Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

மத்திய அரசிலேயும் சரி, மாநில அரசிலேயும் சரி, பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமா ஆகி வர்றதுக் கான அறிகுறிகள் தெரியுது. பேருந்திலிருந்து விமானம் வரைக்கும் எதையும் விட்டு வைக்கிறதாத் தெரியலை.

நான் பொதுவாச்சொல்றேன், எந்தத் தொழிலிலேயும் மூணு முக்கிய அம்சங்கள் இருக்கணும்

1. வாடிக்கையாளர் மனநிறைவு

2. பணியாளர் பாதுகாப்பு

3. பங்கேற்பு மனோபாவம்

இதிலே, பொதுத்துறை நிறுவனங்களிலே முதல் அம்சத் திற்கு அவ்வளவா முக்கியத் துவம் தரப்படலைன்னு பலபேர் நினைக்கிறது நமக்குத் தெரியும்.

நான் பொதுவாச்சொல்றேன், பணியாளர் பாதுகாப்பு உறுதி யாயிருக்கிறபோது வாடிக்கை யாளர் நலன் புறக்கணிக்கப் படறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.

வாடிக்கையாளர் மனநிறைவு கொள்ளும் விதமா பணியாற்றினால், அதுதான் பணியாளர் வேலைக்கும் உத்திர வாதம்னு ஒரு விதிமுறை தனியார் நிறுவனங்களிலே நிறைய இருக்கு. ஆனா, பொதுத் துறை வகுத்த தொண்டு மனோ பாவம் தனியார் நிர்வாகத்திலே இருக்க வாய்ப்பில்லை.

நான் பொதுவாச்சொல்றேன், அரை கிலோ மீட்டர் தூரம் கூட பொதுப்பணித்துறை பாலம் கட்டினப்போ நம்மகிட்டே பணம் கேட்டதில்லை. பத்து பதினைந்து அடி பாலம் கட்டிட்டுப் பணம் வாங்கற பழக்கம் தனியார் கிட்டே வந்திருக்கு.

இப்ப, பொதுத்துறையா, தனியாரான்னு கேள்வி வலு வடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? பொதுத்துறை பணியாளர்கள் பொதுமக்கள் இரண்டுபேர் கிட்டேயும் பங்கேற்பு மனோ பாவம் இல்லாததுதான்.

நான் பொதுவாச் சொல்றேன், ஒரு கலவரம்னு வந்தா பொது மக்களிலே ஒரு பகுதியினர் கூட கூசாம பொதுச் சொத்தை சேதப்படுத்தறாங்க. முதல் காரணம், பங்கேற்பு மனோ பாவம் இல்லாதது. இரண் டாவது காரணம், “யாரு கேக்கப் போறா” அப்படீங்கற அலட்சியப் போக்கு.

இதுவே தனியார் துறைன்னு வைச்சுக்குங்க. ஒரு சின்ன பூந்தொட்டி கால்பட்டு உடைஞ் சாலே சும்மா விடமாட்டாங்க. உடைச்ச ஆளைப்பிடிச்சு ஆயிரத்தெட்டு கேள்விகேட்டு, நஷ்ட ஈடும் வாங்கின பிறகுதான் வெளியே விடுவாங்க.

தனியார் மயம் ஆகிட்டா தொண்டு மனோபாவம் இருக் காது. ஆனா சேவையின் தரம் ரொம்ப நல்லாயிருக்கும்னு சிலர் கருத்து. பொதுத்துறை நிறு வனம்தான் சிக்கனம். நெனச்ச படி விலையேத்த முடியாது. ஏழைகளுக்கும் வேலை கொடுக் கும்னு சிலர் கருத்து.

விமான நிலையங்களைத் தனியார் மயமாக்குவது அவ்வளவு சாதாரணமில்லைன்னு மத்திய அரசு தடுமாறுதாம். இந்து பத்தி ரிகையிலே இதுபத்தி விவரமா ஒரு கட்டுரை எழுதி யிருக்காங்க.

பேருந்து போக்குவரத்தி லேயும் இதே மாதிரி பிரச்சனை இருக்கு. கிராமப் புறத்திலே இருக்கிற பகுதிகளுக்கெல்லாம் தனியார் வந்தா பேருந்து விடமாட்டங்கன்னு சிலபேர் பயமுறுத்தறாங்க.

நான் பொதுவாச்சொல்றேன், தனியார் துறை பொதுத்துறை எதுவா இருந்தாலும் இது நமக்கான சேவைங்கிற பங்கேற்பு மனோபாவம் பொதுமக்கள் மத்தியிலே வரணும்.

இதை சேதப்படுத்தக் கூடா துங்கற பொறுப்புணர்வு, நம்மை யாரும் ஏமாத்தக் கூடாதுங்கற விழிப்புணர்வு இந்த இரண்டும் இருந்தாலே நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது.

நஷ்டம் வர்றதும் லாபம் வர்றதும் பொதுமக்கள் பார்த்து முடிவு செய்யறதுதான். இப்ப இரண்டிலே எது நமக்கு நல்லது. நானென்ன சொல்றது…… வள்ளுவரையே கேட்போம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்