Home » Articles » கனவு மெய்ப்பட வேண்டும்

 
கனவு மெய்ப்பட வேண்டும்


குமரேசன்
Author:

இன்றைய இலட்சியவாதிகளே! நாளைய கோடீஸ்வர கொடை வள்ளல்களே!
கனவுகள் பற்றியும், இன்றைய கனவுகளே நாளைய சாதனைகள், என்பதையும், பிறருக்காக செய்வதற்குப் பெயர் வேலை எனவும், நமது வாழ்விற்காக செய்வதற்குப் பெயர் தொழில்/வியாபாரம் என்பதையும், கடந்த மாதத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம்.
எத்தனை பேர் கனவு கண்டீர்கள்? அதனை வளமாற உறுதிப்படுத்தினீர்கள்?

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் எண்ணுவது என்னவெனில் “வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்” என்பதுதான் “வெற்றி என்பது அவர்கள் கையில் வந்து விழும்” என்று கனவு காண்கிறார்கள். இது பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர் போன்றதுதான்.

கடின உழைப்பின் மூலமாக, சவால்களைச் சமாளித்து, அவரவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்து, தொடர்ந்து விடாமுயற்சி செய்தல மட்டுமே “வெற்றி பெற சரியான வழி”யாகும்.

மற்றவர்களிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்வதன் மூலமும், அவரவர் தோல்விகளிலிருந்து தவறுகளைக் கற்றுக் கொள்வதன் மூலமும், பல்வேறு வேலைகளைச் செய்து, உழைப்பினால் கற்றுக் கொள்வதன் மூலமும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கற்பதன் மூலம்.

மற்றவர்களின் கனவை பூர்த்தி செய்ய நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து உங்களது கனவுகளை நனவாக்கப் புறப்படுங்கள். இன்றிலிருந்து

கனவு + இலட்சியம் = இலட்சியக் கனவு

உங்களது இலட்சியக் கனவின் முழுப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு என ஒரு இலட்சியக் கனவினை உருவாக்கி, நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதனை அடையும் வரை, வரும் தடைகளைத் தகர்த்தெறியுங்கள். எந்த சூழ்நிலையிலும், கை நழுவவோ, கை கழுவவோ, எண்ணாதீர்கள்.

இது மிகச்சரியான நேரம். இதனைப் படித்துக் கொண்டிருக்கும்போதே உங்களுடைய இலட்சியக் கனவு எது? என்று முடிவு செய்யுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியக் கனவு என்பது மிக மிக அவசியமாகும்.

பலவிதமான மக்கள் உங்களை கிண்டலும், கேலியும் செய்யும் பொழுதெல்லாம் இந்தக் கனவுதான் உங்களை தொடர்ந்து செயல்படத் தூண்டும். மேலும், உங்களது வாழ்க்கையில், உங்களை சாதாரண நிலையில் இருந்து சாதனை யாளர் என்ற மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

“யாரெல்லாம் தன்லிநம்பிக்கையுடன் தனது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண் டும் என்று கற்பனை செய்து, அந்த வாழ்க்கையை வாழ, விடாமுயற்சியுடன், தனது லட்சியக் கனவு காட்டும் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் சர்வ சாதாரணமாக தொடர் வெற்றிகளை அடைவார்கள்”

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நண்பர்கள், உறவினர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கலாம். அவர்களெல்லாம் எப்படியாவது அடுத்த மாத சம்பளம் வரும்வரை வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்டவர்கள். செருப் புக்குத் தகுந்தாற்போல காலை வெட்டிக் கொள்பவர்கள்.

முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, உங்களது இலட்சிய கனவானது எதுவெனில், நீங்கள் நடுத்தரவர்க்க பொருளா தாரப் பிடியில் இருந்து விடுதலை பெற்று விரைவில் “பொருளாதாரச் சுதந்திரம்” அடைய வேண்டும் என்பதுதான்.

நினைத்ததை அடைய, தன் எதிர்கால வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவுக்கு, அந்த லட்சியக்கனவினை தீர்மானித் திருப்பவர்களை வெற்றி வந்து அடைந்தே தீரும்.

வெற்றி… வெற்றி என்று எப்போதும் அதே சிந்தனையில் இருப்பர்களை வெற்றி வந்து அடைந்தே தீரும்.

விருப்பத்தால் மட்டுமே பணத்தைக் குவித்து விட முடியுமா? எனில் முடியாதுதான். ஆனால், பணம் சேர்த்து பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை, இலட்சியம், கனவு – மனசு முழுவதும் இருந்து, அதை அடைவதற்காக தெளிவான வழிமுறைகளைத் திட்டமிட்டு, தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விடாப்பிடியாக செயல்பட்டால் பணம் வேண்டுமளவிற்கு குவியும்.

வெற்றி பெறுவதற்கு இடையில் தற்காலிகமான தோல்விகளைக் கண்டு துவண்டு போய் விடுவதுதான் தோல்விக்கான மிக முக்கிய காரணம். இதற்கொரு நிகழ்ச்சியை தெரிந்து கொள்வோம்.

ஓரிடத்தில் தங்கம் கிடைக்கும் என்பதை அறிந்த கோபால் என்பவர் தனது நண்பருடன் இணைந்து தங்கத்தை வெட்டி எடுக்க தோண்ட ஆரம்பித்தார். சில நூறு அடிகளில் தகதகக்கும் தாதுப்பொருளை கண்டனர். உடனே சில இயந்திர சாதனங்களை ஏற்பாடு செய்து சுரங்கத்தை மேலும் தோண்டினார்கள்.

தொடர்ந்து தோண்டத் தோண்ட பளபளக் கும் தங்கத்தாது கண்ணில் படவே இல்லை. தங்கத்தை அள்ளலாம், பணம் குவியும் என்ற ஆசை நிராசையான நிலையில் முயற்சியைக் கை “கழுவிட” முடிவெடுத்தனர். உடனே இதற்கென வாங்கிய இயந்திரத்தினை வந்த விலைக்கு விற்றுவிட்டு திரும்பி விட்டனர்.

அந்த இயந்திரத்தை வாங்கியவருக்கு, சுரங்கம், தங்கத்தாது இதுபற்றிய விபரங்கள் ஏதும் தெரியாததால், அதற்குரிய நிபுணரை அழைத்து இறுதியாக சோதித்து முடிவெடுக்கலாம் என்று எண்ணினார்.

அதன்படி வந்த எஞ்சினியர் அவரது சோதனைகள் மூலம் இதற்கடுத்த மூன்றாவது அடியில் தங்கத்தாது கிடைக்கலாம் எனக் கண்ட றிந்தார். உடனே, செயல்படுத்தி இயந்திரத்தை வாங்கியவர் தங்கச் சுரங்கம் தோண்டி கோடீஸ் வரர் ஆனார்.

இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய தென்னவெனில், ஒரு முயற்சியை கைவிடுவதற்கு முன் நன்கு ஆலோசித்து தேவைப்பட்டால் நிபுணரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.

உங்களுக்கு என ஒரு இலட்சியக் கனவு இல்லாத பட்சத்தில், நீங்களும் எல்லோரையும் போல, வெள்ளிக்கிழமை எப்போது வரும்? வார விடுமுறையில் எப்படி பொழுதைக் கழிக்கலாம் எனவும் கற்பனை செய்ய வேண்டியதுதான்.

பெரும்பாலோர் அவர்களுக்கு என ஒரு சக்தி இருக்கிறது என்பதைக்கூட புரிந்து கொள்வ தில்லை. அவர்களெல்லாம் தங்களுக்கு என ஒரு இலட்சியக் கனவினை உருவாக்கிக் கொண்டால், அதனையடைய வேலை செய்தால் அவர்களது உண்மையான மனித சக்தியின் பெருமை புரியும்.

வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள், பல்வேறு விதமான மனிதர்களிடம் இருக்கும் ஒரு ஒற்றுமை யாதெனில் “இலட்சிய கனவு காண்பது” என்ற கலையை கற்றுக் கொள்ளாதவர்கள் என்பதுதான்.

வெற்றிபெறுபவர்களுக்கும், தோல்வி அடைபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தினை தெரிந்து கொள்வோமா?

திட்டவட்டமான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதனை நிறைவேற்ற தனது சக்தி முழுவதையும் செலுத்தும் அனைவரும் வெற்றி பெறலாம்.

“நான் விரும்பியதை அடைவதற்காக என் திறமையை வளர்த்துக்கொண்டு என் வாழ்க் கையைப் பணயம் வைப்பேன்” என்று முடிவு செய்பவர்கள் வெற்றி பெறலாம்.

தான் வந்த வழியில் பின்வாங்கி செல்ல முடியாதபடி எல்லா சூழ்நிலைகளையும் மாற்று பவர்கள் வெற்றியடைந்தே தீருவார்கள்.

இதற்கொரு சம்பவத்தினை தெரிந்து கொள்வோம். முன்னொரு காலத்தில் ஒரு சிற்றரசர், தனது படையைவிட, பெரும்படையை உடைய மற்றொரு அரசரிடம் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தெரிந்த பலரும், நிச்சயமாக அந்த சிற்றரசர் முயற்சி தோல்வியடையும் என்றே கூறினார்கள். ஏன், அந்த படை வீரர்களிடமே வெற்றி பெறுவோம். என்ற நம்பிக்கை இல்லை.

இது சிற்றரசின் கவனத்திற்குத் தெரிவிக்க பட்டவுடன், சிந்தனை செய்து படகுகள் மூலம் தனது வீரர்களை எதிரி தேசத்திற்கு அனுப்பினான். வீரர்களும், ஆயுதங்களும் இறங்கிய பின்னர், வந்த படகுகளை எரித்துவிட்டு, வெற்றிபெற்றால் மட்டுமே நாம் உயிருடன் திரும்ப முடியும். வெற்றி அல்லது வீரமரணம் என அறிவித்தான்.

என்ன நடந்தது தெரியுமா? அனைவருமே ஆச்சரியப்படும்படி அந்நாட்டு வீரர்கள் போரில் வெற்றி பெற்றார்கள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது (100% effort is 100% success) பின்வாங்க முடியாது என்ற எண்ணத்தினால் முழுத்திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.

மிகப்பெரிய செல்வம் சேர்க்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், முதலில் உங்கள் கனவினை யாரும் சிதைத்து விடாமல் பாதுகாத்திடுங்கள். பின்னர், பணத்தை சம்பாதிக்கும் போட்டியில் களமிறங்கி இருக்கும் உங்களிடம் இந்த உலகம் புதிது புதிதாக எதிர் பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள்தான் நாளைய சாதனையாளர்கள். சரித்திரத்தில் இடபெற போகிறவர்கள் என்ற நம்பிக்கையுடன்,

தங்கள் கனவை நனவாக்க முயற்சித்து, நனவாக்கியவர்களைப் பற்றி பார்ப்போம்.
கனவுகள் கனவு கண்டவர்கள் முயற்சி விளைவு

மின்சார ஒளிவிளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் 10,000 முறை வெற்றி

ஆகாய விமானம் ரைட் சகோதரர்கள் விடாமுயற்சி வெற்றி

ரேடியோ, டி.வி. மார்கோனி விடாமுயற்சி வெற்ற

இந்தியாவின் சுதந்திரம் மகாத்மா காந்தி மன உறுதி வெற்றி

கம்ப்யூட்டர் பில்கேட்ஸ் தொழில் அறிவு வெற்றி

வெற்றியடைந்த எல்லோ ருமே தோல்வியில் ஆரம்பித்து, மனதை இரணப்படுத்தும் போராட் டங்களுக்குப் பின்னரே சாதித்திருக்கிறார்கள்.

மன வலிமையும், லட்சியக் கனவும், கடின உழைப்பும் இல்லையென்றால் எவ்வளவு திறமை யிருந்தாலும் வெற்றி பெறுவது கடினம்.

வெற்றிக்கு எந்த மந்திரக் கோலுமில்லை. உண்மையில் எல்லோருக்கும் வெற்றி பெற ஆசை இருக்கிறது. ஆனால், சிலருக்கு மட்டுமே அந்த வெற்றியினைப் பெற தங்களது தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ள விருப்பம் இருக்கும்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரத் தில் ஈடுபட்டு இருப்பவர்களின் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இலட்சிய கனவு உருவாகி, உர மிட்டு, உற்காகத்துடன் வளர்த்து வருகிறது என்பதே உண்மையாகும். மற்றவர்களை வெற்றி யடையச் செய்வதின் மூலம் நீங்கள் வெற்றி பெற லாம் – என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படி செயல்படும் வகை வியாபாரம் MLM வியாபாரம்.

இதற்கொரு சிறப்பான கதை ஒன்றினை தெரிந்து கொள்வோம். ஒரு மனிதனிடம் இறைவன் நேரில் தோன்றி, “நீ இறந்தவுடன் சொர்க்கம் செல்கிறாயா? அல்லது நரகம் செல்ல விரும்பு கிறாயா?” எனக் கேட்கிறார். அதற்கு அவன் “நான் முடி வெடுப்பதற்கு முன் இரண்டு இடங்களையும் நேரில் பார்க்க வேண்டும்” எனக் கோரினான்.

அதன்படி முதலில் நரகத்திற்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கே உணவு மேஜைகளில் அறுசுவை உணவு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அனைவரும் சோகத்துடன், பசியுடனும், இருப் பதை கவனித்தான். அனைவரது கைகளும் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன. இதனால் சாப்பிட வழியின்றி இருந்தனர்.

பின்னர் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப் பட்டான். இங்கும் அதேபோல உணவு வைக்கப் பட்டு இருந்தது. அனைவரும் கைகள் கட்டப்பட்டு இருந்தனர். ஆனால், பசியின்றி, மகிழ்வுடன், இருந்தனர். இதனை கண்டு மிகவும் ஆச்சரியப் பட்டு மறைந்திருந்து அவர்களது நடவடிக்கையை கணிக்கிறான். மீண்டும் உணவருந்தும் வேளை வருகிறது. கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையிலேயே ஒருவர் உணவினை எடுத்து மற்றவருக்கு ஊட்டி விடுகிறார். பிறகு உணவருந்தி யவர் அதனையே திருப்பிச் செய்கிறார். அனை வரும் ஆனந்தமாக உண்டு மகிழ்கின்றனர்.

இதிலிருந்து அவர்கள் தங்களைப் பற்றி மட்டும் சுயநலமாக சிந்திக்கவில்லை நாம் பிறருக்கு உதவி அவர்கள் பசியைப் போக்கினால், நமது பசி தீர வழி பிறக்கும் என்று சிந்தித்தார்கள்.

உங்கள் இலட்சியக் கனவை படிப்படியாக நடைமுறைப்படுத்துதலே வெற்றியாகும் – இனிவரும் மாதங்களில் பார்ப்போம்.

மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு மெய்ப்பட வேண்டும்.

வாருங்கள்! இணைந்து முன்னேறலாம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்