Home » Articles » உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?

 
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?


சூரியன்
Author:

1. மாறாத அன்பு செலுத்துக.

2. தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்க.

3. திறமை, அறிவு குறைந்தவர்கள் யாருமில்லை. துறைகள் வேறாக இருக்கலாம். ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம்.

4. நல்ல எதிர்பார்ப்பையே எப்போதும் வெளிப்படுத்துங்கள். உங்கள் நம்பிக்கையை குழந்தைகள் புரிந்து கொண்டால் அதன்படி நடந்து நிறைவேற்றுவார்கள்.

5. தினமும் குழந்தைகளோடு சிறிது நேரம் செலவழியுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள்.

6. முன் மாதிரியாக எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்ளுங்கள்.

7. குழந்தைகளிடம் வாக்குக் கொடுத்தால் காப்பாற்றுங்கள், ஏமாற்ற வேண்டாம்.

8. தண்டனை கொடுப்பது நிரந்தரத் தீர்வல்ல. அன்பான வழிகளை ஆய்ந்து செய்க.

9. முன்பு தண்டனை கொடுத்திருந்தால், உள்ளே காயம் இருக்கும். அதனை அவர்களோடு அமர்ந்து பேசி, அக்காயங்களை ஆற்றுக.

10. திறமைகளைக் கண்டுபிடித்து, ஊக்கம் கொடுத்து, அவர்கள் விரும்பிய படிப்புக்கு அனுப்புங்கள். திணிக்க வேண்டாம்.

11. அக்கறை காட்டுங்கள். அதிகாரம் செலுத்த வேண்டாம்.

12. “தேர்வு மார்க்குகள்” முக்கியம்தான், ஆனால் முயன்றும் மார்க் பெறாவிட்டால் வெறுக்க வேண்டாம். அவர்களின் திறமை வேறு துறைகளில் இருக்கலாம். அதைக் கண்டு பிடித்து, தன்னம்பிக்கை ஊட்டினால் வாழ்வில் ஜெயிப்பர்.

13. குடும்பத்தினர் ஒரு வேளையாவது சேர்ந்து உண்க. உண்ணும்போது T.V. வேண்டாம்.

14. குழந்தைகளுக்கு பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பாகச் செய்தாலும் பரவாயில்லை.

15. நீண்ட அறிவுரைகள் வேண்டாம்.

16. குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் குடும்பப் பொருளாதார நிலையைச் சொல்லிவிடுக.

17. வாழ்விற்குக் கலைகள் அவசியம் (Right Brain Activation) பரத நாட்டியம், இசை, இசைக் கருவிகளைக் கற்றல், ஓவியம் முதலியவற்றில் விடுமுறைகளில் ஈடுபட வைக்கவும்.

18. கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள். கேள்விகளைக் கேட்கத் தூண்டுங்கள். பதில் தெரியாவிட்டால், தெரிந்து சொல்லுங்கள்.

19. தக்க இடத்திற்கு அனுப்பி யோகாசனப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுங்கள்.

20. அவர்களின் வாழ்வின் இலட்சியத்தினை அடையத் துணை புரியுங்கள்.

21. குழந்தைகளின் முன்பு கணவன், மனைவி சண்டையிட வேண்டாம். அவர்களிடம் உங்களின் நன்மதிப்புக் குறைந்துவிடும். அவர்களின் மனமும் அமைதியிழக்கும்.

22. வீடு அன்பு நிறைந்த, சந்தோஷமான இடமாக இருக்க வேண்டும். அச்சூழ்நிலை குழந்தை களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்