத் தையும் ஏற்படுத்தாது.

மூன்றாவது, பிறர் முன்னிலையில் நம்மை குற்றம் சொல்லும்போது அணுக வேண்டிய வழிமுறை.

மற்றவர்கள் நம்மை வார்த்தைகளால் தாக்கும்போது நமக்கு முதலில் கோபம் வரும். அடுத்ததாக ஆவேசமான வார்த்தைகள் பிறக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் முதலில் மனதை அமைதியாக உணர்ச்சி வசப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

அவர் சொன்னதில் நம்மீது குறை உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். அவர் சொன்னது நியாயம்தான் என்று தோன்றினால், “நீங்கள் சொன்னது சரியாகப்பட்டது. இருந்தாலும் பலர் முன்னிலை யில் சொன்னதால் நான் மன வேதனைப்படுகிறேன்” என்று நம் மனநிலையை அவருக்கு உணர்த்தலாம்.

ஒருவேளை, நம்மை வேண்டுமென்றே குறை சொல்லியிருந்தால் “நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன் பாடில்லை” என்பதை அமைதி யாக சொல்லிவிடலாம். அதற்கு வாய்ப்பில்லாவிடில் கடிதத்தின் மூலம் இதைக் கூறிவிடலாம்.

இறுதியில், முக்கியமான ஒன்று. அதுதான் ஏமாறாமலிருப்பது. இன்று கோட்டு சூட்டு போட்ட மிக உயர்ந்த

பட்டமும் பதவியும் பெற்றவர் களில் தொடங்கி பல நிதி நிறுவனங்கள், அரசியல்வாதி கள், தவணை விற்பனையாளர் கள், ஒன்றை வாங்கினால் இரண்டு பரிசு கொடுப்பவர்கள், லாட்டரி விற்பனையாளர்கள், கம்ப்யூட்டர் விற்பவர்கள், வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுப்பவர்கள், ஜோதிடர்கள், தனக்கு ஞானக்கண் உள்ளதாகச் சொல்லும் சித்து விளையாட்டு காண்பிக்கும் துறவு வேஷக்காரர் கள் வரை, எல்லாத் துறைகளி லுமே ஓரிரு விஷயத்தை தெரிந்தவன், விவரம் தெரியாத வனை ஏமாற்றி, நாகரிகமாக பணத்தைச் சுருட்டுவது அன்றாட நடைமுறை. இதற்கு என்ன செய்வது?

முன்னேற்றத்திற்கு சூது செய்ய வேண்டியதில்லை. சூதையும் கற்க வேண்டிய தில்லை. ஆனால், சூது செய்பவர் களை அடையாளம் காண்பதும், அவர்களை வெல்லும் ஆற்றலும் அவசியமாகும்.

நியாயமில்லாத ஒன்றை பிறர் திணிக்கும் போது அதை அவரே ஏற்கும் விதத்தில் மறுப்பு செய்ய முடிந்தால் அவரே மன
வலிமை மிக்கவர்.“

இது கடினமான உலகம்; மிகவும் சாந்தமான உலகம் அல்ல; அது பலவீன மானவர்களைப் பற்றி அதிக மாக அக்கறை கொள்வ தில்லை. ஆகவே நீ உள்ளத் திலும், உணர்விலும், நற் பண்பிலும், செயல்திறனிலும் வல்லமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். இல்லை யேல், நீ கீழே தள்ளப் படலாம்; இதில் எனக்குச் சந்தேகமே இல்லை”

– ஜவஹர்லால் நேரு.

உண்மையையெல்லாம் நீங்கள் சொல்லவேண்டும் என்பதில்லை. ஆனால் நீங்கள் சொல்பவைகள் எல்லாம் உண்மையானவை களாக இருக்கட்டும்
– ஹேராஸ்மான்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்