Home » Articles » இந்தியா நேற்று இன்று நாளை

 
இந்தியா நேற்று இன்று நாளை


கிருஷ்ணராஜ் வாணவராயர் பி.கே
Author:

வாணவராயர் சிந்தனைகள்

விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியர்கள் ஒன்று பட்டிருந்தனர். காந்தியடிகள் அழைப்பு விடுத்தபோதெல்லாம் அணிசேர்ந்து நின்றனர். ஆனால், இந்த 55 ஆண்டுகளில் பலவித மான வேற்றுமை உணர்வுகள் வளர்ந்து நிற்கின்றன.

எதை நோக்கிப் போகிறோம் என்கிற அடிப்படை உணர்வே இல்லாமல் போயிருக்கிறது. வேத காலத்தில் அர்த்த நிலை, கரும நிலை, தரும நிலை, மோட்ச நிலை என்று நால்வகை தர்மங்கள் வழக்கிலிருந்தன. இவற்றில் இன்றைக்குப் பார்த் தால் பொருள் வாழ்க்கையைக் குறிக்கும் அர்த்த நிலை, புலன் களைக் குறிக்கும் கர்ம நிலை இரண்டுக்கும் முதலிடம் தரப் பட்டு தர்மநிலை, மோட்ச நிலை ஆகியவை பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளன.

இந்த நல்வகை தர்மங் களுக்கிடையே சமச்சீரான நிலை நிலவும் போதுதான் வாழ்க்கை வளமடையும்.

டாக்டர். இராதாகிருஷ்ணன் ஒருமுறை சொன்னார், “ தான் மாறாமல், மற்ற எல்லா மாற்றங் களுக்கும் காரணமாய் ஒன்று இருக்கிறது. அதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் இல்லையெனில் எந்த மாற்றமுமே சாத்தியமில்லை. அத்தகைய ஆன்மீகத்தின் துணையோடு மனிதன் தன்னைத் தானே மேம்படுத்த முடியும்” என்று. அந்த நெறிதான் இந்தியாவின் தனித்தன்மையான ஆன்மீக நெறி.

எனது வாடிகன் பயணத் தின் போதுகூட ஒருவர் என்னிடம் கேட்டார், “இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், உங்களிலே இருந்த வித்தியாசங் கள், பழக்க முறைகள், கருத்து வேற்றுமைகளையெல்லாம் பார்க்கிறபோது நீண்டகாலம் இந்தியா ஒரே தேசமாக விளங்க முடியாதென்று பலரும் கருதி னார்கள். இத்தனை வேற்றுமை களுக்கு நடுவிலும் எப்படி ஒற்றுமையோடு விளங்குகிறீர் கள்” என்றார்.

நான் சொன்னேன், “இத்தனை வேற்றுமைகளுக் கிடையிலும் அடிப்படையான பாடமாக ஒன்றை நாங்கள் பயிலுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் அந்தப் பாடம்” என்று.

இதன்மூலம் நாம் ஜன நாயகத்தை நிலைநாட்டியிருக் கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அந்த ஜனநாயகத்தின் தரம் என்ன என்பதுதான் கேள்வி!

இன்றுகூட அரசியலில் அடிக்கடி சொல்கிறார்கள், “நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தரப் பகைவர்களும் இல்லை” என்று. அவர்களுக்கு நிரந்தரக் கொள்கைகள் இல்லை. அது தான் காரணம்.

இந்த 55 ஆண்டு காலத்தில் தரமான ஜனநாயத்தை நாம் தராததால் சில கடுமையான பின்னடைவுகளை நாடு சந்தித் திருக்கிறது. அவற்றில் முக்கிய மானவற்றை நான் பட்டிய

லிடுகிறேன்.

ப் அரசியலில் ஸ்திரமின்மை

ப் பொருளாதாரத் தேக்கம்

ப் சமூக ஏற்றத்தாழ்வுகள்

ப் பண்பாட்டுச் சீர்குலைவு

இவற்றுக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் மீதும் அதி காரவர்க்கம் மீதும் பழிபோட்டு தப்பித்துக் கொள்வது எளிது. ஆனால், அதற்கு நாம்தான் பொறுப்பு.

“இன்று உங்களை ஆளும் அரசாங்கம் என்பது, உங்கள் தகுதிக்கேற்றவாறே உருவாகி யிருக்கிறது” என்றார் பெர்னாட் ஷா.

நாம் செய்த தேர்வின் பிரதிபலிப்புதான் இந்த அரசாங்கம். எனவே, அதில் நமக்குப் பொறுப்போ, பங்கோ இல்லை என்று சொல்லி விலகிவிட முடியாது.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஒருமுறை கேட்டார், “அரசியலமைப்புச் சட்டம் மக்களை ஏமாற்றி விட்டதா அல்லது மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றி விட்டார்களா?” என்று. திருத்த வேண்டியது மக்களையா? அரசியலமைப்புச் சட்டத் தையா? என்பது அந்தக் கேள்வி.

நாம்தான் தேசத்தை ஏமாற்றியிருக்கிறோம். குளிர் சாதன அறைக்குள் இருந்தபடி உலக நடப்புகளைப் பார்த்து விட்டு வெளியே வந்தபின் மறந்துவிடுகிறோம்.

தெளிவும் சிந்தனையும் உள்ளவர்கள், மையப்பொறுப்பு களில் இருந்து விலகிவிட்டு, சராசரியானவர்கள் அந்தப் பொறுப்புகளை ஆக்கிரமித்துக் கொள்ள நாம்தான் இடம் கொடுத்திருக்கிறோம்.

உலகளாவிய பார்வை வேண்டும் என்று முன்னர் குறிப்பிட்டோம். இந்தியா தனது உலகளாவிய பார்வைக்குக் காலம் காலமாய்ப் பெயர் பெற்றுத் திகழ்கிறது. இந்தியா வின் பிரார்த்தனைகள் உலகம் முழுமைக்குமாக பொதுவாக மேற்கொள்ளப்பட்ட பிரார்த் தனைகள்.

சில நாடுகளில் பூகோள எல்லைக்கு உட்பட்டு பிரார்த் தனைகள் உண்டு. இந்தியாவில் அத்தகைய பிரார்த்தனை கீதங் கள் கிடையாது. எனவே, உலகளாவிய நிலையில் மனித குலம் எதிர்நோக்கியுள்ள சிக்கல் களையும் நாம் பட்டியலிட வேண்டியுள்ளது.

ப் சமயங்களிடையில்

இணக்கமின்மை

ப் இன ரீதியான ஏற்றத்தாழ்வு

ப் பொருளாதாரச் சிக்கல்கள்

ப் அரசியல் மோதல்கள்

ப் பண்பாட்டுச் சீர்குலைவு

ப் ஒற்றைக் கலாச்சாரம்

ப் சுற்றுச்சூழல் சீர்குலைவு

ப் சமூகப் பதட்டம்

இவற்றை எதிர்கொள்வது எப்படி? என்றும் நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய உலகச் சூழலில் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பின் விளைவு உலகம் முழுவதும் எதிரொலிக்க வல்லது.

ஒருமுறை யரோ சொன் னார்கள், “இங்கு பறிக்கப்படும் ஒரு சிறிய மலர் கூட, தூரத்தி லுள்ள நட்சத்திரம் ஒன்றைத் தொந்தரவு செய்யும்” என்று.

எனவே, உலகளாவிய சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கூட இந்தியாவுக்கே உரிய ஆன்மீகப் பார்வையில்தான் நாம் பார்க்க வேண்டும்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் ஒருமுறை சொன்னார், “உடல் ரீதியான செயல்திறனும், தெளிந்த அறிவாற்றலும், ஆன்மீக அறியாமை நிலவும் போது ஆபத்தாகி விடுகிறது” என்று.

எனவே, இந்த எல்லா சிக்கல்களுக்கும் ஆன்மிகம் ஒன்றுதான் தீர்வு. கடந்த காலத் தில் அப்படித்தான் இருந்திருக் கிறது. நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் கூட அப்படித்தான் இருக்கவேண்டும்.

ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சித்தானந்தர் ஒரு பெரிய மகான். 90 வயதைக் கடந்த அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது அவரிடம் கேட்டேன், “இந்தியாவின் மகத்துவம் என்ன?” என்று.

அப்போது அவர் சொன் னார், “இந்தியாவின் மகத்துவம், கலைகளோ, கட்டிடங்களோ, சிற்ப நுணுக்கங்களோ மட்டும் இல்லை. உலகமே அறியாமை இருளில் மூழ்கியிருந்த வேளை யில், உள்ளொளி பெற்ற ஞானி கள் இங்கே தோன்றி, வாழ்வின் நோக்கத்தை அடைந்திட உள் நிலை விஞ்ஞானம் ஒன்றை வடிவமைத் தனர்.

அது மட்டுமின்றி வாழை யடி வாழையாய் பல ஞானிகள் இடையறாமல் அவதரித்து அந்த சங்கிலித் தொடரை பலப்படுத் தினர். இன்றும் அந்த ஞானிகள் அவதரித்து வருகிறார்கள். அது தான் இந்தியாவின் மகத்துவம்” என்றார்.

விவேகானந்தர் கூட சொன் னார், “உலகின் பல பகுதிகளுக்கு செல்லும்முன் ஞானம் இந்தியா வையே தன் இல்லமாகக் கொண்டது” என்று.

எனவே, உலகளாவிய நிலையில் பல அபாயங்கள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், மனித குலத்தை வாழ்விக்கக் கூட ஒரே வழி இந்திய வழியாகத் தான் இருக்க முடியும்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்